ஹலோ ஒரு நிமிடம்…

எதற்கெடுத்தாலும் மனுநீதி தெரியுமா என்றொரு கோஷ்டி கிளம்புகின்றது, யாராவது அந்த நூலை பார்த்திருக்கின்றார்களா?

அப்படியே கிடைத்தாலும் அதை வாசித்து அர்த்தம் தெரிய சமஸ்கிருதம் தெரியுமா என்றால் அதுவுமில்லை

ஆனால் ஓப்பாரி மட்டும் வரும், இதன் பெயர் பகுத்தறிவு

மனு என்றால் மனுகுலம் என பொருள், இந்த மனு எனும் வார்த்தைத்தான் ஆங்கிலத்தில் “மன்” எனவும் வந்தது

மனுகுலத்துக்கான சட்டம் என்பது பண்டைய பாரதத்தில் இருந்தது, இது பிராமணர் வகுத்த இந்து சட்டம் அல்ல, சனாதான தர்மத்தின் சட்டமும் அல்ல‌

வியாசர் எழுதிய மூன்று சூத்திரம், நான்கு வேதம், 18 புராணம் என எதனிலும் மனு வராது

எந்த இந்து ஞானியும் மனுதர்மத்தை எழுதவில்லை, மாறாக அது ஷத்திரிய அரசர்கள் பின்பற்றும் சட்டத்தை அதாவது ஆட்சிக்கானதை சொல்லும் சட்டமாக இருந்தது

அதனை ராமன் பின்பற்றினான், கண்ணன் பின்பற்றினான், அஸ்தினாபுர மன்னர்கள் பின்பற்றினார்கள், இந்திய சத்திரிய அரச மரபின் சட்டமாக இருந்தது

பெரும் அடையாளமாக தமிழக மனுநீதி சோழன் அதையே பின்பற்றினான், தவறாத நீதியினை அதில் இருந்துதான் கொடுத்தான்

ராமன் தன் மனைவியினை நெருப்பில் இறக்கியது போல தன் மகனையே தேர்காலில் இட்டு மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்ற மனுதர்ம சட்டத்தை பின்பற்றியே செய்தார்கள்

மனு ஸ்ம்ருதி என்பது அரசர்கள் பின்பற்றிய ராஜநீதியே அன்றி பிராமணர் எழுதிவைத்த சமூக நீதி அன்று

ஸ்ம்ருதி என்றால் சட்டங்களின் தொகுப்பு என பொருள், ஒவ்வொரு காலத்துக்கும் அல்லது ஒவ்வொரு பகுதிக்கும் சில சட்டங்கள் இருந்திருக்கின்றன‌

மனு என்பவர் கொடுத்த ஸ்ம்ருதி மட்டுமல்ல, நாராயண ஸ்ம்ருதி , யாக்யவல்க்ய ஸ்ம்ருதி, நாரத ஸ்ம்ருதி, காத்யாக ஸ்ம்ருதி ஏன ஏகபட்ட ஸ்ம்ருதிகள் உண்டு

மனு ஸ்ம்ருதி என்பது பழமையானது, காலம் மாற மாற ஸ்ம்ருதிகளும் மாறிகொண்டே இருந்தன‌
இந்த பகுத்தறிவு கோஷ்டி சொல்லும் “சூத்திரனுக்கு ஈயத்தை காய்ச்சி ஊற்று” என்பதெல்லாம் வடிகட்டின பொய்கள்.‌

மனு நீதி நூலின் சமஸ்கிருத பிரதியினை கண்ணாலும் பார்த்திருக்க மாட்டான், ஆனால் மனுநீதி என்றால் வெறுப்பை கக்குவான். எப்படி உருவானது என்றால் எல்லாம் வெள்ளையன் கால நரிதந்திர வேலைகள் தான்.

இந்துக்களுக்கு மன்னர்களும் தலைவர்களும் இல்லா காலத்தில் இந்தியாவினை ஆய்வு செய்ய வருகின்றேன் என ஆளாளுக்கு வந்தவர்கள் மனதில் மிஷனரி வன்மம் இருந்தது

தென்அமெரிக்க்கா உள்ளிட்ட பல நாடுகளில் கால்வைத்த 50 ஆண்டுக்குள் அதை கிறிஸ்தவபூமியாக மாற்றிய கும்பலுக்கு பாரதம் 300 வருடமாக தண்ணிகாட்டியது

கிறிஸ்துவம் தான் தனது மதத்தை கை விட்டதே தவிர இந்துமதம் அசையவில்லை.

ஆம், கிறிஸ்தவர்கள் “பூசை செய்யலாம்“ “கொடிமரம் வைக்கலாம்“ “தேர் இழுக்கலாம்“ என சலுகை செய்தார்கள், பைபிளிலோ ஐரோப்பாவிலோ இல்லா வழிபாட்டுக்கு அனுமதி கொடுத்து இந்துமரபில் கிறிஸ்தவ தெய்வங்களை கொண்டாடும்படி மண்டியிட்டார்கள்.

ஆனாலும் வெற்றி இல்லை!!

இந்நிலையில்தான் சித்தாந்த குழப்பத்தை ஏற்படுத்தினார்கள், அச்சுக்கு இந்துமத நூல்களை தருகின்றோம் என தப்பான மொழிபெயர்ப்பில் வஞ்சகம் செய்தார்கள்.

தமிழக இந்துக்கள் சமஸ்கிருதம் படிக்காமல் இருக்க “சமஸ்கிருத” வெறுப்பை திராவிட கும்பல் மூலம் ஏவிவிட்டார்கள்.

இந்துமத வேதங்களையும், புராணங்களையும் கற்றுத் தரும் குருமார்களை ஒழிக்க பாடுபாட்டான்.

இந்த பிராமணர்களும் சமஸ்கிருதமும் இன்னும் பலவும் இல்லாவிட்டால் இந்துமதம் சரியும், குழம்பிய தமிழனை மதம்மாற்றலாம் என திட்டமிட்டார்கள்.

அப்படித்தான் வில்லியம் ஜோன்ஸ் என்பவன் எத்தனையோ ஸ்ம்ருதி இருந்தபொழுதும் மனு ஸ்ம்ருதியினை மட்டும் எடுத்து தவறாக மொழி பெயர்த்தான். விஷத்தை பொய்யாக திரித்து எழுதினான். அது பின்னாளில் சிக்கலாயிற்று, வெள்ளை நீதிமன்றம் கல்கத்தாவில் 1857ம் வருடம் கூட கண்டித்து அதனை தடையும் செய்தது.

அந்த மனுஸ்ம்ருதியினைத்தான் ஒரு கும்பல் தூக்கி திரிந்து இவ்வளவு அட்டகாசத்தையும் செய்கின்றது

மனு ஸ்ம்ருதியில் சொல்லாததை தவறான மொழிபெயர்ப்பில் தூக்கி திரிவதெல்லாம் இப்படித்தான்

இந்த 18ம் நூற்றாண்டில் நடந்த குழப்பங்கள் இரண்டு! முதலாவது தமிழனை சமஸ்கிருதம் படிக்கவிடாமல் செய்தது,

இரண்டாவது தமிழை சீர்படுத்துகின்றேன் என கிளம்பியது! பழைய தமிழ் எழுத்துக்களை படிக்க விடாமல் செய்தது.

இந்த வெள்ளையன் சதியால் என்னாயிற்று என்றால் தமிழக இந்துவுக்கு சமஸ்கிருத ஸ்லோகமும் தெரியாது, சொந்த தமிழ் ஓலைசுவடியும் தெரியாது, கல்வெட்டும் படித்தால் புரியாது!!

இப்படி குழம்பிய தமிழனை மதம் மாற்றுவது எளிது, அந்த சதியில்தான் தமிழினம் வீழ்ந்தது
இந்த காலகட்டத்தில் இரு பிராமணர்களை நாம் மறக்க முடியாது, அவர்களும் இல்லையென்றால் தமிழக இந்துக்களுக்கு எதுவுமில்லை

மன்னர்கள் கட்டிய அழியா கோவிலுக்கு இணையானது இந்த பிராமணர்களின் செயல்கள்

ஆம், ஒருவர் உ.வே சாமிநாதய்யர் அவர்தான் ஓலைசுவடி தமிழை அச்சுக்கு கொண்டுவந்தார்

இன்னொருவர் கல்லிடைகுறிச்சி நீலகண்ட சாஸ்திரி, அவர் கல்வெட்டு தமிழை அச்சுக்கு கொண்டுவந்தார்

இந்த இருவரின் உழைப்பிலும் தியாகத்திலும்தான் ஓரளவு வரலாறு மீட்கபட்டு இந்துக்கள் நிலைக்க முடிகின்றது

இந்து மதத்தில் ஜாதி கொடுமை! நீ இந்து இல்லை சூத்திரன் என்று நம்மை பிரித்தாண்ட வெள்ளையன் என்ன செய்தான். மலேசியா, இலங்கை, ஆப்பிரிக்கா, ஃபிஜி என அடிமையாக்கினான்.

1967ம் ஆண்டு வரை ஆட்சிக்கே வராத திராவிடம் ஒன்றும் செய்யவில்லை. சுதந்திர இந்தியாவில் தான் உரிமைகள் கிடைத்தன. தமிழக இந்துக்களை குழப்பி இந்து மதத்தை பற்றி பொய்யான கருத்துக்கள் பரப்புவதை தடுக்கவும் நாம் செய்ய வேண்டியது இரண்டு விஷயங்கள்.

ஞான மொழியான சமஸ்கிருதம் படிக்க வேண்டும்.

பண்டை தமிழ் வடிவங்களை மீள கொண்டு வருதலும் வேண்டும். உலகம் உண்மையினை அறிந்து கொள்ளட்டும். இந்து மறுமலர்ச்சிக்கான திறவுகோல் இதுதான்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்