வெற்றி…

மதுரை கூடலழகர் ஸந்னதி அமைந்துள்ள தெருவின் அருகே வானமாமலை மடத்திற்கு சொந்தமான நம்பிள்ளை ஸந்னதி இருந்துவந்தது. சுமார் 50 வருடங்களுக்கு முன் திராவிட கட்க்ஷி பிரமுகர் ஒருவரால் ஆக்ரமிக்கபட்டு, கோபுர மாடங்கள் இடிக்கபட்டு லாட்ஜ் ஒன்று கட்டப்பட்டது.

இதை மீட்பதற்கு திரு அப்பாதுறைய்யங்கார் என்ற ரீவைஷ்ணவர் (கூடலழகர் கோவில் அத்யாபகர்) நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியாக தனி ஒரு மனிதனாக 30 வருடங்களாக போராடி நீதி மன்ற தீர்ப்பை வெற்றிகரமாக பெற்று, கடந்த வாரம் நீதிமன்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்புகாரர்களை அகற்றிவிட்டு கோயில் Possession ஐ பூட்டு சாவியோடு திரு அப்பாத்துரை அய்யங்காரிடம் கொடுத்தனர்.

தனது 83 வது வயதிலும் அயராமல் உழைத்து செலவு பாராமல் நீதிமன்றம் சென்று கோயிலை மீட்ட அந்த மஹானை திவ்ய தம்பதிகள் கடாஷித்து இன்னும் பல கைங்கர்யங்களை பெற்று கொள்ளவேணுமாய் ப்ராத்திப்போமாக. Possession வாங்கும் வீடியோ காட்ஷியை அடியார்கள் எல்லோரும் கண்டு மகிழவும். 30 வருடங்களாக திருவாரதனமின்றி இருந்த நம் ஆச்சார்யரான நம்பிள்ளை விக்ரகமும் அவரது திருவாரதன பெருமாளும் இங்கே காணலாம். இனி ஸம்ரோஷணம்/ நித்ய திருவாரதனம் செவ்வனே நடைபெற கூடல்மாநகர் எம்பெருமானை ப்ரார்திப்போம்