ஷேத்ராதிபதி மோடி

‘‘மொகலாய ஆட்சியாளர்களில் அவுரங்க சீப் கொடூரமானவர். வாள் முனையில் இங்கு கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார். மதவெறியால், நம் பாரம்பரிய கலாச்சாரத்தை அழிக்க முயன்றார். ஆனால், இந்த பாரத மண் எல்லாவற்றையும் கடந்து நின்றது. உலகின் எந்தப் பகுதிகளைவிடவும், நம் பாரதம் வேறுபாடனாது. ஒருவேளை இங்கு ஔரங்க சீப் வந்தால், மீண்டும் சிவாஜி மகராஜ் பிறப்பார்’’… என்று பிரதமர் நரேந்திர மோடி முழங்கியது, பிரிவினைவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், தேசத்தை நேசிப்பவர்களுக்கான ஒரு ஊக்கமாகவும் இருந்தது.
இந்துக்களில் இறப்பை கொண்டாடும் ஒரு இடம் உண்டெனில், அது காசி மட்டுமே. காசியில் உயிர் பிரிந்தால் முக்தி நிச்சயம் என்ற ஐதீகமும், நம்பிக்கையும் கோடிக் கணக்கான இந்துக்களிடம் உண்டு. இதனால், கொஞ்சம் வசதியானவர்கள் தங்கள் இறுதி நாட்களை காசியில் கழிப்பதைப்போல், மாற்றிக் கொண்டு, முக்தி அடைவதுண்டு. இதனால், கங்கை கரையில் எரியும் பிணங்களும், அரைகுறையாக எரிந்த உடல்கள் கங்கையில் மிதப்பதும் வாடிக்கையானது என்று காசிவாசிகள் கருதிக் கொண்டிருந்த நாட்கள் பலவுண்டு.

எப்படி இருந்தது காசி?

காசி, இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். அதன் தொன்மை தொடர்பாக ஆய்வுகள் செய்தால், காலத்தால் கணிக்க முடியாத ஆண்டுகளை தன்னகத்தை கொண்டு காசி மாநகர் இயங்கிவந்துள்ளது. ஆனாலும் கூட, காசியின் நிலை இப்படித்தான் இருந்தது. அதாவது, ‘ஹரிஷ்சந்த்ரா காட்’ மயானத்தில், தகனத்துக்கு காத்திருக்கும் உடல்கள், பாதி எரிந்த உடலை கங்கையில் வீசுவது. மனித உடல்களில் இருந்து, கை, கால்களை இழுத்துக் கொண்டு ஓடும் நாய்கள்.

‘ஷிவாலா காட்’ படிகளில் காலைக்கடன் கழிக்கும் முஸ்லிம்கள், ‘அசி காட்’டை ஆக்கிரமித்திருக்கும் சலவையாளர்கள், ‘ராஜேந்திர காட்’ ஆடு, மாடுகளை அறுப்பதால் ஓடும் ரத்தம், ‘தசாஸாஸ்வமேத காட்’ வீடுகளின் கழிவு நீர், ‘ஹனுமான் காட்’டில் பித்ரு தர்ப்பண நபர்களிடம் பணம் பறிக்கும் புரோகிதர்கள், ‘லலிதா காட்’ பகுதியில் வழிப்பறி திருடர்கள், ‘கோடோலியா’வில் பனாரஸ் பட்டு என்று சல்லா துணியை, அதிக விலையில் ஏமாற்றி விற்கும் தலால்கள் என்று காசியின் நிலை நிறையவே கவலைக்கிடமாகத்தான் இருந்தது.

காசியின் பிரமாண்டம் இது

இந்த பூமியில் தொடர்ந்து 6 ஆயிரம் ஆண்டுகளாக இயங்கும் நகரம் என்று மதுரை நகரைச் சொல்லும் வரலாற்று ஆசிரியர்கள்
பார்வையில், காசி நகரையும் ஆக தொண்மையானது என்றே கூறப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இயங்கி வரும் காசி மாநகர், ஒவ்வொரு முறையும் ஆக்கிரமிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் மீண்டு வந்து சாதனை படைத்துள்ளது. இதில், அழிவே இல்லாத ஒரு விஷயம் உண்டெனில், அது பிறப்பும், இறப்பும் அற்ற பரம்பொருளான காசி விஸ்வநாதன்தான்.
அந்த பரம்பொருளைத் தவிர, காசி நகர் பல வரலாற்று ஆக்கிரமிப்புகளை சந்தித்தே வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பிரமாண்டமாக மீண்டு வந்துள்ளது. ஆனால், இந்த முறை காசி நகரின் மீட்சி என்பது மிகமிக பிரமாண்டம் என்றுதான் சொல்ல வேண்டும். காசி நகரும், விஸ்வநாதர் கோயிலும் பல படையெடுப்புகளால் அழிக்கப்பட்டு, விஸ்வநாதர் கோயில் பரப்பளவு 3 ஆயிரம் சதுர அடிகளாக குறைந்தது. இப்போது, காசி விஸ்வநாதர் கோயிலின் பிரமாண்டம் 5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக, ஒரே நேரத்தில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் கோயில் வளாகத்தில் இருக்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது.

அழிக்கப்பட்ட காசி

டிசம்பர் 13ம் தேதி விரிவாக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தன் பேச்சினுடடே ராணி அகில்யபாய் ஹோல்கர் மற்றும் சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங் ஆகியோரின் புகழ்பாடினார். காரணம், காசியை மீட்டு, சீரமைப்பதில், இவர்கள் 2 பேரின் பங்களிப்பு அளப்பறியது. வழக்கம்போல், நம் இடது சாரி வரலாற்று ஆசிரியர்களால், திட்டமிட்டே பூசி மறைக்கப்பட்டது. இப்படி இருட்டபடிப்பு செய்யப்பட்ட வரலாற்றைத்தான் நமது பிரதமர் மோடி, உலகம் கேட்கும் வகையில் உரக்கப்பேசினார் என்பது பெருமைக்குரிய விஷயம்.

காரணம், வேத காலம் தொடங்கி, இப்போது வரை இந்துக்களின் புண்ணிய, புனித நகராக காசி விளங்குகிறது. தீர்த்த யாத்திரை என்பது காசி – ராமேஸ்வரத்தையே குறிக்கும். புத்தர் காலத்தில் காசி மாநகருக்கு பல இன்னங்கள் வந்தாலும், வந்த சுவடு இல்லாமல் நீங்கியது. காசிக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கு உண்மையான ஆபத்து என்பது, இன்றைய சீரழிந்த நிலையில் உள்ள ஆப்கானிஸ்தானின், அன்றைய கால மன்னர்கள் வருகையால் ஏற்பட்டதுதான்.
குறிப்பாக பொது ஆண்டு 1300 முதல் 1650 வரை காசி சந்தித்த இடிப்புகள், ஆக்கிரமிப்புகள் அதிகம். இந்தியா மதச்சார்பற்ற நாடு, எம்மதமும் சம்மதம் என்று உளறிக் கொண்டிருக்கும், சிந்திக்க மறந்த சிலரின் பார்வைக்காக…

காசி விஸ்வநாதர் கோயில் ஆயிரத்து 100 ஆண்டுகள் வரை அமைதியாகத்தான் இருந்தது. பொது ஆண்டு 1193 மற்றும் 1194ம் ஆண்டுகளில், டில்லியை ஆண்ட ஆப்கானிஸ்தானின் அடிமை சுல்தான்கள் விஸ்வநாதர் கோயிலை இடித்தனர். இதில் முதலில் வருபவன் குத்புதீன் ஐபெக். கன்னோஜ் மன்னனைத் தோற்கடித்த ஐபெக், காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்து ரசியா மசூதியைக் கட்டினான்.

இதன் பின்னர் குஜராத் பெரு வணிகர் ஒருவர் கோயிலை புதுப்பித்த போது, மீண்டும் வந்தான் ஒரு சுல்தான். பொது ஆண்டு 1211 முதல் 1266ம் ஆண்டு வரை இல்டுட்மிஷ் காசி கோயில், நகரை இடித்தார். இதன்பின்னர் பொது ஆண்டு 1447 முதல் 1458 வரை ஹூசைன் ஷாவும், பின்னர் 1489 முதல் 1517ம் ஆண்டு வரை சிக்கந்தர் லோடியும் காசியை சிதைத்தார்கள்.

ராஜா மான்சிங், ராஜா தோடர்மால் ஆகியோர் கோயிலை புதுப்பித்தனர். ஆனால், மான்சிங் மகள் முஸ்லிமை திருமணம் செய்து கொண்டதால், அவரால் புதுப்பிக்கப்பட்ட கோயிலை, பலர் புறக்கணித்தனர். ஆனால், 1669ம் ஆண்டுகளில், டில்லியின் மொஹலாய மன்னன் ஔரங்கசீப், காசி கோயிலை மிகக் கடுமையாக தாக்கி கொள்ளையடித்தான். கோயிலின் ஒரு பகுதியைவிட்டு, பெரும் பகுதியை மசூதியாக்கினான்.

மீட்கப்பட்ட காசி மாநகர்

காசியை அவுசரங்க சீப் அழித்தான், ஆனால், அதை மகாராஷ்டிராவின் வீர சிவாஜி, காசியை மீண்டும் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிவாஜியின் மறைவுக்குப் பின்னர், ஔரங்க சீப்பின் அட்டகாசம் அதிகரித்தது. இந்துக்கள் மீது ஜிசியா உட்பட பல வரிகள் விதிக்கப்பட்டது. ஆனாலும், இந்து எழுச்சியை ஔரங்க சீப்பால் அடக்க முடியவில்லை. காசி விஸ்வநாதர் கோயிலை சீரமைக்கும் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்தூர் ராணி அகல்பாய்

இந்த கால கட்டத்தில் இந்தூர் ராணியாக பட்டம் கட்டப்பட்ட ராணி அகல்பாய் ஹோல்கர், மொகலாயர்களுக்கு கடும் சவால் கொடுத்தாள். மொகலாய ஆதிக்கத்தில் இருந்து காசிமாநகரை வீரத்துடன் மீட்டெடுத்தாள். ஆப்கான் சுல்தான்கள், மொஹலாயர்கள் என்று 700 வருட ஆதிக்கத்தில் இருந்த காசியை மீட்ட அகல்பாய், விஸ்வநாதர் கோயில் மற்றும் அதன் சுற்றப் பகுதிகளில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்களை இடித்து அகற்றினாள்.
காசி நகரின் கங்கை படித்துறையை உருவாக்கினாள். காசியைத் தொடர்ந்து, இந்துக்கள் புனிதமாக கொண்டாடும் மதுரா, சோமநாதபுரி உட்பட பல கோயில்களை சீரமைத்தாள். முஸ்லீம் படையெடுப்புகளால் சிதைக்கப்பட்ட சோமநாதபுரியில் ராணி அகல்பாய், தன் முதல் விளக்கை ஏற்றிவைத்து, கோயிலை வெளிக் கொண்டுவந்தார். சிவாஜிக்கு பின்னர் ராணி அகல்பாய் ஆட்சி, இந்துக் கோயில்களின் பொற்காலம் எனலாம்.

இது பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் தியாகம்

பஞ்சாப்பை ஆட்சி செய்த மன்னன் ரஞ்சித்சிங், கோஹினுர் வைரத்தை தன் வசம் வைத்திருந்தார். மொஹலாயர்களின் ஆட்சி ஆப்கானிஸ்தான் வரை நீண்டிருந்த காலத்தில், பஞ்சாப்பில் இருந்து அதனைத் துண்டித்து, மொஹலாயர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த வீரன். ரஞ்சித் சிங்கும், அவரது மனைவி ஆகியோர் இணைந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆயிரம் கிலோ தங்கம் வழங்கினர். கோயிலை புதுப்பிக்க எல்லாவிதத்திலும் நடவடிக்கை எடுத்தனர். பொது ஆண்டு 1841ல் நாக்பூர் மன்னர் ரகுஜி 3ம் பான்ஸ்லே, விஸ்வநாதர் கோயிலுக்கு எண்ணற்ற அளவு வெள்ளியை வாரி வழங்கினார். நேபாள் மன்னரான ராணா, காசி விஸ்வநாதருக்கு முன் வீற்றிருக்கும் 7 உயர நந்தியை வழங்கினார். கோயில் நிர்வாகம் ‘மகத் தேவி தத்’ வசம் இருந்த நிலையில், கோயில் நிர்வாகம் தொடர்பாக 1900ல் பிரச்னை ஏற்பட்டு, நிர்வாகம் கோயிலின் தலைமை குருக்கள் வசம் சென்றது.

மறைக்கப்பட்ட காசி விஸ்வநாதர்

இந்தியா இந்துக்களின் தேசம். ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கு நன்கு தெரிந்தும், இந்தியாவில் இந்துக்களை மட்டம் தட்டி, வரி வசூலில் கவனமாக இருந்தனர். இதனால், இந்து கோயில் சொத்துக்கள் மீது அவர்களுக்கு ஆர்வம், கவனம் இல்லை. காசி விஸ்வநாதரின் வசிப்பிடம் சுருக்கப்பட்டு, அவரைச் சுற்றிலும் 400க்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பித்தக்கது.

இதற்கிடையே, 2015ல் அரியணையேறிய பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் கோயிலை மீட்பதையும், ராமர் கோயில் கட்டுவதையும் தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு செயல்பட்டார். அதிலும், உபி முதல்வராக யோகி ஆதித்யாநாத் பதவியேற்றதும், காசியை சீரமைக்கும் மோடியின் திட்டம் வேகம் பிடித்தது. மோடியின் உளம் அறிந்து செயல்பட்ட யோகி ஆதித்யாநாத், காசியை சீரமைப்பதற்கான பணிகளை திறம்பட மேற் கொண்டார்.

காசி விஸ்வநாதர் கோயிலைச் சுற்றிலும் கட்டப்பட்டிருந்த 400 வீடுகளின் உரிமையாளர்களிடம் பேசிய, உபி அரசு, அவர்களுக்கு கோயிலில் இருந்து 8 கி.மீட்டர் தூரத்தில் வசதியான வீடுகளை கட்டித் தருவதாக கூறியது. அவர்கள் 400 குடும்பத்தையும் இடம் மாற்றிவிட்டு, கோயிலைச் சுற்றி, அதாவது காசி விஸ்வநாதரை மறைத்துக் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அகற்றும் பணிகள் கிட்டத்தட்ட 6 மாத காலம் தொடர்ந்து நடந்தது.

வெளியான பிரமாண்டம்

காசி விஸ்வநாதர் கோயிலைச் சுற்றிலும் உள்ள கட்டடங்களை இடிக்கஇடிக்க, இன்ஜினீயர்கள் அதிர்ந்து நின்றதுதான் மிச்சம். காரணம், விஸ்வநாதர் கோயிலை இடித்துதான் அந்தப் பகுயில் உள்ள வீடுகள், மசூதிகள் கட்டப்பட்டது என்பதை, பறை சாற்றுவதற்காக, இடிக்கப்பட்ட கோயிலின் ஒரு பகுதி அப்படியே இணைக்கப்பட்டு வீடு கட்டப்பட்டிருந்தது. இந்தப்படம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு, நாடு முழுவதம் பெரும் பரப்பபை ஏற்படுத்தியது. காசி விஸ்வநாதர் கோயிலை மறைத்து, திட்டமிட்டே கட்டப்பட்டிருந்த 400க்கும் அதிகமான வீடுகள் அகற்றப்பட்டது. இப்போது காசி விஸ்வநாதர் கோயிலின் விஸ்தீரணம் என்பது 3 ஆயிரம் சதுர அடியில் இருந்து, 5 லட்சம் சதுர அடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது விஸ்வநாதர் கோயிலில் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை சேவிக்க முடியும்.

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று

விஸ்வநாதர் கோயிலை விரிவு படுத்தும் பணிகளைத் தொடங்கியதும், பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி, உபி அரசு சுறுசுறுப்பாக செயல்பட்டது. அதாவது, கோயிலைச் சுற்றிலும் நெருக்கமாக கட்டப்பட்ட வணி வளாகங்கள், குடியிருப்புகளின் குடிநீர், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, திட்ட வரையறைப்படி அவை அப்புறப்படுத்தப்பட்டன. இங்கு குடியிருந்த மக்களுக்கு, காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து, 8 கி.மீட்டர் தூரத்தில், விஸ்தீரனமான, வசதியான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. விஸ்வநாதரின் ஆசியால், குடியேற்றம் முழுமையான பின்னரே, குடியிருப்புகளை அகற்றும்பணிகள் நடந்தது. இதையும் பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.

பிரதமர் மோடி சொன்னதும், சொல்ல மறந்ததும்

காசி விஸ்வநாதர் கோயிலின் விரிவாக்கப்பட்ட வளாகத்தை டிசம்பர் 13ம் தேதி திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்’ என்ற பாரதியின் கவிதை வரிகளை உயர்வுடன் சுட்டிக் காண்பித்தார். தமிழகத்தில் பிறந்து, தமிழ் பேச தடுமாறும் தலைவர்களுக்கு மத்தியில், குஜராத்தியை தாய்மொழியாக கொண்ட பிரதமரின் பேச்சுக்கு, தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநேரத்தில், காசி விஸ்வநாதர் கோயிலுக்காக, தமிழகத்தின் குமரகுருபரர் செய்த திருவிளையாடலையும் குறிப்பிட்டிருந்தால், தங்கக் கிரீடத்தில் கோஹினுர் வைரம் பதிக்கப்பட்ட, பெருமை கொண்ட நிகழ்வாக இருக்கும்.

நெல்லையில் பிறந்த பிறவி ஊமையான குமரகுருபரர், திருச்செந்தூர் முருகன் அருளால், கவிபாடும் ஆற்றல் பெற்றார். மீனாட்சியின் ஆசியால், பெருங்கவிஞரானார். காசிக்கு சென்று, விஸ்வநாதர் கோயிலை மீட்க உதவும்படி, சுல்தானிடம் கேட்டார். சுல்தான் உருதுமொழியில் பேச, குமரகுருபரரை அவமதித்தான். அன்றே பிறந்தது சகலகலா வல்லிமாலை. மறுநாள் சுல்தான் அவைக்கு சிங்கத்தின் மீது பயணித்த குமரகுருபரர், சுல்தானுக்கு உருது மொழியில் பதில் அளித்து, அதிரவைத்தார். தான் மகானுடன் மோதுவதை உணர்ந்த சுல்தான், குமரகுருபரர் கோரிக்கையை ஏற்றான். கோயிலை முழுமையாக குமரகுருபரர் வசம் ஒப்படைத்தான். இந்த வரலாற்றையும் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தால், தமிழ் கூறும் நல் உலகம், பிரதமர் மோடிக்கு என்றென்றும் நன்றிக்டன் கொண்டதாக இருக்கும்.

தொடரட்டும் இந்த மகத்தான பணி

இந்தியாவின் தீர்க்க முடியாத தலைவலிகளாக, தொட்டால் சிதறடிக்கும் பிரச்னைகளாக பூச்சாண்டிக் காண்பித்துக் கொண்டிருந்த பல பிரச்னைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அப்படியே சுண்டைக்காய் போல், தூக்கிப்போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் பிரச்சனை, காஷ்மீரின் 370வது சிறப்பு சட்டப்பிரிவு என்று பல பிரச்சனைகளை ஊதித்தள்ளிய மோடி அரசு, இப்போது காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கத்திலும், ஒரு பிரமாண்ட சாதனையை செய்துள்ளது.

இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்னரும், பின்னரும், இதெல்லாம் சாத்தியமா? என்று ஏங்கியவர்களுக்கு, ‘நேர்மையாளன் ஆட்சியில் இருந்தால் எதுவும் சாத்தியமே’என்று நிரூபித்துள்ளார் பிரதமர் மோடி. எந்த ஒரு காரியத்தையும் பதறல், சிதறல் இல்லாமல், துல்லியமாக அடிப்பது எல்லாம் தனக்கு கை வந்த கலை என்பதை மோடி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி