ஹலோ ஒரு நிமிடம்…

2001ம் ஆண்டில் நமது 16 ராணுவ வீரர்களை மிக கொடுரமாக கொன்று, விலங்கை போல கம்பில் தொங்க விட்டு ஊர்வலம் சென்ற பங்களாதேஷ் எல்லை ராணுவத்தினர் 4 நாட்களுக்கு பிறகு அரசு பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் உடல்களை அனுப்பி வைத்தனர்.

இத்தனைக்கும் நாம் செய்த உதவியால் பதவிக்கு வந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா மன்னிப்பு கூட கேட்கவில்லை. அது அந்தக் காலம்.

பிரதமர் மோடி வந்த பிறகு தான் 2015ம் ஆண்டில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் எல்லை பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டது. எல்லைகள் வரையறுக்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது புதிய பாரதம் என மார் தட்டும் மாவீரன், சத்ரபதி சிவாஜியின் வாரிசான பிரதமர் மோடியின் சாம்ராஜ்ஜியம் நடக்கிறது. உலக நாடுகள் இப்போது தெரிந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் நலனை பாதிக்கும் எந்த ஒரு செயலையும் தகர்த்தெறிவோம்! கண்டனம் தெரிவிப்பது, அந்த நாட்டின் அரசுக்கு புகார் தெரிவிப்பது எல்லாம் குள்ள நரிகள் ஆண்ட காலம்.

பாலகோட் அதிரடி நாம் மறக்க முடியாத சரித்திரம்… 47 சீக்கிய தீவீரவாதிகள் கனடாவில் பதுங்கி உள்ளனர். நாடு கடத்துங்கள் என்றால் மறுத்து விட்டது கனடா அரசு. ஏர் இந்தியா கனிஷ்கா விமான குண்டு வெடிப்பில் 329 அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட தீவீரவாதி 30 வருடங்களாக கனடாவில் இருக்கிறான் என்றால் கனடாவின் அதிபர் ட்ருடோவும் சரி, அவரது அப்பாவும் சரி அவர்களை பாதுகாத்தே வருகின்றனர்.

கனடா நாட்டு குடிமகன் ஒருவரை இந்தியா அரசின் உளவு துறை சுட்டு கொன்று விட்டது அதுவும் எங்கள் மண்ணிலேயே என்று அந்நாட்டின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ருடோ கூறியது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவீரவாதத்திற்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ள கனடா காலிஸ்தானிய தீவீரவாதிகளை பாதுகாத்து வருவது வெளிச்சமாகி விட்டது. காரசாரமான விவாதங்கள் இரு நாடுகளுக்கிடையே நடந்துக் கொண்டிருக்கும் போதே இன்னும் ஒரு காலிஸ்தான் தீவீரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட்டு வந்துள்ள அனைத்து தீவீரவாதிகளுக்கும் இனி ஒரு கலக்கம் வர தானே வேண்டும். அவர்கள் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன…

கனடா தான் ஒரு மேலை நாடு. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் ஆதரவு பெற்ற நாடு என்ற மமதையில் இந்திய தூதரை வெளியேற்றியது. இந்தியா உடனடியாக கனடா நாட்டு தூதரை வெளியேற்றியது மட்டுமில்லாமல் இனி தற்காலிகமாக அனைத்து விசா வழங்குவதையும் கனடா நாட்டினருக்கு நிறுத்தி வைத்துள்ளது. உலக நாடுகள் இதனை வாய் மூடி மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றன… அவர்கள் இந்தியா பக்கம் என்று சொல்ல வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்கள்… மோடியின் மகத்துவம் அப்படி.

நஷ்டம் கனடாவிற்கு தான் என்பதில் கனடா நாட்டிற்கே சந்தேகம் இல்லை. மொத்தம் 4 கோடி மக்கள் தொகையோடு என்ன செய்ய முடியும். கனடா ஏற்றுமதிக்கு இந்தியாவைத்தான் நம்பி இருக்கிறது. இருந்தும் அங்கும் மைனாரிட்டி அரசியல்தான்.

67 நாடுகளுக்கு லட்சக்கணக்கான கோவிட் வேக்சின் மருந்துகளை இலவசமாக அனுப்பி வைத்தது மனிதநேய மோடி அரசு!! தீவீரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் சாவு மணி அடிக்கும்.

மோடி அரசு வசுதேவ குடும்பம் எனும் பாரதத்தின் கொள்கையை சிறப்பாகவே சொல்கிறது. தாமரை மலர்ந்து கொண்டே இருக்கட்டும். நமது பாரதம் விஸ்வ குருவாக மீண்டு வரட்டும்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்