பணம் பறிப்பு,ரவுடிசம்,கட்டபஞ்சாயத்து
தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் வீடு கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறேன். குன்றத்தூரில் சுமார் 53 ஏக்கர் நிலம் வாங்கி, அந்த இடத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கினேன்.
அப்போது, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என் நிலத்துக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து பணம் கேட்டனர். அதற்கு நான் சம்மதிக்காததால், என்னையும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களையும் மிரட்டுகின்றனர்.
எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் கமிஷனருக்கும், ஆவடி துணை போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட வேண்டும்“ என்று தெரிவித்து இருந்தார்
உத்தரவு
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், “குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்தவர்கள் நிலத்தை அபகரிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர் என்று ஏராளமான புகார்கள் வருகின்றன. பொதுமக்கள் நலனுக்காக பாடுபட அரசியல் கட்சி நடத்த வேண்டும். நில அபகரிப்பு வேலைகளில் ஈடுபடக்கூடாது.
காவல் துறை ஏன்மந்தம்
மனுதாரர் இதுகுறித்து புகார் செய்தபோது காவல் துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தங்கள் கட்சித் தொண்டர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்த இதுவே சரியான நேரமாகும். தவறினால், பொதுமக்கள் மத்தியில் உங்கள் கட்சிப் பெயருக்கு குந்தகம் ஏற்படும்.
தேர்தல் செலவுக்குப் பணம் கேட்பது, அடுத்தவர் நிலத்தை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
நீதி மன்றம் சும்மா இருக்காது
மனுதாரரின் நிலத்தில் அந்த அரசியல் கட்சியை (விசிக-வை) சேர்ந்தவர்கள் மனுதாரர் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்து, அதில் பந்தல் அமைத்து, நாற்காலிகளை போட்டு உட்கார்ந்துள்ளனர். இதுபோன்ற சட்ட விரோத செயல்களை எல்லாம் இந்த சென்னை உயர்நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்காது.
மனுதாரருக்கு ஆவடி துணை போலீஸ் கமிஷனர் உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும். நில அபகரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளார்.
பல புகார்கள் வந்துள்ளன…
ஏற்கனவே இது போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடும் அளவிற்கு, அவர்களின் சமூக விரோத செயல்கள் தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
இவ்வளவும் மெஜாரட்டியான மக்களுக்கு பல வருடங்களாக தெரிந்தும் இந்த கட்சிக்கு ஒட்டு போடும் மக்களை என்ன என்பது..?
இந்த கட்சியை கூட்டணி சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி..நான் வெற்றி பெற்றால் நல்ல ஆட்சியை தருவேன் என்பதும் விந்தையல்லவா..?
மனுதாரருக்கு பாதுகாப்பு மட்டும் வழங்கினால் போதும்..?
“குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்தவர்கள் நிலத்தை அபகரிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர் என்று ஏராளமான புகார்கள் வருகின்றன”என்று கூறும் நீதமன்றம் இது வரை எடுத்த நடவடிக்கை என்ன.?