வங்கதேச விடுதலை போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரரின் உண்மை கதையை மையமாக வைத்து ‘பிப்பா’ என்ற இந்திப் படத்தில் ஒரு முக்கிய பாடல் வரும்.
அந்த பாடல்
அந்த பாடல் வங்க தேசத்தின் தேசிய கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் மிகவும் பிரபலமான பாடலான கரார் ஒய் லவ் கபட் (சிறையின் அந்த இரும்பு கதவை உடைப்போம்) என்ற பாடலாகும்.
வங்கதேச மக்களின் சுதந்திர தாகத்தினை வெளிப்படுத்தும் வரிகளோடு அவர்களது சுதந்திர போராட்டத்தில் கலந்து விட்ட கவிதையும் இதுவாகும்.
இசையில் மாற்றம் ஏன்?
தேசிய கவிஞரின் வரிகளில் பாடல் இருந்தாலும் இனம் புரியாத நாட்டுப்புற இசைக் கருவிகளை பயன்படுத்தி, அறிமுகம் இல்லாத டியுனில் ஏன் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் பாடலின் அடிப்படை சாராம்சத்தை புரிந்து கொள்ளாது இசை அமைத்துள்ளார்.
வங்காளிகளின் உணர்புபூர்வமான தொடர்பை பற்றி அவர் கவலைப்படவில்லை. இத்தகைய திமிர்த்தனமான தொழில் சார்ந்த நடத்தையை நாம் ஏற்க முடியாது என்று எழுத்தாளர் தமன்னா ஃபிர்தௌஸ் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
முழு வங்காளத்திடமும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறியுள்ளார்..
குடும்பத்தினரின் கடும் வருத்தம்
தாத்தாவின் இந்த வைரவரிகள் தனது நண்பர் சித்தரஞ்சன் தாஸ் 10 டிசம்பர் 1921ல் பிரிட்டிஷ் காவல் துறையால் கைது செய்யப்படுகிறார். சித்தரஞ்சனின் மனைவி பசந்திதேவி பத்திரிகையின் பொறுப்பை எடுத்து நடத்த முன் வருகிறார். பத்திரிகையின் பெயர் பெங்காலி கதா. பசந்திதேவி நஸ்ரூலிடம் ஒரு கவிதை கேட்க அந்த பிண்ணனியில் பிறந்தது தான் இந்த புகழ் பெற்ற கவிதை. இதுவே உணர்ச்சிபூர்வமான சுதந்திர பாடலானது. வங்காளிகளின் விடுதலைக்கான புரட்சியில் ரத்தத்தோடு கலந்துவிட்ட பாடல் இது. அப்போது தாத்தாவிற்கு வயது 20.
உலகெங்கும்
எங்கள் தாத்தாவின் கவிதை உலகெங்கும் சேரும் என்ற நம்பிக்கையில் தான் ரஹ்மானிடம் நம்பி எங்கள் தாயார் கொடுத்தார். சினிமாவிற்கு இந்த பாடலை பயன்படுத்தலாம் என்று தான் எழுதி கொடுத்தார். டியுனை மாற்றி அனுமதி இல்லை.
இன்று எங்கள் அம்மா இல்லை, ஆனால் மொத்த குடும்பமும் ரொம்ப அப்செட்! மன்னிக்கவே மாட்டோம்!!
எங்கள் பாடலை சினிமாவில் இருந்தே நீக்கி விடுங்கள் ஆஸ்கர் அவார்ட் வாங்கியுள்ளவருக்கு அவரது டியுனுக்கு கவிதை வரிகள் கிடைப்பதா கஷ்டம்!! என்று பொரிந்து தள்ளுகின்றனர்…
மொத்த வங்கதேசமும் வரிந்து கட்டி நிற்கிறது..
என்னத்த சொல்ல…
பல ஆயிரம் ஆண்டுகளாகியும் அசையாமல் நிற்கும் பெரிய கோவில் கட்டிய அற்புத கலைஞர்களை, பொன்னியின் செல்வன் படம் எடுக்கிறேன் என்று ஒரு ஆண்டவர் குழு கையில் எடுக்க, அல்லா ஒருவரே என்று ரஹ்மானும் சேர்ந்து கூத்தடிக்க… மனம் வேதனை பட்ட இந்துக்கள் மௌனமாக நிராகரித்து விட்டார்கள்..
சோழர்களின் நடனம் கூட ஏதே ஒரு காமெடி காட்சியில் வரும் காட்டுவாசி நடனம் போல இசையும் செட்டும் இருந்தது அதிர்ச்சி!!
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்… என்பதனையே ரஹ்மானின் தற்குறி இசை காட்டுகிறது.