அமெரிக்கா உலக வல்லரசா? பெரிய கடன்காரனா?

அமெரிக்காவின் கடன் 30 ட்ரில்லியின் டாலரை தாண்டிவிட்டது. அது வருடந்தோறும் வட்டியாக கட்டும் தொகை மட்டுமே 870 பில்லியன் டாலர். அது அவர்களின் டிஃபன்ஸ் பட்ஜெட் 822 பில்லியன் டாலரை விட அதிகம்.

ஒரு நாடு தன GDP யில் 77% வரை கடன் வாங்கலாம், ஆனால் அமெரிக்காவின் கடன் 130% தாண்டிவிட்டது. அது அந்த நாட்டின் விருப்பம், அதனால் நமக்கென்ன பிரச்சினை?
புரிதலுக்காக நம் இந்திய நாட்டின் கடன் அளவு 56%.

உலக கரன்ஸி

அமெரிக்காவின் டாலர்தான் கரன்ஸியாக உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படுகிறது. இலங்கை இந்தியாவிடம் ஒரு பொருளை வாங்கினால் அது டாலர் வழியாகத்தான் வாங்கவேண்டும். அந்த டாலரின் மதிப்பு கூடினாலும், குறைந்தாலும் அது உலக பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும்.

நாட்டாமை பதவி தேவை

அதனால் அமெரிக்கா தனது கரன்ஸியை வைத்து உலகத்தை ஏமாற்றி அதன் உழைப்பை திருடிக்கொண்டிருந்தது. அதை செய்ய அதற்கு வல்லரசு என்ற நாட்டாமை பட்டம் தேவைப்படுகிறது. இது கொஞ்சம் தவறானதுபோல தெரியும், ஆனால் அறிந்து கொண்டால் அது எளிதாக புரியும்.

தினம் 1 பில்லியன் டாலர்

அமெரிக்கா தனது அரசாங்கத்தை நடத்தவே தினமும் ஒரு பில்லியன் டாலர் கடன் வாங்குகிறது. அது மட்டுமல்ல டாலரை தன் இஸ்டத்திற்கு அச்சடித்துக் கொள்கிறது. அதெப்படி முடியும்?

கச்சா எண்ணெய்

இன்று கச்சா எண்ணெயின் விலை ஹிஷி $90 . இஸ்ரேல் ஈரான் போர் வருகிறது. அப்படியெனில் அதன் விலை $120 ஆக உயர்கிறது. அதாவது 33% அல்லது மூன்றில் ஒரு மடங்கு.

மொத்த தேவை வருடத்திற்கு

கிட்டத்தட்ட 1.8 ட்ரில்லியன் குரூட் ஆயில் பேரல் ஒரு வருடத்திற்கு பயனபடுத்துகிறோம். அதாவது. 90 டாலராக இருக்கும் அதன் மொத்த மதிப்பு 162 ட்ரில்லியன் டாலர். அது இப்பொது மேற்சொன்ன காரணத்தால் $120 டாலர் ஆகிறது என்றால் அமெரிக்க டாலரின் தேவை $216 ட்ரில்லியனாக உயர்கிறது. அப்படியெனில் 54 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் தேவை உலக நாடுகளிடம் இருந்து புதியதாக எழுகிறது.

வெறும் பேப்பர் இங்க் தான்

அமெரிக்கா அந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ள 54 ட்ரில்லியன் டாலரை புதியதாக பிரிண்ட் செய்து உலக நாடுகளுக்கு கொடுக்கிறது. வெறும் பேப்பர், இங்க் செலவுதான் அதற்கு. ஆனால் நமக்கு?

விலைவாசி ஏற்றம்

உண்மையில் கச்சா எண்ணெய் விலை ஏறினால் டீசல் விலை உயரும், லாரி வாடகை உயரும், அப்போது பருப்பு முதல் பால் வரை விலை ஏறும். அப்போது விலைவாசி ஏறும்போது உலக நாடுகள் இடையே நடக்கும் வர்த்தகத்தின் டாலர் தேவை அதிகரிக்கும். டாலர் தேவை இரட்டிப்பாகும் என்றால், அது அமெரிக்காவிற்கு லாபமோ லாபம்.

போர் வந்தால் குஷிதான்

அதாவது உலக நாடுகளின் தேவைக்கு அது செய்துகொண்டாலும், அதற்கு பிரிண்டிங் காசு மட்டுமே செலவு. அதாவது இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் போதும் அமெரிக்கா தன் முழு வெளி நாட்டு கடனான 32 ட்ரில்லியன் டாலரை இப்படி ஒரு போரை வைத்து சமாளிக்க முடியும்.

டாலர் வேண்டாம் என்றால்

அதனால்தான் ஈராக், லிபியா போன்ற நாடுகள் நாங்கள் கச்சா எண்ணெய் விற்க அமெரிக்க டாலரை பயன்படுத்த மாட்டோம் என்று சொன்னபோது அந்த நாட்டிடம் ரசாயன ஆயுதம், புளியோதரை இருக்கிறது என்று அதை தாக்கி அழித்தது.

டாலர் ஆதிக்கம் குறைந்தால்?

அதாவது உலக நாடுகளை உறிஞ்சி வாழும் அமெரிக்காவின் டாலர் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. அப்படி அது குறைந்தால் அந்த நாடு எப்போது வேண்டுமானலும் திவால் ஆகலாம். டாலர் வெறும் பேப்பராகிவிடும்

டாலர் மதிப்பு போனால்?

ஆனால் அப்படி டாலர் வெறும் பேப்பர் ஆகிவிட்டால், உலக நாடுகள் பலவும் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளது என்னவாகும்? அதற்கு கடன் கொடுத்துள்ளது. அதுவெல்லாம் என்ன ஆகும்? ஏன் ஒவ்வொரு நாடும் டாலர் கையிருப்பாக கனிசமான தொகையை வைத்திருக்கிறது. உதாரணமாக இந்தியாவிடம் 600 பில்லியன் டாலர் கையிறுப்பாக உள்ளது. அதுவெல்லாம் என்னவாகும்?

உலகின் சமன்பாடு பாதிப்பு

அமெரிக்காவின் தேவை நமக்கு தேவை என்று பல நாடுகள் இருக்கிறது. ஒரு வேளை அமெரிக்கா பேங்ரப்ட் ஆனால், சீனா, ரஷ்யாவுடன் சேர்ந்து நாங்கள்தான் உலகின் வல்லரசு என்று சொல்லும். நாம் சீனாவுடன் நேரடியாக மோதுவது என்பது முடியும் என்றாலும் நமது பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கும். அப்படியெனில் அமெரிக்கா வீழ்ந்தால் உலகில் டமன்பாடு பாதிக்கப்படும்.

சீனா தனது யுவானை

எனவேதான் BRICS நாடுகள் ஒரு கரன்ஸியை உலக கரன்ஸியாக கொண்டுவரலாம் என்று கோரியது. அப்படி வந்தால் சீனா தமது யுவானை உலக கரன்ஸியாக ஆக்க முயற்சிக்கும். அது நமக்கு ஆபத்தானது. இதுபோன்ற காரணங்களால் அமெரிக்காவின் தேவை உலக நாடுகளுக்கு இருக்கிறது.

ஒரு வேளை சீனா வீழ்ந்துவிட்டால், அமெரிக்காவின் தேவை இந்தியாவிற்கு இருக்காதே… அப்படியெனில் சீனா இருக்கும்வரைதான் இந்தியா அமெரிக்காவை மதிக்கும் எனும்போது, சீனாவின் வீழ்ச்சியை அமெரிக்கா அனுமதிக்குமா?

நம்ம அரசியல் கட்சிகளும்

அமெரிக்கா போலத்தான் நம்ம அரசியல் கட்சிகள் தேவையும். திமுக இருக்குவரைதான் அதிமுக இருக்கும் என்பதால் அதன் வீழ்ச்சியை அதிமுக விரும்பாது.

விசிக இருக்கும்வரைதான் பாமகவின் தேவை இருக்கும். அதனால் விசிகவை எதிர்த்து சிதம்பரத்தில் போட்டியிடவில்லை. ரெண்டுபேரும் சேர்ந்து, பாஜகவை தோற்கடிபபார்கள். ஆனால் கூட்டணி பாஜகவோடு உள்ளது, பாஜக வளர்ந்துவிட்டால் அவர்களுக்கு ஏது எதிர்காலம்.
அப்போ யாருடா நண்பன், யாருடா எதிரி?