ஹலோ ஒரு நிமிடம்…

ராகுல் காந்தி எந்த நேரத்தில் தன்னை காஷ்மீர் கவுல் பிராமணனர், தத்தாத்ரேய கோத்ரம் என்று புஷ்கர் கோயிலில் சொல்லிக் கொண்டாரோ தெரியவில்லை… அந்த தருணம் அந்த ஆதி சங்கரர் தான் இந்த திருவிளையாடலை நடத்தி உள்ளார் போலும்.

இனி ஒரு திராவிட அடிப்பொடி என்று சொல்லிக் கொண்டோ, கலைஞன், கவிஞன், இயக்குநர், காமெடியன் என சொல்லிக் கொண்டோ பிராமணர்களை, ஒரு குறிப்பிட்ட மதத்தை, இனத்தை சமூகத்தை அவமதித்தால் நீதிமன்றம் உதவ காத்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது.

ஏன் குறிப்பாக பிராமண சமூகத்தைப் பற்றி குறிப்பிடுகிறேன் என்றால் நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும்…

மிஷிநரிகளுக்கு பிராமணர்களை பிடிக்காது… அவர்களுக்கு வேதத்தை அபகரிக்க வேண்டும்… இந்துக்களை மதம் மாற்ற வேண்டும்…

தீவீரவாதிகளுக்கு பிராமணர்களை பிடிக்காது… நமது ஆன்மீகத்தை அழிக்க வேண்டும்..
இந்த இரண்டு அந்நிய மத கைக்கூலிகளோடு, பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், இடது சாரிகள், சீர்திருத்த பகுத்தறிவுவாதிகள், காலிஸ்தானிகள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என இவர்கள் எல்லோருக்கும் முதல் எதிரி பிராமணர்கள் தான்…

வேதங்களையும் நமது கலாசார பண்பாட்டு பாடங்களையும் இந்துக்களுக்கு கற்பிக்கும் இந்த குருமார்கள் தான் பிராமணர்கள். இவர்களை பாதுகாக்க வேண்டிய ஷத்திரிய மக்களை பிரித்து சூழ்ச்சியால் விரோதியாய் காட்டி வரும் இந்த நயவஞ்சகர்களின் உண்மையான குறி நமது சனாதன தர்மம் தான்.

அண்மையில் நமது மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் பிராமணர்களை ‘பிக்பாக்கெட்டுக்கள்’ என்று கூறியுள்ளார்… கவனிக்கவும்

உச்ச நீதிமன்றத்தில் பிராமணர்களையும் கூட யூதர்களை போல கொல்ல வேண்டும் என்று கூறிய சம்பவத்தையும் மத நிந்தனையில் சேர்க்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனால் துஷார் மேத்தா ஒரு அவதூறு வழக்கின் போது கூறியதும் நீதிபதி ஜோசப் புன்னகைத்தாராம்!!! உங்களுக்கு பெரியாரை தெரியுமா என்று கேட்டராம். சரிதான்!!! என்று நாம் மனம் துவள கூடாது…

நமது சனாதன தர்மத்தில் வேதங்களும் சாஸ்திரங்களும் பயில்பவர் தான் பிராமணன் என்பதை மீண்டும் உரத்திச் சொல்வோம். பிறப்பால் வருவது அல்ல…

வேதங்களையும் புராணங்களையும் நம் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.. சனாதன தர்மம் அநாதியானது! காலங்கள் கடந்து வாழ்பவை! உலகம் முழுவதும் நமது அறம் சார்ந்த வாழ்கையும், நமது தர்மமும் பரவி வருகிறது தன்னிச்சையாக. அதுவே இந்து தர்மத்திற்கு எதிரான இந்த மறைமுக போர்களை தொடுக்க வைக்கிறது. வேதங்களை அழித்தால் கோவில்களை அழிக்கலாம்.. இந்து மதத்தினை வேரறுக்கலாம் என்று பகல் கனவில் சுற்றும் இந்த அதர்மிகளுக்கான இறுதி கட்டம் நெருங்கி விட்டது…

அதனால் தானோ என்னவோ இந்துக்களின் எதிரியான காங்கிரஸ் இளவரசன் ராகுல் காந்தியே நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி நீதிபெற வழி காட்டி உள்ளார். எல்லாம் அவன் செயல்…

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்