ஹலோ ஒரு நிமிடம்…

சபாஷ்! எடப்பாடியாரே! சபாஷ்… ஹ¨மாயுன் மசூதியினை பாரம்பரிய முறையில் சீரமைக்க எங்களது வரிபணத்தில் 36 கோடிகள்!
புதிய பட்ஜெட்டில் வருடம் மசூதி பாராமரிப்பிற்காக 60 லட்சம், சர்சுக்கள் பராமரிப்பிற்காக 1 கோடி என்று இருந்ததை தற்போது மிகவும் தாராளமாக அதுவும் எங்களது வரிப்பணத்தில், தலா 5 கோடிகளாக உயர்த்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
வறுமையில் வாடும் இஸ்லாமிய மத குருமார்களுக்கும், சர்ச்சுகளில் இன்னல்களில் மாட்டி அவஸ்தை படும் பாதிரிமார்களுக்கும் குறைந்த பட்சம் ஊதியமாக 20,000 தருவீர்கள் என்பதில் மகிழ்ச்சி. எங்களது வரிப்பணம் தானே. கடைத் தேங்காய்… வழி பிள்ளையார்…
சுமார் 25% சிறுபாண்மையினருக்கே இத்தகைய சலுகைகள் என்றால்! இந்து மத குருமார்களுக்கும், கோவில்களில் பணிபுரியும் குருக்கள், சிவாச்சாரியயர்கள், தலையாரிகள், பண்டாரங்கள் ஆகியவர்களுக்கு எவ்வளவு கொடுப்பாரோ!
திராவிட கழக இந்து கண்மணிகளே… ஏமாந்து விட்டீர்…
நமது கோயில்களில் பணிபுரியும் குருக்கள், அர்ச்சகர்கள் போன்றவர்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் சம்பளம் வெறும் 1000த்தில் தொடங்கி ரூபாய் 3000த்தில். தள்ளாடி, அதிகபட்சமாக 6000த்தில் நிற்கிறது.
தட்டில் வரும் காசு கூட அந்த கோயில் அறநிலைய துறை அதிகாரிக்கு பெரும்பங்கு! அறங்காவலர்களுக்கு பங்கு! பிறகு எஞ்சியிருப்பது தான்!
திராவிட கழகத்தினரின் 70 ஆண்டுகால வெறுப்பு பிரச்சாரத்தால், ஒடுங்கி, குடும்பம் நடத்தவே பிரயத்தனப்படும் அந்த இறை சேவகர்களை கண்டு கொள்ளாமல், ஜாக்கிரதையாக உண்டியலில் போடுகிறோம் நமது காணிக்கையை!
எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் இதனை எல்லாம் புன்முறுவலுடன் பார்த்து கொண்டு, அலங்காரத்துடன் சற்குணமாய் காட்சியளிக்கும் எம் தெய்வங்களே!
உங்களது ஒரு நாள் எங்களது ஒரு யுகமோ! இந்த காலக்கணக்கு குழப்பத்தால் தான் தெய்வம் இன்னும் இவர்களை தண்டிக்கவில்லையோ?
தமிழக ஆட்சி இப்படியென்றால், தமிழ்நாடு ஒரு விசித்திர பூமியாகவே மாறி வருகிறது.
ஒரு கிறிஸ்துவ மத வியாபாரி நாம் 60 லட்சம், அவர்கள் 5 கோடி! மதம் மாற்றி விடுவோம் என்கிறான் பகிரங்கமாக!
பெரும்பான்மை அமைதியாய் இருக்கிறது.
ஒரு அந்நிய மத கைக்கூலி தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் கிறிஸ்துவ போதனைகளை புகுத்தி உள்ளேன் என்று பேட்டி கொடுக்கிறான்.
இன்னுமொரு இஸ்லாமியன் இனி அவர்கள் பொருளாதாரத்தை முடக்க போகிறோம் என்று சவால் விட்டும் பெரும்பான்மை அமைதி காக்கிறது.
புராதனமான ஆயிரக்கணக்கான கோயில்கள் ஒரு வேளை விளக்கிற்கு வழியில்லாமல், உருக்குலைந்து, சிதிலமைடந்து ராஜ கோபுரத்தின் மேல் ஒரு மரமே வளர்ந்து தன்னை காப்பாற்ற யார் வருவாரோ என்று தேடிக் கொண்டிருக்கிறது. தெய்வம் உறையும் இடமல்லவா? கம்பிரம் குறையவில்லை.
1971ல் ஒரு கலாசாரமில்லாத ஒரு காட்டுமிராண்டி பிள்ளையார் சிலையை போட்டு உடைக்கிறான். ஸ்ரீ ராமர் சீதையை செருப்பால் அடித்தான். அவனது சிலைகள் தமிழ்நாடு முழுவதும். கடவுளை அவமதிக்கும் வாசகங்களோடு!
அந்த கேடுகெட்ட கட்சிக்கு வாக்களித்து ஆட்சியை கொடுக்கிறோம்.
தான் நித்தம் கும்பிடும் கடவுளுக்கே அவமானம் என்றாலும் வராத இந்த கூட்டம், நமது கலாசாரத்திற்காக இன்னுயிரை கொடுத்த ராமலிங்கத்திற்கும், விஜயரகுவிற்கும் வரும் என்று நினைப்பது தவறுதான்!
வண்ணாரப்பேட்டை, ஆம்பூர் கலவரம், 5 கோடி எல்லாமே அரசியல் வியாபாரம் தான்.
இந்துக்களே! ஒன்றிணைந்து நமது கோயில்களை மீட்க போராடுவோம்! நம் பணம் நம் கையில் இருந்தால் மட்டுமே நாம் நினைப்பதை செய்ய முடியும். வழக்குள் குவிந்துள்ளன. தீர்ப்புகளும் வந்துவிட்டன. நீதிமன்ற அவமதிப்பு என்பது தமிழ்நாட்டில் சர்வ சாதரணமாகி உள்ளது.
மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு 6 மாதத்திற்குள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 38000 கோவில்களின் அசையும், அசையா சொத்துக்களின் முழு பட்டியல், கடவுள் சிலைகளின் எண்ணிக்கை, தற்போது அந்த கோயில் நிலங்கள் யார் வசம் உள்ளன போன்ற விவரங்களோடு நீதிமன்றத்தில் ஒப்படைக்க சொல்லி தீர்ப்பு எழுதிவிட்டது.
இது நடந்து வருடங்கள் ஓடிவிட்டன.
கேட்பார் யாருமில்லை!
2021ம் தேர்தல் இந்துக்களுக்கு ஒரு திருப்புமுனையாக மாற்ற வேண்டும். எங்களது கோவில் சொத்துக்களை எங்கள் இந்துக்களிடம் ஒப்படைக்கும் கட்சிக்கே எங்களது ஆதரவு என்று கூட்டம் சேர்ப்போம்! ஒன்றிணைந்து போராடுவோம். வழி வகுப்போம் இந்துக்களே…
கடவுள் கூட தங்கள் பக்தர்களை காப்பாற்றத்தான் வருவாராம்! துஷ்டர்களை அழிப்பது இரண்டாம் கட்டம் தானாம்.
கோயில் சொத்துக்களை காக்க வெற்றி கொடு! சக்தி கொடு என்று பிரார்த்திப்போம். களத்தில் இறங்குவோம் எம் சொந்தங்களே. யாதுமாகி நிற்கும் காளி துணை வருவாள் நிச்சயம்.

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்