ஹார்வர்ட் பல்கலைக்கு யூத மாணவர்கள் கண்டனம்…

இஸ்ரேல் மீது ஹமாஸ் சமீபத்தில் நடத்திய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், மீண்டும் ஒரு புதிய போரைத் தொடங்கி இருக்கிறது. இதில் ஏற்கனவே ஒரு மாதத்தில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் எண்ணற்ற காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
சர்வதேச மோதல்களுக்கு அமைதியான முறையில் நிரந்திர தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக் காட்டுகிறது.உலக நாடுகள் ஒன்று சேர்ந்து தீவீரவாத இயக்கங்களை ஒடுக்க வேண்டிய நேரமிது.

பசி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய உலகில், இது போன்ற போர்கள் மற்றும் மோதல்கள் மகத்தான, தவிர்க்கக் கூடிய உயிர், மற்றும் நிதி இழப்புகளை ஏற்படுத்துகின்றன. இப்போரின் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது.

ஒரு நாகரிக உலகின் உறுப்பினர்களாக, இது போன்ற போர்கள் மற்றும் சச்சரவுகளை யாரும் அனுமதிக்கக் கூடாது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே வெகு காலமாக நடைபெற்று வரும் மோதல்களைத் தீர்ப்பதில் உலகம் வெற்றி பெறவில்லை. முன் எப்போதையும் விட இன்று உலகம் மிகவும் பிளவுபட்டு நிற்கிறது.

யூதர்கள் ஒரு மனித இனமாகவும், இஸ்ரேல் ஒரு தேசமாகவும் இருப்பதற்கு எதிராக சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவை கூட்டாக ளிமிசி நாடுகளை நெருக்கி ஹமாஸ் போன்ற தீவீரவாத அமைப்புகளை ஏவி விடுகின்றன.

ஹார்வர்ட் பல்கலை
யூத மாணவர்கள் கடிதம்

சுமார் 1700 ஹார்வர்ட் பல்கலையில் பயின்ற பழைய யூத மாணவர் சங்கம் தங்கள் கடிதத்தில், ஹமாஸ் எனும் இஸ்லாமிய தீவீரவாத இயக்கத்தினரின் கொடூர தாக்குதலில் அக் 7ந் தேதி அப்பாவி இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய தீவீரவாதம் என்பது மனித சமூகத்திற்கே ஒரு சவாலாக தான் இன்று உலகம் பார்க்கிறது.

ஹார்வர்ட் பல்கலை சுதந்திரம், மனித உரிமைகள் என்ற கொள்கையை நிலை நாட்டும் பொறுப்பில் இருந்தாலும், இண்டிஃபாடா எனும் கோஷத்தோடு 30 இஸ்லாமிய மாணவர் அமைப்புகள் ஹமாஸ் இயக்கத்திற்காக குரல் கொடுப்பதோடு, பல்கலையில் படிக்கும் யூத மாணவர்கள் நடமாட அஞ்சும் சூழலை உருவாக்கியுள்ளது.

இதனை ஹார்வார்ட் பல்கலை சற்றும் பொருட்படுத்தாமல், இந்த அமைப்புகளை தடை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இன்று ஒரு யூத மாணவர் தன்னந்தனியாக பல்கலையில் நடமாட உத்தரவாதம் இல்லாத சூழல் உருவாக காரணம் என்ன? என்று எங்களுக்கு விளக்க வேண்டுகிறோம்.

நாளை இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்னென்ன கோரிக்கைகள் வைப்பார்கள் என்று நீங்கள் எண்ண வேண்டாமா?? உங்களுடன் இது குறித்து கலந்து பேச யூத மாணவர் சங்க அலுமினி பிரதிநிதிகள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.. என்று குறிப்பிட்டுள்ளனர்..

சமீபத்திய போரை இஸ்ரேல் தொடங்கவில்லை,

இஸ்ரேல் தன்னை காத்துக் கொள்ளும் பேராபத்தில் தோன்றிய நாளில் இருந்து போரிட்டு கொண்டிருக்கிறது.

OIC நாடுகளின் தலைவர்களுக்கும், சீனா போன்ற அவர்களின் இரகசிய ஆதரவாளர்களுக்கும் ஹமாஸைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம் இல்லை. பாலஸ்தீனியர் அதிபர், ஹமாஸ் இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றாலும், ஹமாஸ் தீவீரவாத இயக்கத்திற்கு, ஈரான் மற்றும் சில நாடுகள் தீனி போட்டு வளர்த்து கொண்டிருக்கின்றன…

அதேபோல், அமெரிக்காவும் (இங்கிலாந்து மற்றும் பிற மேற்கத்திய நாடுகளும்) இஸ்ரேலைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை, ஏன் எனில் ஹமாஸ், இருப்பினும் அவை ஹமாஸ் வீரர்களையும் காஸாவில் அவர்களின் மறைவிடங்களையும் முழுவதுமாக அழிக்க நடக்கும் இஸ்ரேலின் சாகச நகர்வுகளை தாமதப் படுத்தவும் நீர்த்துப் போகவும் சில முயற்சிகளை மேற்கொள்வது போல் காட்டிக் கொள்கின்றன.

மூளை சலவை

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள்,
இடதுசாரி, மற்றும் போலி தாராளவாத அமைப்புகளின் துணையுடன் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களின் மனதைச் சிதைத்து அவர்களை இந்த பிரச்சினை குறித்து உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தூண்டி வருகின்றனர். இதனால் உலகெங்கும் மாணவர்களிடையில் தீவிரவாத சிந்தனை மிகைப்படும் அபாயம் தெரிகிறது.

மாணவர் போராட்டம்

அல்கொய்தா, முஸ்லீம் பிரதர்வுட், போகோ ஹராம் போன்ற தீவீரவாத இயக்கங்கள் உலக அமைதிக்கு நிச்சயம் ஊறு செய்யும் என்பதை தெரிந்து கொண்டுள்ளனர்.
இஸ்ரேல் ஒருதலைப் பட்சமாக போரை நிறுத்தக் கோரி, அமெரிக்கா, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள உயர் நிலைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவர்களில் யாரும், குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 200க்கு மேற்பட்ட அப்பாவி இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் விடுதலை பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இதிலிருந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் யூத எதிர்ப்பு மற்றும் அழிப்பு பற்றியவை மட்டுமே, நடு நிலையான உலக சமாதானம் பற்றியது அல்ல என்பது தெளிவாகிறது.

பல்கலையின் சிரமங்கள்

மேற்கத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்துஇத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்ட சில மாணவர்கள் இடை நீக்கம் (suspend) செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஹார்வர்ட், கொலம்பியா பல்கலைக் கழகங்களிலிருந்து இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற சில மாணவர்களுக்கு முன்னதாக வழங்கப் பட்டிருந்த வேலை வாய்ப்பு ஆணைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இது தீவிரவாத சிந்தனை உள்ள மாணவர்களில் ஒரு சிலருக்காவது ஒரு முக்கிய பாடமாக அமைந்திருக்கிறது. இது ஒரு நல்ல ஆரம்பம்.

மனம் மாறிய JNU மாணவர்

சமீப இந்திய நிகழ்வுகளில் ஒன்று இங்கு குறிப்பிடத்தக்கது. JNU மாணவர் தலைவர்களில் பிரசித்தி பெற்ற ஒருவரான காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஷெஹ்லா ரஷீத் என்பவர் (‘துக்டே-துக்டே’ கும்பல் என்று வருணிக்கப்பட்ட குழுவில் முக்கியமான ஒருவராக இருந்தவர்) தன் JNU மாணவப் பருவத்தின் பழைய செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து கிழிமிக்கு ஒரு நீண்ட பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காஷ்மீர் பிரச்சனையை சிறப்பாகக் கையாண்டுள்ளனர் என்றும், சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்தது முதல் தொடங்கி காஷ்மீரில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சாதாரண மக்கள் இதனால் பயன் பெறுவதாகவும் பாராட்டியுள்ளார். ஆனால் இதன் காரணமாக BJP அரசியல் ஆதாயம் எதுவும் பெறுவது சந்தேகமே என்றும் கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரின் எதிர்காலம் பற்றி தான் தற்போது அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ஆனால் அரசியலில் இறங்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார்.

மிதவாத சிந்தனைகள் அவசியம்

உலகெங்கிலும் உள்ள மாணவர் சமூகங்களிலும் இதேபோல தீவிரவாத எண்ணத்துக்கு மாற்றாக, மிதவாத எண்ணங்களை வளர்ப்பது அவசியம். மோதல்களைத் தவிர்த்து அமைதியான முறையில் தீர்வுகளை நோக்கி செயல்படும் விதமாக மாணவர்களை உந்தக் கூடிய மிதவாத அமைப்புகள் உலகெங்கிலும் தேவைப் படுகின்றன.

இதற்கேற்றார் போல உலகெங்கிலும் தற்போது இஸ்லாமிய அடிப்படை வாதம், போலி தாராள மயம், மற்றும் இடதுசாரி சிந்தனைகள் போன்றவற்றுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

பெரும்பான்மை குரல் கொடுக்க வேண்டும்..

இனி அனைத்துத் தரப்பிலும் மிதவாதிகள், மௌனப் பெரும்பான்மையாக இல்லாமல், உரக்கக் குரல் கொடுத்து, இரு தரப்பிலும் உள்ள தீவிரவாதத்தை எதிர்த்தால் மட்டுமே, இது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

சமீபகாலமாக பாலஸ்தீன அரசு, சில மிதவாத அரேபிய அரசுகளின் துணையோடு இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வழி தேடும் வகையில், சீனா, இந்தியா போன்ற நாடுகளோடு பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. சீனா இப்பிரச்சினை முடிவதை விரும்புவதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியா தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து சுமுகமான தீர்வு காணவே விரும்புகிறது.

இஸ்ரேலியர், பாலஸ்தீனியர் ஆகிய இரு தரப்பினருக்கும் எதிர்வினை ஆற்றாத, சம நிலையான பார்வை உடைய ஒரே பெரிய தேசமாக இந்தியா விளங்குகிறது. இதன் காரணமாக இந்தியாவை இரு தரப்பினரும் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த மறைமுகமாக அணுகி இருக்கின்றனர் என்று தெரிகிறது. இப்போரை முடிவுக்குக் கொண்டு வந்து இந்தியா இவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போம்.