ஹலோ ஒரு நிமிடம்…

சதுரங்க வேட்டைனு ஒரு படம் நம்ம எல்லாரும் பாத்திருப்போம், படத்துல சொல்ற முக்கியமான கருத்து என்னன்னா? இல்லாத மார்க்கெட்ட ஒரு பொருளுக்கு உண்டாக்கி அத ஒரு ஏமாந்தவன் தலைல கட்டி லாபம் பாக்கறதுதான்.

மண்புழுபாம்பு, இரிடியம்னு ஆரம்பிச்சு கருப்புப் பூனை, கருப்புமஞ்சள்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்குது, இவனுங்க கோடிக்கணக்குல விலை இருக்குன்னு கௌப்பிவிட்டிருக்கற பொருள்லாம் இவன்கிட்டயே இருக்கும் அதை ஒரு ஏமாந்தவன் தலைல கட்றதுதான் முக்கியமான நோக்கம், 10 கோடிக்கு போகும் உங்களுக்காக 10 லட்சத்துக்குத் தர்றேன்னு சொல்லுவானுங்க அதையும் நம்பி எவனாவது வந்தான்னா தலைல கட்டிட்டு ஓடிடுவானுங்க, 10 கோடி பொருள இவனே விக்காம ஏன் நமக்கு 10 லட்சத்துக்குத் தரனும்னும்னு கூட யோசிக்க மாட்டானுங்க ஏமாந்து நிப்பானுங்க!

எவனாவது ஒருத்தன் ஒரு லிட்டர் கொசு மூத்திரம் ஒரு கோடிக்கு போகும்னு சொன்னா கூட கொசுவுக்குப் பின்னாடி பாத்திரத்தோட சுத்த ஆரம்பிச்சிடுவானுங்க.

இதுல ஏமாத்தற கூட்டம் ஒன்னு, ஏமாந்துபோற கூட்டம் ஒன்னு எப்பவுமே இருக்கும். இந்தப்படம் வந்ததுக்கப்பறம் இதுமாதிரியான ஸ்கேம்களுக்கு ‘சதுரங்கவேட்டை’னே பேர் வெச்சிட்டாங்க.

இந்தப்படத்துல ஒரு புகழ்பெற்ற வசனம் வரும் அதாவது “ஒருத்தன ஏமாத்துனம்னா, அவனோட ஆசையத் தூண்டனும்“, இதத்தான் திமுக அரை நூற்றாண்டா இங்க செஞ்சிகிட்டு இருக்கு.*

ஆனா அவங்க இத ரெண்டு விதமா செய்யறாங்க, ஆசையத் தூண்டி ஏமாத்தறது ஒருவகை அது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் அதுதான் அவங்களோட தேர்தல் அறிக்கை.

அடுத்ததா, ஒருத்தன ஏமாத்துனம்னா, அவன நம்பவைக்கனும்! அதாவது இல்லாத விஷயத்தை திரும்பத் திரும்பப் பேசி நம்ப வைக்கறது, இல்லைனா தானே ஒரு பிரச்சினைய உருவாக்கி வெச்சுட்டு அதத் தீர்க்கப்போறேன்னு சவடால் விடறது.

இன்னும் எளிமையா உங்களுக்குச் சொல்லனும்னா, காவேரி, கச்சத்தீவு பிரச்சினைகள உருவாக்கினதே கருணாநிதிதான், ஒன்னு காவேரி நதிநீர் ஒப்பந்தத்த புதுப்பிக்காம அத பிரச்சினையா மாத்தி அரை நூற்றாண்டு அரசியல் செஞ்சது,

ரெண்டாவது கச்சத்தீவ தெரிஞ்சே தாரை வாத்துட்டு மீட்கப்போறேன்னு அரசியல் பண்ணினது,

ஸ்டெர்லைட்டும் இதேமாதிரிதான் திறந்து வெச்சது கருணாநிதி, போராடி மூடினது ஸ்டாலின்.

அடுத்தது, இல்லாத விஷயத்தை, இல்ல பத்துக்காசு பிரயோஜனம் இல்லாத விஷயத்தை அதுதான் இப்ப உலகத்துலயே முக்கியமான பிரச்சினை மாதிரி உருவகம் செஞ்சு, மக்களோட உணர்ச்சியத் தூண்டி, மண்டையக்கழுவி அரசியல் பண்றது.

திராவிடம், ஹிந்தி எதிர்ப்பு தமிழ் இதெல்லாம் இந்தக் கேட்டகிரிதான்.

ஆரியம் -திராவிடம்லாம் கால்டுவெல் மாதிரி பாதிரிங்க மக்களக் குழப்பி மதம்மாத்தறதுக்காகக் கிளப்பிவிட்ட கட்டுக்கதைன்னு ஒருசிலர் சொல்றாங்க!! திராவிடம்றது தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உட்பட்ட மாநிலங்கள் இருக்கும் நிலப்பகுதின்னு சிலர் சொல்றாங்க! எதுவேணும்னாலும் உண்மையா இருக்கட்டும் இப்ப திராவிடம், திராவிடன், திராவிடமாடல்னு உருட்டறதால ஒரு சுக்கும் பிரயோஜனம் இல்லைங்கிறது எல்லோருக்கும் புரியறது இல்லையா

அடுத்து ஹிந்தித் திணிப்பு! இதுவும் அதேதான்! எவன் எந்த மொழியப்படிச்சா இவனுங்களுக்கென்ன?, காசுவாங்கிகிட்டு இவனுங்க ஸ்கூல்ல அததான கத்துத்தர்றாங்க, அப்பறம் அதப்பத்தி பேச இவனுங்களுக்கு என்ன அருகதை இருக்கு? எல்லாருக்கும் தெரியும் *ஆனாலும் பேசிகிட்டே இருப்பாங்க இதுதான் உண்மையான சதுரங்கவேட்டை.

நாட்ல எவ்வளவோ பிரச்சினை இருக்கு, டாஸ்மாக்கால தினமும் 10 கொலை நடக்குது, மழை பேஞ்சா வெள்ளம் வருது, மழை பேயலன்னா வறட்சி வருது, இன்னும் பல ஊர்கள்ல மக்கள் டாய்லெட் இல்லாம ரோட்டோரத்துல போய்கிட்டு இருக்காங்க, இதுமாதிரி பேச, சரி செய்ய ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்போது எதுக்கு ஓயாம வெட்டிப் பேச்சா பேசிகிட்டு இருக்காங்கன்னு யாராவது யோசிச்சிருக்கீங்களா?

இதுதான் சதுரங்கவேட்டை, அதேதான் திராவிடமாடல்.

புரிஞ்சிக்கோங்க மக்களே.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்