ஹலோ ஒரு நிமிடம்…

நல்ல மனம் கொண்ட மனிதர் விஜய்காந்த் இறந்தது தமிழக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பி உள்ளது. வடிவேலு வராமல் இருந்தது ஒரு பக்கம் என்றால், வந்த தளபதி விஜய் மேல் செருப்பு வீசப்பட்டது முக்கியமான மறுபக்கம்.

எய்தவன் இருக்க அம்பை நொந்த கதை வடிவேலுவின் கதை. தூண்டிவிட்டு, தீனிபோட்டு களத்தில் இறக்கிவிட்ட திமுகவினர், குறிப்பாக கோபாலபுர எஜமானர்கள் தங்களை நல்லவர்களாக இல்லாவிட்டாலும், பாவிகளாக மக்கள் கை காட்டாமல் பார்த்துக் கொண்டார்கள்! பாவம் வடிவேலு!

ஆனால் அடுத்த முதல்வர் பதவியை அடைய ஆசைப்படும் விஜய் தன்னை ரசிகர்களின் முன் மீண்டும் ஒரு தளபதியாக, மனிதநேய மிக்க தர்மத்தின் தலைவனாக நிலை நிறுத்திக் கொள்ள பாடுபடத்தான் வேண்டும்.

அவரது தந்தையார் இப்போதே ஒரு நாடகத்தை அரங்கேற்றி விட்டார். தாய் மதம் திரும்பி, உணர்ச்சி பெருக்கோடு பேசி மகனுக்கு ஒட்டு வாங்க ரோடு போட்டு கொடுத்துள்ளார்.

மீடியாக்கள் அன்றும் இன்றும் என்றும் துரோகத்தையும் சுய லாபத்தையும் மட்டுமே கணக்கு பண்ணி பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நல்ல உள்ளத்தை, சாதித்து காட்டிய சரித்திர நாயகனை, அள்ளிக் கொடுத்த வள்ளலை, பிறர் கஷ்டங்களை தன் கஷ்டங்களாக உணர்ந்த அந்த உன்னத மனதை எவ்வளவு நோகடித்திருப்பார்கள் இந்த ஊடகவாதிகள்.

அவரை ஒரு குடிகாரனாக, நிதானம் இழந்தவராக, முடிவு எடுக்க முடியாதவராக மக்கள் மனதில் பதிய வைத்த பெருமை இந்த மீடியாக்களுக்கே சொந்தம்.

இன்றும் கூச்சமின்றி தங்களது டிஆர்பியை ஏற்றிக் கொள்ள கேப்டனின் உத்தம குணங்களை காட்டி வருவது கொடுமை.

7 கிலோ மீட்டர் தூர இறுதி ஊர்வலத்தில் அந்த நல்லவரின் ஆத்மா கொஞ்சம் சாந்தி ஆகட்டும். அவரது மனதின் ரணங்கள் சற்று ஆறட்டும். ஏன் என்றால் இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை… தங்கள் சொந்தத்தை இழந்து விட்டவர்களின் உண்மையான பரிதவிப்போடு கூடிய பொது ஜனம்.

பாஜக தலைவர் அண்ணாமலையை மனதார பாராட்டவேண்டும். தலைவருக்கு அஞ்சலி செலுத்த வரும் லட்சக் கணக்கான மக்களுக்கு கட்சி அலுவலகமா?? என்று சீறி, ராஜாஜி மண்டபத்தை கேட்க, மாட்டிக் கொண்ட திமுக அரசு வேறு வழியின்றி தீவு திடலை கொடுத்தது.

தமிழக மக்கள் இனியாவது இந்த திராவிட மீடியா மாய வலையிலிருந்து மீள வேண்டும். இன்று வானம் திறந்து விட்டது. இணையதளத்தில் எல்லா உண்மைகளும் கிடைக்கும். தேடிப்பாருங்கள். நல்ல மனிதரை மிகவும் காயப்படுத்தி விட்டோம்.

நம் கணக்கு தவறாக இருக்கலாம். ஆனால் சித்திர குப்தனின் கணக்கு மிகச் சரியாக இருக்கும். நமது அன்பு சகோதரர் கேப்டன் விஜய்காந்த் சொர்க்கத்தில் இருந்து நம்மை என்றும் ஆசீர்வதிப்பார்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்