8 கடற்படையினர் விடுதலை…

எதிர்பார்த்தது போலவே சட்டவிரோதமாகப் பிடித்துவைத்திருந்த இந்திய முன்னாள் கடற்படையினர் எட்டுப்பேர்களையும் கத்தார் விடுதலை செய்திருக்கிறது. இதன் பின்னனியில் நடந்த அரசியல் விளையாட்டுக்கள் அனேகமாக வெளிவரப்போவதில்லை என்றாலும் இந்தியாவுடன் மோதினால் என்னவாகும் என்கிற பாடம் கத்தாருக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் இப்படியான சம்பவங்களைச் செய்வதற்கு முன்னாள் கத்தாரிகள் ஆயிரம்தடவைகள் யோசிப்பார்கள்.

எரிவாயு இறக்குமதி

உலகின் 50 சதவீத எரிவாயு கத்தாரில் மட்டுமே இருக்கிறது. இந்தியாவுக்கோ கத்தாரிய எரிவாயு மிக அவசியமான ஒன்று. அது இல்லாவிட்டால் ஒவ்வொரு இந்தியனும் போர்க்கொடி தூக்கிவிடுவான் என்பதால் இந்தியாவின் கையை முறுக்கக் கத்தாரிகள் தீர்மானித்தார்கள்.

மிரட்டிப் பார்த்த கட்டார்

இந்தியா நயமாகச் சொல்லிப் பார்த்தது. தலைக்கனம் பிடித்த கத்தாரிகள் கேட்கவில்லை. ஒன்றுமே செய்யாமல் வருடாவரும் பில்லியன் கணக்கில் பணமழை பெய்கையில் எவனுக்குமே கொஞ்சம் தலைக்கனம் ஏறத்தானே செய்யும்? எனவே இந்தியாவை மிரட்டிப் பார்க்கத் தீர்மானித்தார்கள்.

அதிர்ச்சி வைத்தியம் தந்த இந்தியா

இந்தியா உடனடியாக கத்தாருக்கு மாற்றாக மொஸாம்பிக்குடனும், வெனிசூவெலாவுடனும் எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இந்தியாவிற்குத் தேவையான அத்தனை எரிவாயுவையும் இந்தியா அந்த இரண்டு நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்துகொள்ள முடியும். இதனைப் பார்த்த கத்தார் கதற ஆரம்பித்தது. அவர்களிடமிருந்து இந்தியா எரிவாயு வாங்காவிட்டால் பல பில்லியன் டாலர் பணவரத்து நின்றுபோய்விடும்.

கத்தாருக்கு கத்திரி
போட்ட இந்திய அரசு

இதற்கிடையே, கத்தாரிகளுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா. கத்தாரி கண்ணீர்விட ஆரம்பித்தான்.

அதனைத் தொடர்ந்து கத்தாருக்கான இந்திய மருந்துகள் ஏற்றுமதியை நிறுத்தினார்கள். எனவே அத்தியாவசிய மருந்துகளை ஐரோப்பாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்து கத்தாரிகள் பலமடங்கு விலைகொடுத்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை உண்டானது. இந்திய மருந்து விலை மலிவானது.

அன்றாட தேவைக்கான காய்கறிகள், இறைச்சி போன்றவற்றிற்காக கத்தாரிகள் இந்தியாவை நம்பியிருக்கிறார்கள். அதிலும் வெட்டு விழுந்தது.

இஸ்ரேல் இந்தியா தொழிலாளர் ஒப்பந்தம்

இதற்கிடையே இஸ்ரேல்-பாலஸ்தீனிய சண்டையில், இஸ்ரேலிகள் பாலஸ்தீனியர்களுக்கு விசா கொடுப்பதனை நிறுத்தினார்கள். அதற்குப் பதிலாக ஒரு இலட்சம் இந்தியத் தொழிலாளிகளை வேலைக்கு எடுக்க இஸ்ரேலிகள் இந்தியாவுடன் ஒப்பந்தமிட்டார்கள். இந்தியா சத்தமில்லாமல் கத்தாரில் வேலை செய்யும் இந்தியர்களை இஸ்ரேலுக்கு மடைமாற்றத் தீர்மானித்தது. அது நடந்தால் கத்தாரில் நடந்து கொண்டிருக்கும் அத்தனை முன்னேற்றப் பணிகளும் நின்றுபோகும். கத்தாரிகளுக்கு சிக்கல் மேல் சிக்கல்.

நழுவிய இஸ்லாமிக் கவுன்சில்

இஸ்லாமிக் கவுன்சில் நாடுகள் வழியாக அழுத்தம் கொடுக்க நினைத்த கத்தாரிகள் அதற்கான ஆதரவைத் தேட ஆரம்பித்தார்கள். ஆனால் டுஸ்லாமியத் தீவிரவாதிகளை வளர்த்துவிடும் கத்தாரிகள் மீது எரிச்சலில் இருந்த ஐக்கிய அரபு எமிரேட்டும், சவூதி அரேபியாவும் அதற்கு இணங்கவில்லை. அதற்கும் மேலாக எமிரேட்டும், சவூதியும் தங்களது எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவைச் சார்ந்து நிற்கவேண்டிய நிலைமை வந்திருக்கிறது. இந்தியாவைப் பகைத்தால் அவர்களின் கதி அதோகதிதான் என்பதால் அதுவும் நடக்கவில்லை.

கைவிட்ட அமெரிக்கா

கத்தாரிகளின் நண்பனான அமெரிக்காவும் இதனைக் கண்டுகொள்ளாமல் போனதால் நாலபுறமும் சிக்கலில் சிக்கித் தவித்த கத்தாரிகள் மறைமுகமாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். எதிர்காலத்திலும் தங்களிடமிருந்து மட்டுமே எரிவாயு இறக்குமதி செய்யவேண்டும் எனக் கெஞ்சத் துவங்கினார்கள்.

இனி குறைந்த விலையில் எரிவாயு

இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொண்ட இந்தியா, கத்தார் சிறையில் இருந்த தனது முன்னாள் கடற்படை வீரர்களை விடுதலை செய்ய வைத்ததுடன், எதிர்வரும் இருபதாண்டுகாலத்திற்கு கத்தாரிடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இனிவரும் இருபது ஆண்டுகளில் 72 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய எரிவாயுவை கத்தாரிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து கொள்ளும். அதாகப்பட்டது இப்போதைய மார்க்கெட் விலையை விடவும் குறைவான விலைக்கு விற்க கத்தார் ஒப்புக் கொண்டிருக்கிறது.

6 பில்லியன் டாலர் மிச்சம்

இதுவரை இந்தியா கொடுத்துக் கொண்ட விலையைவிடவும் அது மிகவும் குறைந்த விலை. இதன் மூலம் இந்தியாவுக்கு 6 பில்லியன் டாலர்கள் மிச்சம்! நீ விலை குறைத்து கொடுத்தால் கொடு இலலாவிட்டால் இருக்கவே இருக்கிறது மொஸாம்பிக்கும், வெனிசூலெவாவும், ரஷ்யாவும் என்று சொல்லிவிட்டது இந்தியா.

புதிய வலிமையான இந்தியா

இப்படியாக நெருப்புடன் விளையாடிய கத்தார் 6 பில்லியன் டாலர் நஷ்டத்துடன், இந்திய கடற்படை அதிகாரிகளையும் விடுதலை செய்துவிட்டு தப்பிப் பிழைத்திருக்கிறது.

இது பழைய இந்தியா இல்லை என்கிற பாடத்தை மிகுந்த வலியுடன் கற்றுக் கொண்டிருக்கிறான் தலைக்கனம் பிடித்த கத்தாரி.