ஹலோ ஒரு நிமிடம்…

சுதந்திரத்திற்கு முன்னர் எதிரிகள் நம் கோயில்களை கொள்ளையடித்து,

இந்துக்களை கொன்று, மதம் மாற்றி கொடுங்கோல் ஆட்சி செய்தனர்.

சுதந்திரம் பெற்ற பின்னால் துரோகிகள் இந்த சதிகார வேலையை
தொடர்ந்து செய்து வருவது தான் அக்கிரமம்.

நமது கோயிலின் நிலங்கள் மட்டும் 4 லட்சத்தி 85 ஆயிரம் ஏக்கர்கள் உள்ளன.

பொன், வைரம் விலை உயர்ந்த கற்கள், பஞ்சலோக சிலைகள் என கொள்ளையடித்தது போக மீதமிருந்த செல்வங்கள் இன்றும் களவு போய் கொண்டிருக்கின்றன.

அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 42,000 கோயில்கள் உள்ளன.

கோயில் உண்டியல் பணம் சுமார் 2000 கோடிகள்

திருக்கோயில் உண்டியல் பணம் வருடம் என்ன ஆனது?

உண்டியல் போக, மேலும் கீழ்கண்ட வருமானங்கள் வேறு உள்ளன:

நேர்த்திக்கடன்கள்,
திருக்கல்யாணம்,
தேர் இழுப்பு,
மொட்டையடித்தல்,
அர்ச்சனை,
அபிஷேகம்,
பிரசாத விற்பனை,

கோவிலைச் சுற்றிய வீதிகளில் இருக்கும் கடைகள் மூலம் வரும் மிகமிகக் குறைந்த குத்தகை.
இவையெல்லாம் எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. இந்து சமுதாய தலைவர்களுக்கு கூட விவரங்கள் தெரிவிப்பதில்லை.

இந்து ஆன்மீக படிப்பு என்பதே சரித்திரமாகி விட்டது. ஒதுவார்கள் கோயில் மணியக்காரர்கள், இசை வித்வான்கள் கதா காலட்சேபம் நாட்டியம் என எந்த கோயில் சார்ந்த கலைகளும் வளர்க்கபட வில்லை மாறாக அழிக்கப்பட்டு வருகிறது.

கோவில்கள் வழியாக வரும் வருமானம் போக சைவ ஆதீனங்களது சொத்துக்கள் வழியாக வரும் வருமானம் வேறு.

பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பல்வேறு சைவ ஆதினங்களுக்குச் சொந்தமானவை.
மேல்மருவத்தூர் கோவில் நிறுவனம் இந்தத் துறையின் கீழ்வராததால் விளைந்த நன்மைகள்:

பாலி டெக்னிக் கல்லூரி
இஞ்சினியரிங் கல்லூரி
மருத்துவப் படிப்புக்கல்லூரி, மருத்துவமனை

என மக்களுக்கு பக்தர்களின் காணிக்கை, சடங்குகள் வழி வருமானம் செலவிடப்பட்டிருக்கிறது.

காஞ்சி சங்கரமடம் மற்றும் மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஞ்சி காமாஷி கோவில் வருமானம் மற்றும் நன்கொடை வாயிலாக சங்கரா பள்ளிகள், சங்கரா கல்லூரிகள் என தமிழகமெங்கும் மக்களுக்கு உதவும் வழியில் செலவிடப்பட்டு வருகின்றன.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருமானத்தில்

ஒரு யூனிவர்சிட்டி, 25 கல்லூரிகள், கல்விநிலையங்கள்,

நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் என இறைவனால் கிடைக்கும் வருமானம் கல்விக்கு முழுமையாகப் பயன்படுத்துகிறது.

ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் இந்துமத கோவில்கள் மூலம் இத்தனை வருமானங்கள் வந்தும் நம்மால், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் என்று இந்து மக்களுக்குப் பயன்படுகிற மாதிரியான நல்லதைச் செய்வதில்லை. அப்படி கல்வி சாலைகளும், மருத்துவமனைகளும் கட்டி விட்டால் பின் ஏழை எளிய இந்துக்கள் மதம் மாற மாட்டார்களே!

2000 கோடிகளைச் செலவழித்து 50 கல்லூரிகள் கட்டலாம், பள்ளிகள் கட்டலாம். இந்து சமய வகுப்புகள் நடத்தலாம்.

படிப்புக்கு இட ஒதுக்கீடு அவசியப்படாமல் கேட்டால் படிப்பு கிடைக்கும் படி, இட ஒதுக்கீட்டையே இல்லாமல் ஆக்கிவிடலாம்.

மருத்துவமனைகள் பல கட்டி மக்களின் சுகாதார, ஆரோக்கியம் பேணலாம்.

இந்துக்கோவில்கள் மூலம் வரும் வருமானத்தை கடவுளே இல்லை, இல்லை, இல்லவே இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுளை பரப்புகிறவன் காட்டுமிராண்டி என்கிற கொள்ளைக்கூட்டமும், தமிழக அரசும் அதிகாரத்தில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்தபடியே, கொள்ளையடிக்கின்றன.

சதா சர்வ காலமும், பிராமண எதிர்ப்பு என்பதிலேயே மக்களை திசைதிருப்பி,
“காணிக்கையை உண்டியலில் மட்டுமே போடவும்” என்று அறிவிப்புப் பலகைகள் வைத்து, மிக மலிவாக கோவில் குத்தகைகளை கழகக் கண்மணிகளுக்கு விட்டு, எல்லாவகையிலும் மொத்தமாக கோவில் வருமானங்களான நிதியைக் கொள்ளையடிப்பது அரசும் அதன் துறையும்.

எனவே, திருகோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க வேண்டும்.

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்களைக் காப்பாற்றுவோம்!!

மதமாற்றத்தை தடுப்போம். இந்து மதத்தை பேணி பாதுகாப்போம்

இந்த இனிய புத்தாண்டில் நாம் ஒவ்வொருவரும் ஆலயம் காப்போம் என்று உறுதி கொள்வோம்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்