ரம்ஜான் என்றாலே மதுரா ஸ்ரீகிருஷ்ணர் கோவில் நினைவுகள்…

இந்தியாவுக்குள் நுழைந்த கஜினி முகம்மது, இந்த கோயிலை கொள்ளையடித்து அங்கிருந்து செல்வங்களை ஒரு மைல் நீளமுள்ள குதிரை படைகள் மூலம் கொண்டு சென்றான்.

யது குல வம்சத்தின் வசுதேவர் – தேவகி மகனாக அவதரித்தவர் ஸ்ரீ கிருஷ்ணர். உத்திரபிரதேச மாநிலத்தின் மதுராநகரில் உள்ள கேசவ் தேவ் எனுமிடம்தான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்து சிறைவைக்கபட்ட இடம். இந்த இடத்தில் ஸ்ரீ கிருஷணரின் பேரன் வழி மன்னர் வஜ்ரனபா மிகப்பெரிய பிரமாண்டமான கோயில் எழுப்பினார்.

கொள்ளை

அந்த கோயிலில் 6- ஆம் நூற்றாண்டில் புத்த மத சின்னங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டது . இந்தியாவுக்குள் நுழைந்த கஜினி முகம்மது, இந்த கோயிலை கொள்ளையடித்து அங்கிருந்து செல்வங்களை ஒரு மைல் நீளமுள்ள குதிரை படைகள் மூலம் கொண்டு சென்றான். அதே போல் 1489-1517 வரை டெல்லி மன்னன் சிக்கந்தர் லோடி ஐங்கு வந்து பலமுரை கொள்ளையடித்து சென்றதுடன் இங்கு குளிக்கவும், தலைமுடியிறக் கவும் தடை செய்தான்.

புதிய கோயில்

பல ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசா மன்னர் வீர்சிங் தேவ மண்டேலா 1618- லேயே 33 லட்சம் செலவழித்து மிகமிக பிரமாண்டமான கோயிலை கட்டினார். இந்த கோயிலுக்கு ஷாஜஹான் – மும்தாஜின் மகனான தாராசிக்கோ மட்டும் வேலியிட்டு கோவிலுக்கு ஆதரவளித்தான். இதே தாராசிக்கோ உடன்பிறந்த ஒளரங்க்சீப்பா கொல்லப்பட்டான்.

கொடூரன் ஒளரங்கசீப்

ஒள்ரங்கசீப் உத்தரவின் பேரில் அப்துல்நபிகான் என்ற தளபதி, 1670- ல் ரம்ஜான் தினத்தில் அந்த கோயிலை முற்றிலுமாக தகர்த்து, பெரிய மசூதியை கட்டினான்.கோயிலில் கொள்ளையடித்த கோடானுகோடி லட்ச மதிப்புள்ள நகைகளை எடுத்து கொண்டதுடன், இங்குள்ள விக்ரகங்களை, தான் கட்டிய மசூதியின் படிக்கட்டுகளில் இட்டு புதைத்தான்.

மீண்டும் ஒரு கோயில்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த இடம் ஏலம் விடப்பட்டது. அதை ராஜாபடினிமால் என்ற செல்வந்தர் அந்த பகுதியில் ஒரு முக்கிய இடத்தை வாங்கினார். பின்னர் அங்கு டால்மியா, பிர்லா உதவியுடன் புதிய கிருஷ்ணர் கோயில் கட்டினார்.
ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த பூர்வீகமான இடம் மசூதியாயிருக்க, அருகில் இப்போது சிறிய புதிய கோயில் உள்ளது.
ரம்ஜான் தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் தகர்க்கப்பட்டதை இந்துக்கள் இனி நினைவு கொள்ள வேண்டும்!