ஹலோ ஒரு நிமிடம்…

கச்சத்தீவு தொடர்பாக மோடி அரசு இறுதி முடிவுக்கு வந்துவிட்டது. இது அரசியலுக்காகவோ வோட்டுக்காகவோ அல்ல, நாட்டின் மாபெரும் நலனுக்காக என இறங்கிவிட்டார்.

கச்சத்தீவில் பிரதான சிக்கல் மீன்பிடித்தல் அல்ல, கடத்தல்.
அது அக்காலத்தில் இருந்தே பிரதானம், நம்புகின்றீர்களோ, இல்லையோ இந்த கடத்தல் கும்பல்தான் இலங்கை தமிழர் போராட்டத்தில் நாயகன் கமலஹாசன் போல் இறங்கி தங்களுக்கு தடையாக இருந்த இலங்கை காவல் நிலையம், ராணுவம் என தாக்கி எல்லா அழிவும் நடந்தது!
சுதந்திரபோராட்டம் ஒரு தாதா கும்பலின் போராட்டமாக முடிந்தது. இப்படித்தான்.

ராஜிவ்காந்தி கொலையில் அந்த சிவராசன் கடத்தல் தங்கத்தோடு வேதாரண்யம் வந்தான் என்ற ஒரு புள்ளியிலே எல்லாமும் விளங்கிவிடும்.

இந்த கடத்தல் விவகாரம் புலிகள் காலத்துக்கு பின் அதிகரித்தது. அவர்கள் இருந்தவரை ஒரே ஒரு நல்ல விஷயம் செய்தார்கள். அது தங்க கடத்தலை அனுமதித்தார்களே தவிர போதை பொருளை அவர்கள் பக்கமும் அனுமதிக்க வில்லை. இந்தியாவுக்கு கடத்த முயலவுமில்லை.

நீங்களே கவனித்தால் தெரியும், அது கடிநாய் என்றாலும் காவல்நாய் என்பதுபோல அந்த இயக்கம் இருந்தவரை பெரும்போதை வழக்கம் இலங்கையின் வடபக்கமும் இல்லை. தமிழகத்திலும் இல்லை.

அவர்கள் வீழ்ந்தபின் அந்த நிலை மாறிற்று, கண்டவனும் கடத்த ஆரம்பித்தான். 2009க்கு பின்பே இப்படி மாபெரும் போதை கடத்தலை தமிழகம் கண்டது.

வட இலங்கை நிலை சொல்ல முடியா அளவு போதையில் சீரழிந்து கிடக்கின்றது. அதைகாட்டி செய்யப்படும் மதமாற்றம் அமோகம்.

மோடி அரசு இதைத்தான் மிக கடுமையாக கருதுகின்றது. இந்த கடத்தலை தடுக்க கச்சத்தீவினை மீட்காமல் முடியாது.

கச்சத்தீவில் ஆளில்லா எலக்ரானிக்ஸ் உளவுகருவிகளை நிறுவும் திட்டம் இந்தியாவுக்கு இருக்கலாம். இல்லை காவல் சாலைகள், ராணுவ சாலைகள் அமைக்கும் திட்டம் இருக்கலாம்.

இந்தியாவின் பிடி இலங்கையில் மேலோங்கி உள்ளது. ராமேஸ்வரம் தலைமன்னார் கடல் பாலம் முதல் பல பேசப் படுகின்றன.

கச்சதீவு விவகாரம் சில நாட்களாக பரபரப்பாகும் நிலையில் இலங்கையில் மகா அமைதி. காரணம் அவர்களே ஒரு முடிவுக்கு வர இணங்கிவிட்டார்கள்.

சுமார் 99 வருட குத்தகையில் இந்தியா அதை எடுக்கலாம்.

இதை ஓசைப்படாமல் செய்ய முடியும் என்றாலும் அப்படி எடுத்தால் இது அய்யா கலைஞர் கனவு, அய்யா முரசொலியில் தீர்மானம் போட்டார், அய்யா கச்சதீவு பற்றி கவிதைபாடினார் உறங்காமல் ஆடினார் என கிளம்புவார்கள் என்பதால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ், திமுக செய்த துரோகத்தை உலகறிய செய்துவிட்டு பின் கச்சதீவில் கால் வைப்பது என இந்தியா முடிவெடுத்ததை அவதானிக்க முடிகின்றது.

இல்லையேல் அண்ணாமலை, மோடி, அதி உச்சமாக ஜெய்சங்கரெல்லாம் களமிறங்க வாய்ப்பில்லை.

ஜெய்சங்கரின் மொழி உலக அளவில் இந்தியாவின் நிலைப்பாடு என்பதால் விவகாரம் உலக கவனத்தை பெற்றுவிட்டது.

ஜெய்சங்கர் மிக தெளிவாக சொல்கின்றார், நேரு ஆரம்பம் முதலே கச்சத்தீவை விலக்கித்தான் வைத்தார்! அதிலும் கடத்தல் மையம் என்றவுடன் ஒதுக்கியே விட்டார்.

1974ல் கச்சதீவு இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு கைமாறிய போது இந்திய மீனவர்கள் அங்கே வலை உலர்த்த தங்க அனுமதி இருந்தது.

இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால்
யாருக்கும் தெரியாமல் 1976ல் இந்திரா அந்த ஒப்பந்தத்தை திருத்தி தமிழக மீனவர்களுக்கு அங்கு உரிமை இல்லை என்பதை ஒப்புகொண்டார் என்பது.

இதுதான் பெரும் அதிர்ச்சி…..

இது சாதாரணம் அல்ல, சுமார் 50 வருடமாக ராமேஸ்வர மீனவர்களுக்கு எவ்வளவு பெரிய துரோகம்? தமிழக மக்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி? நடந்திருக்கின்றது!

காங்கிரஸ் அந்த ஒப்பந்தத்தை திருத்தியதை மறைத்து விட்டது.

ஆனால் மிசா வீரர்கள், மிசாவிலே அடிவாங்கி எமர்ஜென்ஸி யினை எதிர்த்தவர்கள் என கண்காட்சி யெல்லாம் வைக்கும் திமுகவோ அதிமுகவோ இதை ஏன் கண்டுகொள்ளவில்லை???

காங்கிரசோடு சுமார் 25 ஆண்டுகாலம் அரசியல் கூட்டணி வைத்திருக்கும் திமுக, 18 வருடம் மத்தியில் இருந்த திமுக இதை ஏன் மறைத்தது??

ஆக காங்கிரஸ், திமுக என இருவரும் இணைந்து மிகபெரிய துரோகத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

அங்கே செத்த சுமார் 800 மீனவர்களுக்கும் அவர்கள் இழந்த பொருளுக்கும் வாழ்வுக்கும் திமுக காங்கிரசின் சதி காரணம் என்பது போல் பிரச்சினை செல்கின்றது.

ஏன் இப்படி செய்தார்கள்? அப்படியானால் அந்த கடத்தலுக்கு இவர்கள் துணைபோனார்களா? என்பது இனிதான் தெரியும். ஆனால் டெல்லி சொல்லும் கோணம் அதுதான்.

இது சாதாரணமாக முடிவது போல் தெரியவில்லை.

தொடர்ந்து போதை பொருள் கடத்தல்கள், ஜாபர்சாதிக் கைது , ஆளுநரின் டெல்லி பயணம், போதை பொருளுக்கு எதிராக மோடி சொன்ன சவால் என எல்லாம் வந்தபின்பே இப்போது கச்சதீவு பிரச்சினையும் காங்கிரஸ் திமுக பெயரும் வருகின்றது என்றால் எங்கோ எதுவோ பெரிய முடிவாக எடுக்கபட்டு விட்டது.

இது கச்சத்தீவு மீட்போடுதான் முடியும் என தெரிகின்றது. ஆனால் அந்த கடற்கரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்குமா? இல்லை பெரிய காரணங்களை சொல்லி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிலோ இல்லை ராணுவத்திடமோ இருக்குமா? என்பது இனிதான் தெரியும்.

இரண்டவது சொன்ன ஒன்றில் நடக்க வாய்ப்பிருக்கின்றது. அதற்கு முன் திமுக காங்கிரஸின் முகமூடி கிழியப் போகின்றது, என்பது நிச்சயம்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்