ஹலோ ஒரு நிமிடம்…

சமத்துவ பொங்கல் கொண்டாடுவது போல ஒரு அப்பட்டமான துரோகம் இந்து மதத்திற்கு வேறு இல்லை. சமத்துவ பொங்கல் யார் கொண்டாடுகிறார்கள் என்று பார்த்தால் கிறிஸ்த்துவ, இஸ்லாமிய பள்ளி, கல்லூரிகளில் மற்றும் இந்த தமிழகத்தை பீடித்திருக்கும் அரசியல் வியாதிகள் மட்டுமே கொண்டாடுகின்றனர்.

இந்த பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் பெரும்பான்மை இந்து குழந்தைகளுக்கு பொங்கலை பற்றியும் தெரியாது. இந்து மதம் என்று தலை நிமிர்ந்து நிற்கவும் தெரியாது. அவர்களை சொல்லி குற்றமில்லை. சொல்லி வளர்க்காதது நமது தவறு தானே!!!

பொங்கல் என்பது அன்பு, நட்பு, நல்லிணக்கம் பேணவும், தமிழர்களுக்கான விழாவாகவும் கொண்டாடப்படுகிறது என்று விளக்கம் கொடுக்கபடுகிறது.

தமிழக அரசு ஒட்டு கணக்கு பார்த்து, எல்லோருக்கும் 2500 பொங்கல் பரிசு கொடுத்துள்ளது. அதாவது அனைத்து தமிழர்களுக்குமாம்!!!

பொங்கல் என்பது தமிழர் திருநாளாக மட்டுமே மக்கள் முன் நிறுத்த கடந்த 30 வருடங்களாக பாடுபடுகிறது திராவிட கழகங்கள்.

ஏன் என்று யோசிக்க வேண்டும். அபத்தமாக இருந்தாலும் எளிமையான வாதம்! தமிழர்கள் என்பவர்கள் இந்துக்கள் அல்ல.

தமிழர்களுக்கு மதமே இல்லை! தமிழர்களுக்கு அடையாளமே மொழி தான்!!

தமிழர் கொண்டாடும் விழாவான பொங்கல் கிறிஸ்த்துவர்களும் இஸ்லாமியரும் கொண்டாடுகின்றனரே… எனவே அவர்களும் தமிழரே…

அதனால் உன் பெயர் தமிழில் இல்லையே! உன் கடவுள் இந்நாட்டில் இல்லையே… உன் கடவுள் பாட்டு தமிழில் இல்லையே என்று யாரும் கேள்வி கேட்க கூடாது அல்லவா!!

இஸ்லாம் மதத்தினை சார்ந்த தமிழர் முழு இஸ்லாமியர் தான். அதே போல கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்ட தமிழரும் கிறிஸ்துவர் தான். ஆனால் இந்து மதத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மொழியால் மட்டுமே அடையாள படுத்தபடுவர். இந்துக்கள் இல்லை. அவர்கள் பச்சை தமிழகர்கள் மட்டுமே!

உனக்கு மொழி மட்டுமே அடையாளம்! இந்து மதம் அல்ல.! அப்போது தானே உன்னை மதம் மாற்ற முடியும்.

இந்து மதம் என்பது வெளியே இருந்து அதாவது ஆரியர் மூலமாக திணிக்கபட்ட அந்நிய மதம். ஆனால் ஆப்ரகாமிய மதங்களான கிறிஸ்த்துவம் மற்றும் இஸ்லாம் இங்கேயே தழைத்த மதம்.

பொங்கல் தமிழர் பண்டிகை என்றால் ஏன் இந்தியா முழுவதும் அவரவர் மொழியில், வேறு வேறு பெயர்களில், ஒரே மாதிரி ஒரே நேரத்தில் கொண்டாடுகிறார்கள்??

மகர சங்கராந்தி, பொங்கல் பிஹீ, லோகிரி என இன்னும் பல பெயர்களில் இந்த தைதிருநாள் இந்தியா முழுவதும் கொண்டாடுகிறது. நமது ஆன்மீகமும், பண்பாடும், கலாசாரமும் நிறைந்தது பொங்கல் விழா.

போகி என்பது இந்திரனுக்கு விழா… மழைக்கு நன்றி சொல்லும் விழா. பொங்கல் நாம் வணங்கும் சூரிய பகவானுக்கு நன்றி கூறும் பண்டிகை நமது குடும்பத்தில் ஒர் அங்கமாக பாவிக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் விழாவாக மாட்டு பொங்கல்.

உத்தராயண புண்ய காலம் தொடங்கும் நேரம் இது. சூரியன் வடக்கே செல்ல துவங்கும் முக்கியமான நாள். மகரத்திற்கு சூரியன் பிரவேசிக்கும் திரு நாள் இது. இனி வெயில் தொடங்கும் நேரம்.

இனி தான் எல்லா பண்டிகையும் துவங்கும்.

ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பாரம்பரிய வழக்கபடி பொங்கலை கொண்டாடுவார்கள். பல பெயர்கள், பல விதங்கள் ஆனால் பொங்கல் பண்டிகை என்பது இந்து மத பண்டிகை என்பதால் இந்தியா முழுவதுமாய் உள்ளது.

எங்கெல்லாம் இந்து மதம் இருந்ததோ அங்கெல்லாம் பெரும்பாலான நமது விழாக்கள் வேறு வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன என்பதே உண்மை.

இனி நமது வீட்டில் இருக்கும் பெரியோர்கள், ஆன்மீக சிந்தனையாளர்கள், சமூக வலை தளங்களில் நமது பண்டிகைகளைப் பற்றியும் அதன் காரணங்களையும் விளக்கி சொல்ல வேண்டியது மிக அவசியமானது.

நமது பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுவது பற்றி நாம் எதிர்க்கவில்லை. ஆனால் நமது இந்து பண்டிகையை, தமிழர் திருநாளாக மாற்றி எல்லோருக்குமானதாக மாற்றி நமது பிள்ளைகளின் மனதில் தான் ‘தமிழர்’ என்றே நினைக்க வைக்க வேண்டும். தன்னை ‘இந்து’ என்று அடையாளபடுத்தி கொள்ள கூடாது எனும் தீவீரவாத சதி திட்டத்தினை தான் நாம் எதிர்க்க வேண்டும். வேரறுக்க வேண்டும்!

50 வருட இந்த சாக்கடை அரசியலால் நமது தமிழ்நாடு தான் எவ்வளவு நலிவடைந்து விட்டது. வேதம் நிறைந்த தமிழ்நாடு இது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் நடந்த ஆன்மீக பூமி இது. சித்தர்கள் வாழும் பூமி இது.

இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று பஞ்ச் டயலாக் பேசி ‘டாடா’ காட்டி செல்லும் கூத்தாடிகள் நமக்கு தேவை இல்லை.

நமது ஆன்மீக குருமார்கள், நமது ஆதினங்கள் நமது கோயில் பூசாரிகள், நமது மடங்கள், எண்ணற்ற வேதம், வேதாந்தம் படித்தவர்கள் இனி பேச வேண்டும்.

நாம் யார்?? நமது தர்மத்தின் மேன்மை என்ன?? நமது பண்டிகைகள், நமது நம்பிக்கைகள் என உலகமே போற்ற துவங்கியுள்ள இந்து மதத்தின் சாரத்தை எளிமையாக இணையம் மூலமாக, பள்ளிகளில் கல்லூரிகளில், கோவில்களில், பண்டிகை காலங்களில் பேச தொடங்க வேண்டும். அதை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

அப்போது தான் இந்து தலைவர்கள் உருவாகும் வாய்ப்பு வரும். நமது இந்து மதத்திற்கு துணை நிற்பவர்களே நமக்கு முறையான அரசை தர முடியும் என்றும் பேசியே தீர வேண்டும்.

இல்லையென்றால் ‘‘நமது சனாதன தர்மம் தொன்மையானது. நமது இந்து மதம் சொல்லியிருப்பதை தான் இன்று விஞ்ஞான உலகம் ஒவ்வொன்றாக நிருபித்து கொண்டு வருகிறது என்று தெரியாமலேயே போய்விடும் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு….

ஹைட்ரஜன் ஆக்சைட் நுகர்ந்தால் கொரோனாவை தடுக்கலாம் என நவீன மருத்துவம் கண்டுபிடித்து, அதற்கான ஸ்பிரேயை விற்க தொடங்கி உள்ளனர்.

‘ஓம்’ என்று 20 முறை சொல்வதால் நமது மூக்கு துவாரங்களில் ஹைட்ரஜன் ஆக்சைட் உற்பத்தி ஆகி, கொரோனா போன்ற பல தொற்றுகளை தவிர்க்கிறது. இது தான் நமது சனாதன தர்மத்தின் மகிமை. அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வது நமது முக்கிய கடமை…

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்