ஹலோ ஒரு நிமிடம்…

சகிப்புத் தன்மை அதிகமாகி விட்டால் அந்த சமூகம் சகிப்புத்தன்மை அறவே இல்லாத ஒரு சமூகத்தினரால் அழிக்கப்படும். சகிப்பு தன்மை கொண்ட சமூகம் தேவை என்றால், சகிப்புத் தன்மையற்ற செயல்பாடுகளை சிறிதளவும் பொறுத்து போக கூடாது என்று கார்ல் பாப்பர் என்பவர் 1945களில் கூறி உள்ளார்.

ஏன் இன்றைய நவீன உலகம் சகிப்புத் தன்மை அற்ற இஸ்லாமிய சிந்தனைகளை மற்ற மதங்களை போல பண்படுத்த முயல்வது இல்லை?

ஏன் இன்றைய நவநாகரீக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அறிவியலை கொண்டாடும் வேளையில் தங்களது கிறிஸ்த்துவ மதத்தினை பிற வளரும் நாடுகளில் திணிப்பதை ஏன் நவீன உலகம் பொறுத்து போகிறது??

மேற்கத்திய நாடுகளின் ‘‘மதசார்பற்ற அரசு’’ எனும் நச்சு விதை தான் இன்று உலகத்தின் உயிர் கொல்லியாக வளாந்து விரிந்து நிற்கிறது எனலாம்.

சர்ச்சுகளின் ஆதிக்கம் இல்லாமல் அரசு இயங்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்றைய காலகட்டத்தில் அனைத்து மதங்களையும் அரசு ஒரே சீராக அரவணைக்க வேண்டும் அல்லது ஒதுக்க வேண்டும் என்றே மதச் சார்பின்மை புரிந்து கொள்ளப்படுகிறது.

இங்கு தான் நமது பாரதம் போன்ற நாடுகள் தடுமாறி, இந்திரகாந்தி தன்னிச்சையாக ‘அவசர கால சட்டத்தின்’ மூலமாக செக்குயிலர் அதாவது மதசார்பற்ற அரசு என்ற நச்சு விதையை நம நாட்டில் விதைத்தார்.

உலகமே ஒரு குடும்பம், அன்பே சிவம் எனும் தர்மத்தின் படி வாழும் இந்துக்களும் அதன் பிரிவுகளான புத்த, ஜைன, ஸோராஸ்டிரகனியம், சீக்கியம் மற்றும் யூத, பார்சி போன்ற மதங்களும், என் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள்… மற்ற கடவுளை வணங்கினால் கொடூர மரணம் என்ற கொள்கையோடு கடந்த 1000 ஆண்டுகளாக பாரதத்தை அடிமை படுத்தி கொடுங்கோல் ஆட்சி புரிந்த கிறிஸ்துவ ஆங்கிலேயரும், இஸ்லாமியரும் எப்படி ஒன்றாகும்??

இந்து மதத்திற்கும் பிற இந்து பிரிவு மதங்களுக்கும் மதமாற்றம் எனும் சிந்தனையே இல்லாதது…
ஆனால் கத்தியால் மதமாற்றம் என்பதனையே கொண்டுள்ள ஆபிரகாமிய மதங்களை எப்படி ஒரே தட்டில் வைக்க இயலும்??

சல்மான் ரஷ்தி எனும் முற்போக்கு சிந்தனையாளர், இஸ்லாமிய எழுத்தாளர் ‘‘தி சாட்டானிக் வெர்ஸஸ்’’ என்று குராணை பற்றிய ஒரு கவிதை நடை புத்தகத்தை எழுதினார்.

இஸ்லாமிய உலகமே கொதித்து எழுந்தது. 1989ம் ஆண்டு, வேலண்டைன்ஸ்டே அன்று ஈரானின் அன்றைய மதகுரு அயோத்தில்லா கோமேனி சல்மான் ரஷ்தியின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று ஃபாத்வா ’ அறிவித்தார்.

அமெரிக்க அரசு பாதுகாப்பும், குடியுரிமையும் வழங்கி வருகிறது.

33 வருடங்கள் 6 மாதம் கழித்து சில வாரங்களுக்கு முன்னர் 24 வயதே ஆன ஹதிமட்டார் நியுயார்க்கில் ஒரு விழாவில் பேச இருந்த சலமான் ரஷ்தியை வெறி கொண்டு சுமார் 15 முறை கத்தியால் குத்தியதில் இன்று சலமான் ரஷ்தி உயிருக்கு போராடி வருகிறார்.

லெபனான் நாட்டு பெற்றோர்களுக்கு பிறந்த ஹதிமட்டார் ஏதோ சவுதி அரேபியாவில் வளரவில்லை… கலிபோர்னியாவில் தான் வளர்ந்தார். அவர் பிறப்பதற்கு முன்னரே பிறப்பிக்கப்பட்ட இந்த ஃபாத்வாவை செய்து முடிக்கும் இந்த மத தீவீரவாதம் எப்படி போதிக்கப்பட்டது. என்பதே நம்மை சிந்திக்க வைக்கிறது.

உலகின் பல அரசுகளை, அதன் சட்ட திட்டங்களை மீறி மனித நேயத்தை, கண்ணியத்தை, உரிமைகளை மீறி தான் இன்று இஸ்லாமிய அடிப்படை தீவீரவாதம் செயல்படுகிறது.

பின் எப்படி ஒரு அரசு அனைத்து மதங்களும் சமம், என்று சொல்ல முடியும்?? அது பிற மதங்களுக்கு செய்யும் அநீதி அல்லவா?? மனித இனத்திற்கு செய்யும் துரோகம் அல்லவா??

உலக சமுதாயம் மதம் எனும் கட்டுபாட்டால் பண்படவே செய்யும்! அனைத்து மதங்களும் பல்வேறு கால கட்டத்தில் புதிய முற்போக்கு சிந்தனையாளர்களால், சீர்திருத்தவாதிகளால் தேவையான மாற்றங்களை ஏற்று மக்களை பண்பட்டு வாழவே உதவி வருகிறது.

கிறிஸ்துவ மதத்தின் முதல் ஏற்பாட்டில் பல கொடும் குறிப்புகள் அகற்றப்பட்டு, இன்றைய வாழ்கைக்கு ஏற்ற வகையில் இரண்டாம் ஏற்பாடு கொண்டு வரப்பட்டது.

புத்தர், மகாவீர், குருநானக், ஸ்வாமி விவேகானந்தா, ராம்மோகன் ராய் தயானந்த சரஸ்வதி, போன்ற ஆன்மீக சிந்தனையாளர்கள் இந்து மதத்தின் சில வழக்கங்களை காலத்திற்கேற்றவாறு சீர்திருத்தினர்…

ஆனால் இஸ்லாமிய மதத்தில் ஏனோ இந்த மாற்றங்கள் இன்னும் ஏற்படவில்லை… 6ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட தீர்ப்புகளை இன்றளவு இம்மி பிசகாமல் நிறைவேற்றி வரும் இந்த சமூகத்தினரை ஏன் ஜன நாயக நாடுகள் மற்றும் ஊடகங்கள் பொத்தி பாதுகாக்கின்றனர்??

இதனால் தான் அந்த சமூகத்தில் மாற்றம் கொண்டு வரத்துடிக்கும் சிந்தனையாளர்களுக்கு வலு இல்லாமல் போகிறதா–??

சீர்திருத்தவாதிகளின் கதி மிக அபாயகரமானது என்பதை நாம் பலநூறு முறை பார்த்து விட்டோம்…

மற்றவர்களது கருத்து சுதந்திரத்தை, மதிக்காத ஒரு சமூகம் எவ்வாறு சுதந்திரத்தினை உயிர் மூச்சாக கொண்டு செயல்படும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகளில் முழு சுதந்திரத்துடன் வாழ முடிகிறது?? இது எப்படி நியாயமாகும்??

எண்ணெய் வளத்தால் பண வளம் இருந்தாலும் இன்றும் பல கோடி இஸ்லாமிய மக்கள் ஏழ்மையில், போதிய கல்வி இல்லாமல் தான் வாழ்கின்றனர். தீராத போரால் அகதிகளாய் சேரும் மக்கள் கூட்டம் பரிதாபமாக பார்க்க இருந்தாலும் பின்னாளில் அடைக்கலம் கொடுத்த நாடுகளுக்கு குடைச்சல் தருவார்கள் என்பது நிஜம். ஏனென்றால் அவர்களுக்கு போதிக்கப்படுவது அந்நாளைய தீர்வைகள் தான்.

கம்யூனிஸத்தின் பலம் மீடியாவிலும் கல்வி துறையிலும்ஒங்கி இருப்பதால் மட்டுமே இன்னும் மக்களுக்கு பல அடிப்படை உண்மைகள் கூட தெரிவதில்லை. இது மாற்றத்திற்கான நேரம் என்பதை நித்தம் ரத்ததால் நினையும் பூமி நமக்கு உணர்த்தி வருகிறது.

நூபூர் சர்மாவின் உண்மை பேச்சை உச்சநீதிமன்ற நீதிபதி ‘‘பொறுப்பற்ற பேச்சால் நாடே கலவரமாகியுள்ளது’’ ஆனால் உண்மை என்ன??

2021ம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 54 நாடுகளில் நடந்த சுமார் 2272 தீவீரவாத தாக்குதல்களில் 11200 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 9 ஆயிரம் பேர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

இஸ்லாமிய மத புத்தகத்தில் உள்ளதை எடுத்துக் கூறிய நூபூர்சர்மாவிற்கு ஃபாத்வா கொடுத்துள்ள இஸ்லாமிய மத குருவும், இன்றளவு அதனை கண்டிக்காத பெரும்பான்மை இஸ்லாமிய அமைப்புகளும் எப்போது உலக அமைதிக்கு ஒத்துழைக்கப் போகிறார்கள்.

இஸ்லாமிய அடிப்படை வாதசிந்தனைகளை விடுத்து சீர்திருத்த சிந்தனைகளை கொண்டவர்களை அனுமதித்தால் மட்டுமே இஸ்லாம் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது தான் உண்மை.

உயிருக்கு போராடி கொண்டிருக்கும் ரஷ்தி உயிர் பிழைத்தாலும் ஒரு கண்பார்வை போகலாம், கணையம் கடுமையாக பாதிக்கபடலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இனியும் தீவிரவாத இஸ்லாம் வளர மேலை நாடுகள் முழு மூச்சுடன் முயற்சி செய்யாவிட்டால் உலக நிம்மதியும், வளமும் போவது நிச்சயம்..

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்