ஹலோ ஒரு நிமிடம்…

உலக வரலாற்றில் முதல் முறையாக, 2024 ஜனவரி திங்கள் 22ந் தேதி ஸ்ரீராமரின் அயோத்தி வருகையும், ராம் லல்லாவின் ப்ராண ப்ரதிஷ்டையும், முன்னின்று நடத்தி முடித்த பாரத பிரதமர் மோடியின் சிரத்தையும், உலகெங்கும் வாழும் 100 கோடி இந்துக்களின் ஜெய் ஸ்ரீராம் எனும் தொடர் மந்திரமும் ஒரு புதிய உற்சாகத்தை, எழுச்சியை உண்டு பண்ணியுள்ளது.

சுமார் 500 வருட போராட்டத்திற்குப் பின்னர் ஸ்ரீராமரின் பிறந்த இடமான அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான கோயில் மீண்டு எழுந்துள்ளது என்பதை உலக மக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடனும் உவகையுடனும் ஒரு வித நம்பிக்கையோடும் வரவேற்றுள்ளனர்.

இஸ்லாமிய, கிறிஸ்துவ கொடுங்கோலர்களின் சுமார் 2000 ஆண்டுகள் ஆட்சியில் உலகின் பல பெரும் கலாசாரங்கள், அந்த மண்ணின் மதங்கள், வழிபாடுகள் என அனைத்தும் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டன.

ரோமானிய கிரேக்க கலாசாரம், மாயன், இன்கா, அசூர் கலாசாரங்கள், பெர்ஷியா,ஆப்பிரிக்கா கலாசாரங்கள் மங்கோல் கலாசாரம் என இந்த இரு பாலைவன மதங்கள் அனைத்து இடங்களுக்கும் படையெடுத்து அந்த மண்ணின் மைந்தர்களை கொன்று குவித்து அவர்களின் கலைச் செல்வங்களை, நம்பிக்கை துருவங்களை, அவர்களின் கடவுளர்களையும், நம்பிக்கைகளையும் அந்த தெய்வங்களின் கோயில்களையும் அங்கு உள்ள குருமார்களையும் அடித்து நொறுக்கினர்.

பாரதம் கூட சுமார் 800 ஆண்டுகள் அடிமைபட்டே கிடந்தது.

இந்து மதத்தை அழிக்க அன்றிலிருந்து இன்று வரை பணம், விஷ ஊடகங்கள், அரசியல் வியாபாரிகள் என பலவிதமான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

என்றென்றும் உள்ள சனாதன தர்மம் இந்துக்களின் மனதில் பிரும்மாண்ட பூஜையறையை கட்டி சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு தான் இருந்தது.

யுக புருஷராக நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவதரித்து 2000 வருட கொடுங்கோல் ஆட்சிக்கு மணி அடித்து விட்டார்.

இந்து மத எழுச்சி தொடங்கி விட்டது என்பதை விட இந்து மக்கள் தங்கள் அடையாளத்தை பெற்று பெருமை அடைந்து விட்டார்கள்.

வாடிகனில் உள்ள சூரியனார் கோயில் தேசிய சர்ச்சாக மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் அது சூரியனார் கோயிலாக மாறும் காலம் வரும்.

ஒவ்வொரு அழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மறைக்கப்பட்ட கலாசாரங்கள் தங்கள் சுய அடையாளத்தை தேடி வரும் இந்த வேளையில் அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் பெரும் விழிப்புணர்வையும், எதிர்பார்ப்பையும் உலக மக்களுக்கு கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. ராம நாம மகிமையை இனி உலகம் அறிய போகும் தருணம் இது….

புதிய பாரதம் பிறந்து விட்டது. எழுச்சி கொண்ட இந்து சமுதாயம் தனது பாரம்பரியத்தை கம்பீரத்துடன் வரவேற்க தயாராகி வெளி வந்துவிட்டது.

ஜெய் ஸ்ரீராம்…

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்