ஹலோ ஒரு நிமிடம்…

இஸ்ரேல் நாடு ஹமாஸ் எனும் இஸ்லாமிய தீவீரவாத இயக்கத்தினரை பாலஸ்தீனத்திலிருந்து ஒழித்துக் கட்டி விடுவார்களா என்று பாலஸ்தீன அதிபர் காத்துக் கொண்டிருக்கிறார்.

அரேபிய நாட்டு மக்கள் சொகுசான வாழ்விற்கும், வளத்திற்கும் பழகி விட்ட பின் இந்த தீவீரவாதிகள் எங்கே தங்களையும் இந்த காட்டுமிராண்டி செயல்களால் மீண்டும் கற்காலத்திற்கு இழுத்துச் சென்று விடுவார்களோ என்று வெளிப்படையாக அதிகம் சொல்லா விட்டாலும் இஸ்ரேல் வெற்றி பெற வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்..

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை தான்!!

இதே நிலை தான் இன்று மேலை நாடுகளின் நிலையும்! அமெரிக்கா 6 மில்லியன் டாலர்களை ஈரானுக்கு அள்ளிக் கொடுக்க ஈரான் 2 மில்லியனை பாலஸ்தீனுக்கு தாரை வார்க்க, அங்கிருக்கும் மக்களுக்கு கல்வி மருத்துவம் தர வேண்டிய அரசு, ஹமாஸ் இயக்கத்தினரின் சுரங்கங்களை அமைப்பதிலும், போர் கருவிகளுக்கும் செலவழித்தது.

ஐரோப்பா முழுவதும் கொலை, கொள்ளை கற்பழிப்பு என அகதிகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது ஒவ்வொரு நாளும்.

இன்று உலகமே இரண்டாகி நிற்கிறது.. ஒன்று இஸ்லாமிய உலகம்.. சமரசமே இல்லை எனும் ஓர்பேரியக்கம்..

மற்றொன்று ஜனநாயகத்தில் ஒன்றிணைந்து முன்னேற்றம் அடையவும் வளமான வாழ்வை எதிர்நோக்கும் பல கோடி மக்கள்..

ஹமாஸ் ஒழிந்தாலும் இந்த சித்தாந்தம் ஒழியாது.. என்பது தான் நிஜம்.

ஹமாஸ் போல இன்று அரேபிய நாடுகளின் மத பற்று உதவியாலும், மேற்கத்திய நாடுகள் சிந்திக்காமல் செய்து வரும் உதவியாலும் சுமார் 60 இஸ்லாமிய தீவீரவாத குழுக்கள் உலகம் முழுக்க பரவி உள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒர் இலக்கு உண்டு! ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேலில் வாழும் யுதர்களை ஒழிப்பதும், இஸ்ரேல் எனும் நாடே இருக்க கூடாதென்பதும் இலக்கு.
அதே போல காஸ்மீரில் உள்ள லக்ஷர் இதொய்பா போன்ற இஸ்லாமிய தீவீரவாத குழுக்களுக்கு, இந்துக்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே இலக்கு…

ஒவ்வொரு குழுவிற்கும் உள்ள அந்த கொள்கையை, தலைவர்கள் மாறிகொண்டிருந்தாலும், மதராசாக்களில் தீவீரவாதத்தை விதைத்து நெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தீவீரவாத போதனையை அறவே தடுக்கும் வரை இந்த கொடூரங்கள் குறையாது! மறையாது…

உலக நாடுகள் ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டிய தருணம் இது!! மனிதமா? மூர்க்க மதமா??
இந்த கேள்வியை பைபிள் எதிர் கொண்டது.

மதவாதத்தை விடவில்லை. ஆனால் தீவீரவாதத்தை கைவிட்டது. இன்று உலகளவில் ஆகப்பெரிய மத சக்தியாக கிறிஸ்துவம் உள்ளது.

இஸ்லாமிய மத குருமார்களும் ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சீனா இஸ்லாமிய குருமார்களுக்கு பாடங்கள் எடுக்கிறது என்று செய்திகள் வருகின்றன.. சீனா தன்னிச்சையாக முடிவெடுத்தது தான் சரி என இன்று பல கோடி மக்கள் நினைப்பதும் உண்மை.

மாற்றத்திற்கான நேரமிது… இஸ்லாமிய மிதவாதிகளின் குரல் ஒலிக்கட்டும். உலகம் உய்யட்டும்…

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்