1100 ஆண்டுகள் முன்னர் தன் நாட்டு எல்லையில் எதிரியின் தொல்லை அதிகம் இருந்ததால், அரசன் தன்னுடைய மகனிடம் எதிரியிடம் போர் புரியச் சொல்லி உத்தரவிடுகிறார்.
தந்தையின் உத்தரவை மதித்து இளவரசன் தன் நாட்டு படைகளுடன் எதிரி நாட்டை நோக்கி பயணப்படுகிறான்.
படைகள் பயணித்து, தன்னுடைய சொந்த நகரை விட்டு நகர்ந்து எதிரியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
நகர்ந்து கொண்டே சென்ற அந்த படை, ஒரு நாள் நகருக்கு வெளியே ஒரு இடத்தில் முகாமிட்டு தங்குகின்றது. போருக்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் முகாமில் தங்கியிருந்த படை வீரர்களிடம் வேறு ஒரு பணியைச் செய்யச் சொல்லி உத்தரவிடுகிறான் அந்த இளவரசன், ஒரு ஏரியை வெட்ட சொன்ன இளவரசன் காவிரியில் வெள்ளம் வரும் காலங்களில் அந்த நீர் வீணாக சென்று கடலில் கலக்கின்றதே என்று வருந்திய இளவரசன், அந்த நீரை சேமிக்க எண்ணி அந்த படை வீரர்களிடம் ஒரு பெரிய ஏரியை அங்கு வெட்டச் சொல்லி உத்தரவிடுகிறான்.
வீர நராயணன் பெயரை சூட்டிய…
இளவரசனின் உத்தரவை ஏற்று படை வீரர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பெரிய ஏரியை பல மாதங்களாக உயிரை கொடுத்து அந்த படை வீரர்கள் வெட்டி முடிக்கிறார்கள்..
வெட்டி முடித்ததும் தன்னுடைய தந்தையான முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயரான வீரநாரயணன் என்று பெயர் வைக்கும் படி கூறிவிட்டுச் போருக்குச் சென்றுவிடுகிறான்.
இன்றும் தமிழகத்தை வளப்படுத்தும் ஏரி…
வெட்டிய அந்த ஏரியை பார்க்க அவர்களின் இளவரசன் உயிரோடு இல்லை. போருக்கு சென்ற இளவரசன் எதிரிகளிடம் வீரமாக போரிட்டு யானை மீது இருந்தவாரே இறந்து விடுகிறான்.
யானை மேல் துஞ்சித்த தேவன்
ஆனால் அவன் வெட்டுவித்த ஏரி இன்றும் உள்ளது, ஏரி வெட்டப்பட்டு 1100 ஆண்டுகள் ஆகின்றது, சென்னையில் வாழும் ஒன்றரை கோடி பேருக்கு இன்றைக்கும் குடிக்க நீரை தந்துகொண்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல ஊர்களுக்கு குடிநீரை விநியோகிக்கின்றது. இந்த ஏரியின் மூலமாக அந்த மாவட்டமே பயிர் செய்து பிழைகின்றது. ஆம் அது தான் “வீராணம் ஏரி” என்கின்ற “வீரநாராயணன் ஏரி”.வெட்டச் சொல்லி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டவன் தக்கோலப் போரில் வீர மரணமடைந்து “யானை மேல் துஞ்சிய தேவன்” என்று போற்றப்பட்ட “இராஜாதித்ய சோழன்”..