புற்றுநோய், சுவாசகோளாறு தரும் மெழுகு வர்த்திகள்…

முன்பு மின்சார விநியோகம் தடைபடும் போது இருள் நீக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மெழுகுவர்த்திகள் தற்போது ஆடம்பர மற்றும் அலங்காரப் பொருளாக மாறி விட்டன. அதிலும் இப்போது நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான இந்துக்கள் கூட மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் என்ற பெயரில் கிறிஸ்துமஸ் கொண்டாடத் தொடங்கிய பின்னர் பார்ட்டிகளிலும், பரிசுப் பொருளாகவும் வேறு பயன்படுத்தப்படுகின்றன.

300 கோடி

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் வாங்கும் முதல் பொருள் மெழுகுவர்த்தியாகத் தான் இருக்கும். வீடுகளில் மட்டுமன்றி தேவா லயங்களிலும் எண்ணற்ற மெழுகுவர்த்திகள் கொளுத்தப்படும். அதற்கு இப்போது என்ன எண்கிறீர்களா? மெழுகுவர்த்தி ஏற்றுவதால் மாசு ஏற்படுகிறது என்பது தான். கிறிஸ்துமஸ் நாள் அன்று உலகம் முழுவதும் 300 கோடி மெழுகுவர்த்திகள் எரிக்கப்படுகின்றன.

எப்படி தயாரிக்கபடுகிறது

பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் பாரபினைப் பயன்படுத்தித் தான் மெழுகுவர்த்தி தயாரிக்கப்படுகிறது. பாரபின் ஒரு துணைப் பொருளாகக் கிடைத்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாற உலக நாடுகள் முயற்சித்துக் கொண்டு இருக்கும் போது மெழுகுவர்த்திகளின் தேவை அதிகரிப்பது பெட்ரோலியத்தின் பயன் பாட்டையும் அதிகரிக்கிறது.

வெளி வரும் நச்சுபுகை

மெழுகுவர்த்தியை எரிக்கும் போது வெப்ப மயமாதலை ஊக்குவிக்கும் ரீக்ஷீமீமீஸீலீஷீusமீ ரீணீs மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகிய வாயுக்களும் வெளியாகின்றன. நறுமண மெழுகுவர்த்திகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. பார்ட்டிகள் கொண்டாட்டங்கள் மட்டுமல்லாது தனிப்பட்ட விதத்தில் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

புற்று நோய்

மெழுகுவர்த்திகளை பரிசுப் பொருளாக அளிக்கும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால் இவற்றில் கார்சினோஜெனிக் எனப்படும் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப் பொருட்களான பென்சீன், டொலுவீன் ஆகியவை உள்ளன. இவற்றை எரிப்பதால் ஹைட்ரோகார்பன்கள் வெளியாகின்றன. இந்த ஹைட்ரோகார்பன்களை வெளியே எடுக்கக் கூடாது என்று தான் நமது காவிரி டெல்டா விவசாயிகள் போராடினர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

சுற்று சூழல் மாசு

மெழுகுவர்த்தியை பேக்கேஜ் செய்ய பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி உள்ளிட்டவையும் மறுசுழற்சி செய்யப்படாமல் அப்படியே குப்பையில் வீசப்படுவதால் நில மாசுபாடு ஏற்படுகிறது. நறுமண மெழுகுவர்த்திகளை‌ எரிப்பதால் பாதிப்பு வெளிப்படும் வேதிப் பொருட்கள் ஆஸ்த்துமா மற்றும் எக்சீமா போன்ற தோல் வியாதிகளை ஏற்படுத்துகிறது.
மெழுகுவர்த்தியில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகளும், எரிப்பதால் வெளிவரும் கரியும் காற்றில் கலந்து நுரையீரலை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெளிநாடுகளில் அதிகம் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையான கிறிஸ்துமஸ் தினம் தான் ஆண்டிலேயே ‘மாசு மிக்க நாள்’, tலீமீ னீஷீst tஷீஜ்வீநீ பீணீஹ் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1000 ஆண்டு மாசு

ஒரு மெழுகுவர்த்தியை எரிக்க சில நிமிடங்கள், அதிக பட்சம் சில மணி நேரங்கள் ஆகலாம். ஆனால் அதன் தாக்கம் 1000 ஆண்டுகளுக்கு தொடரும். தூக்கி எறியப்படும் மிச்சம் மீதி மெழுகுவர்த்திகள் 1000 ஆண்டானாலும் அப்படியே இருந்து நிலத்தை மாசுபடுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதனால் மக்கள் இனி எண்ணெய் விளக்கு ஏற்றலாமே!! புத்த மத வழிபாட்டு தலங்களில் சின்ன கோப்பைகளில் மிதக்கும் விளக்குகள் இருக்கும்.

நம் உடல் நலத்தையும் மன நலத்தையும், நாம் வாழும் இந்த பூமியின் நலத்தையும் காக்க மெழுகுவர்த்தி ஏற்றாமல், எண்ணெய் விளக்குகள் ஏற்றி வழிபடுவோமே!!!