மீண்டும் வருவாய் நண்பரே!

டிரம்பர் மேல் ஆயிரம் சர்ச்சைகள் வைக்கப்பட்டாலும் அமெரிக்க அதிபர்களில் மிக துணிச்சலான அதிபர்களில் ஒருவர் என பெயர் எடுத்துவிட்டார், கென்னடிக்கு பின் மகா துணிச்சலான முடிவுகளை எடுத்து அமெரிக்க நலம் காத்தவர் என வரலாற்றில் அவர் பெயர் நிலைத்துவிட்டது
இதனால்தான் அமெரிக்க மரபையும் மீறி மக்கள் அவருக்காக போராடிகொண்டிருக்கின்றனர், அது விதிகளுக்கு முரணானது எனினும் அவர் அமெரிக்கர்களுக்கு செய்த நல்ல விஷயங்களுக்கான அங்கீகாரமும் அதுவே.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ தான் லீலைகள் பல புரிந்து டிரம்பின் வெற்றியினை தட்டிவிட்டது என நம்பலாம். ஏனென்றால் அதிபர் டிரம்ப் முதலில் அமெரிக்காவினை காப்போம். பிறகு மற்ற நாடுகளை பாதுகாக்க புறப்படுவோம் என்றதோடு இல்லாமல், தனது 5 வருட பதவி காலத்தில் ஒரு போரிலும் ஈடுபடவில்லை.
இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் அநாவசியமாக ஈடுபடுவது தேவையற்றது. முதலில் அமெரிக்கர்களுக்கு வளமும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படுவது தான் முதன்மை கடமை என்ற கொள்கையில் இருந்தார்.
அமெரிக்காவிலும் அதிபர் பதவியினை ஆட்டுவிக்க ‘‘போர் முகாம் குழு’ உள்ளது. உலக அமைதியை விரும்பும் ஒரு அதிபரா? என்று கோபத்தில் டிரம்ப் வீழ்த்தப்பட்டுள்ளார்.
இப்போது மறுபடியும் பழைய சகஜ நிலமை திரும்பிவிட்டது என்றே கூறலாம்.

உன்னத அதிபர்

டிரம்பர் அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடு என்பதில் சரியாக இருந்தார், வெள்ளை மாளிகையில் அதிகாலையில் பைபிள் படிக்கும் வழக்கத்தை கொண்டுவந்திருந்தார், கிறிஸ்தவம் சரியா தவறா என்பதல்ல விஷயம் தன் மக்களுக்கு நல்ல தலைவனாக ஆன்மீக வழியினை காட்டினார்
இந்த ஓரினசேர்க்கை, போதை பொருள் கோஷ்டிகளுக்கு அவர் சவாலாக இருந்தார், கடல்வழியில் அமெரிக்காவுக்குள் போதை மருந்து வருவதை தடுத்த அவர், நிலவழியான மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டவும் தயங்கவில்லை
அமெரிக்க நலம் காப்பதில் எந்த எல்லைக்கும் அவர் சென்றார், அவரின் பல திட்டங்களால் உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்தது என்பதை மறுக்க முடியாது

குடியேறிகளுக்கு கட்டுபாடு

இஸ்லாமிய நாடுகள் முதல் பலருக்கு கட்டுப்பாடு, சீனாவில் இருந்து அமெரிக்கா வந்து குழந்தை பெற்று அக்குழந்தைக்கு அமெரிக்க குடியிரிமை என அமெரிக்க சட்டத்தில் இருந்த ஓட்டைகளை அடைத்து, குடியேரிகளுக்கு கட்டுபாடு வைத்து அமெரிக்க நலனை காத்தார்
அமெரிக்கர்களுக்கு அது நிச்சயம் மிகபெரிய வரவேற்பான திட்டம், அதில் சந்தேகமில்லை
அமெரிக்கா அறிமுகபடுத்திய தாராளமயமாக்கலால சீனாவும் இன்னும் பல நாடுகளும் வளர அமெரிக்கா சுரண்டபடுவதை அனுமதிக்க முடியாது என்பதில் சரியாக இருந்தார்.
இதில்தான் சீனாவினையே பகிரங்கமாக எதிர்த்தார், அதில் அமெரிக்க நலன் எவ்வளவோ காக்கபட்டது

அரபு நாட்டில்…

அரேபிய பகுதியில் டிரம்பரின் ஆட்டம் அலாதியானது, சிரியசிக்கலுக்குள் ரஷ்யாவினை இழுத்துவிட்டு அந்த அழிச்சாட்டிய கும்பலை அடக்கினார், ஆப்கனின் ஹக்கானி குழு, ஏமனின் ஹவுத்தி குழு எல்லாம் அவரால் அடக்கபட்டன‌

70 வருட மோதல்

அமெரிக்க நலன் உலக அமைதி என அதிரடியாக காத்த டிரம்ப், சீனாவின் முகமூடியான வடகொரியாவினை தூக்கி போட்டு மிதித்து அடக்கினார். டிரம்ப் இருந்தவரை வடகொரிய குண்டான் பாதாள அறையினை விட்டு வெளியே வரவில்லை
ஏதோ குண்டனுக்கும் டிரம்புக்குமான மோதல் அல்ல அது, அமெரிக்காவுக்கும் தென்கொரியாவின் கிம் குடும்பத்துக்குமான 70 வருட மோதல் அது, அதில் அமெரிக்க கையினை ஓங்க வைத்து குண்டனை அலற வைத்தவர் டிரம்ப்

ரஷ்யா

புட்டீனுக்கு சரிநிகர் சவாலை அவரால் கொடுக்க முடிந்தது, கியூபா தீவு பக்கம் ரஷ்யா கால் ஊன்றாமல் பார்த்து கொண்டார், காலடியில் வெனிசுலாவில் ரஷ்ய தலையீட்டால் ஆபத்து வராமல் தற்காத்தார்
வெனிசுலா பக்கம் ரஷ்யா வந்தால் ரஷ்யாவின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கம் அமெரிக்கா கால்பதிக்கும் என செய்தும் காட்டினார்

ஈரானை அடக்கினார்

உலக அளவில் எவ்வளவோ பெரும் தாக்கத்தை கொடுத்த டிரம்ப், ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான 40 ஆண்டுகால யுத்ததில் ஈரானின் முகத்தில் கரியினை பூசி மண்டையில் அடித்த முதல் ஜனாதிபதி
ஆம், ஈரான் அமெரிக்க மோதல் 1980களில் தொடங்கியது அந்த அயதுல்லா கோமேனி அமெரிக்க தூதரகத்தை சிறைபிடித்தத், லெபனானில் அமெரிக்க தூதர் கோரமாக கொல்லபட்டது, லெபனானில் ஒரே நாளில் அமெரிக்க படையினர் 300 பேர் கொல்லபட்டது உச்சமாக அமெரிக்க விமானங்களையே கடத்தி தீவிரவாதிகள் கப்பம் கோரியது என்பதெல்லாம் 1980களின் அமெரிக்க தலைகுனிவுகள்
ரீகனின் காலம் அப்படி இருந்தது, பல மில்லியன் டாலர்களை கொட்டி பணிந்துதான் அமெரிக்கா சிக்கலை முடித்தது

சீனாவை விரட்டியவர்

அமெரிக்க சந்தைகளில் இருந்து சீனாவினை விரட்டி அடித்தவர் அவர்தான், ஹூவாய் நிறுவனரின் மகளை கூட பிடித்து வைக்க அவர் தயங்கவில்லை
அந்த ஈரானின் பெரும் புள்ளியான சுலைமானியினை ஈரானில் தூக்கியது 40 ஆண்டுகால கோபத்தின் அமெரிக்க வெளிப்பாடு, டிரம்பர்தான் அதை செய்தார்.

இந்தியாவின் நண்பர்

கென்னடிக்கு பின் இந்தியாவினை நெருங்கிய முதல் அதிபர் டிரம்பர்தான்
அவரால்தான் பல விஷயங்கள் இந்தியாவுக்கு அனுகூலமாயின, டிரம்பர் இடத்தில் இன்னொரு அதிபர் இருந்தால் காஷ்மீரிய இணைப்பு சாத்தியமில்லை, டிரம்ப் இந்தியாவின் நியாயத்தை உணர்ந்திருந்தார்
இந்தியா செய்த மாபெரும் சாதனை செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகனையினை சோதித்தது, அணுகுண்டை போல அச்சமாக பார்க்கபடும் சாதனம் அது. அதை இந்தியா சோதித்தபொழுதும் டிரம்ப் அனுமதித்தார்
ரஷ்ய எஸ் 400 சாதனம் இந்தியாவுக்கு வர அமெரிக்காவில் சில சலசலப்புகள் இருந்தபோதும் சீனாவிடம் அவ்வகை ஆயுதம் இருக்கும்பொழுது இந்தியாவிடமும் இருப்பதுதான் சரி என இந்தியாவினை காத்தவர் டிரம்ப்
உச்சமாக பால்கோட் தாக்குதலில் இந்தியாவின் நியாயம் உணர்ந்து அதை கொஞ்சமும் கண்டிக்காமல் இந்திய ஆதரவு நிலையினை எடுத்தவர்
பாகிஸ்தான் எனும் ஒருமாதிரியான ஆட்டகாரிக்கு முந்தைய அமெரிக்க அதிபர்கள் அள்ளி கொடுத்து கொடுத்து அவளை தன் வழிக்கு கொண்டுவர முயன்றபொழுது அவள் மண்டையில் தட்டி சல்லிகாசு கிடையாது ஓடிபோ என விரட்டி அடித்தவர் டிரம்பர்
உச்சமாக சீனா இந்தியாவினை அடித்தால் கேட்பாரில்லை என கடந்த ஜூலைமாதம் போர் என வந்தபொழுது இந்திய அரசுக்கு பகிரங்க ஆதரவு என வந்தார் டிரம்பர்
அமெரிக்க போர்கப்பல்கள் தென்சீன கடல் பசிபிக் கடலில் நுழைய, அமெரிக்க விமானங்கள் வட்டமிட சீனா பின்வாங்கிற்று
மேற்கொண்டு இந்தியாவுடன் ஒப்பந்தம் பல செய்தார் டிரம்ப் இதனால் பல நவீன கருவிகளும் தொழில்நுட்பமும் இந்தியாவுக்கு கிடைக்க தேசம் பலமாயிற்று
இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களில் இந்திய நலனை அதன் நியாயம் உணர்ந்து காத்து தர்மவழியில் ஆதரித்த ஒரே அதிபர் டிரம்பர்தான்
அரேபியா இந்தியா இடையே உறவுகள் வெகு நெருக்கமாக வளர வழிசெய்தவரும் அவர்தான்
சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறும் நேரம், பல பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறும் நேரம் இந்தியா நமக்கு உவப்பான நாடு என கைகாட்டியவர் அவர்தான்
இதுவரை அமெரிக்க அதிபர்கள் இந்தியாவுக்கு எதிராக செய்த மொத்த துரோகத்துக்கும் பரிகாரம் தேடிய மாமனிதன் மனசாட்சியுள்ள ஜனாதியாக டிரம்பர் விளங்கினார்.
டிரம்பருக்கு அமெரிக்காவில் ஏக வரவேற்பு இருந்தது, இன்றும் அவருக்கான பெரும் ஆதரவு உண்டு. ஆனால் கொரோனா விவகாரம் ஒன்றுதான் அவருக்கு எதிரானது
ஆம் அது பறவை காய்ச்சல் போல சாதாரணமாக கடந்துவிடும் என்றுதான் கருதினார், சார்ஸ் எபோலா மிரட்டல் போல அது கடந்துவிடும் என சாதாரணமாக கருதினார்
ஆனால் யாரும் எதிர்பாரா வண்ணம் அது மிகபெரிய தாண்டவம் ஆட அதில்தான் டிரம்பின்மேல் எதிர்கட்சிகள் அரசியல் செய்தனர்.
இல்லாவிடில் இப்பொழுதும் அவர்தான் வந்திருப்பார்.

டிரம்பின் வெற்றி

இப்பொழுது ஆட்சிமாற்றம் நடக்கும் நேரம், ஒவ்வொரு துறையின் புதிய அமைச்சர்களும் தங்கள் துறையின் பொறுப்புகளை வாங்கி கொண்டு அதில் டிரம்பரால் நாட்டுக்கு வந்த நன்மைகள் என்ன? அப்படி இல்லாவிட்டால் மாற்றவேண்டும் என கவனமாக படித்து கொண்டிருக்கின்றனர்
அதில் ஆவணங்கள் மிக தெளிவாக டிரம்ப் நாட்டுக்கு செய்த நன்மைகளை சொல்கின்றன‌
டிரம்பரின் சீனா தொடர்பான விஷயங்களில் நாட்டுக்கு நலம் சேர்ந்ததை அடுத்து அதுதான் தொடரவேண்டும் சில ஆண்டுகளாவது தொடரவேண்டும் என்கின்றது புதிய ஆலோசனை குழு
இது ஒவ்வொரு துறைக்கும் பொருந்துகின்றது, டிரம்ப் செய்ததை மாற்ற கூடாது!
சில ஆண்டுக்காவது தொடரவேண்டும் என்கின்றார்கள் டிரம்பினால் தேசம் அடைந்த நன்மையினை கண்டவர்கள்…
ஆம், இதுதான் டிரம்பின் வெற்றி, மாபெரும் வெற்றி

பிடனின் தொடக்கம்…

எனினும் தேர்தல் வாக்குறுதிபடி பிடன் சில விஷயங்களை செய்யவேண்டும், அதை அவரே அறிவித்தும் விட்டார்
ஆம் அவரின் முதல் நாள் முதல் கையெழுத்தே உலகெங்குமுள்ள இஸ்லாமியரும் இதர மக்களும் அமெரிக்காவுக்குள் தங்கு தடையின்றி வரலாம் என்பதே.
இது போக ஏகபட்ட குடியுரிமைகளும் இன்னும் பலவும் சொந்தமக்களுக்காக திறந்துவிடபடும், டிரம்ப் எனும் இரும்பு தலைவன் இருந்தவரை யாரின் எதிர்பார்ப்புமின்றி தனிகாட்டு ராஜாவாக எதிரிகளை பந்தாடினார்
ஈரான்,சீனா, வடகொரியா என அவர் யாரையும் எதிர்பார்க்காமல் மிரட்டினார், ஆனால் பிடன் ஐரோப்பிய யூனியன் தலைவர்களிடம் ஆலோசனை கேட்பார் அவர்கள் சொதப்பிவிடுவாகள்
இருந்து பாருங்கள் இப்பொழுது டிரப்மருக்கு 74 வயதுதான் ஆகின்றது, அடுத்த தேர்தலில் அவருக்கு 78 வயது ஆகிவிடும்

மீண்டும் டிரம்ப் வருவார்

இந்த பிடன் கோஷ்டியும் கமலா ஹாரிஸ் கோஷ்டியும் செய்யபோகும் அழிச்சாட்டியத்தில் அமெரிக்கா பல வகையில் சரியும், மாபெரும் குழப்பமும் எதிர்ப்பும் அங்கு ஏற்படும்
ஆம் இதுவரை அவர்களுக்கு உதாரணம் காட்ட ஆளே இல்லை, இனி பிடனின் ஒவ்வொரு முடிவும் டிரம்ப்பின் முடிவோடு ஒப்பிடபட்டு அவர் இருந்தால் இப்படி நடக்குமா என ஏங்க வைக்கும்
அது அடுத்த தேர்தலில் டிரம்பரை மீண்டும் அழைத்து வரும், நிச்சயம் அழைத்து வரும்
டிரம்ப் எனவர் அமெரிக்கா யாருக்கும் பணியாது, தன் குடிமக்களில் ஒருவரையும் கைவிடாது என சீறி நின்ற கென்னடியின் சாயல்
இரண்டாம் உலகபோரில் தம்மாதுண்டு ஜப்பானெல்லாம் எம்மை மிதிக்க நினைப்பதா என அடிமேல் அடித்து அதை நொறுக்கி போட்ட தளபதி மெக் ஆர்தரின் சாயல்
டிரம்பர் இப்பொழுது 4 வருட விடுமுறையில் செல்கின்றார், அதன் பின் அவர் நிச்சயம் வருவார், அவருக்கான உடல்நலத்துக்கு வேண்டிகொள்வது இந்தியரின் கடமை
ஓய்வுக்கு செல்லும் டிரம்பருக்கு ஓய்வுநாள் வாழ்த்துக்கள், டிரம்ப் மறுபடியும் வருவார்! சீறிவருவார் அப்பொழுது அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவும் வளம்பெறும்
அந்த புலி ஓய்வெடுக்கட்டும், பின்வாங்கி முன்சீறும் சுனாமி போல அவர் கொஞ்சம் ஒதுங்கிவிட்டு இனி உள்ளே வரட்டும்
தைரியமும் ஆளுமையும் மிக்க இரண்டாம் கென்னடியினை முதல் இன்னிங்க்ஸ் முடிந்து பெவிலியன் திரும்பும் அவரை கைதட்டி வாழ்த்தி அனுப்பி வைக்கின்றது உலகம்.
அதில் இந்தியா நன்றி கண்ணீருடன் அனுப்பி வைக்கின்றது, காரணம் இந்தியாவுக்காக அவர் அடித்த சிக்ஸர்கள் அப்படி, இந்தியாவுக்காக அவர் எடுத்து கொடுத்த விக்கெட்டுகளும் அப்படியானவை.
சென்று வா எங்கள் அருமை நண்பரே…
நலன் குறையாது ஓய்வெடுத்து மீண்டு வருவீர்கள்.. நிச்சயமாக…