ப்ரும்ம குமாரீஸ் வாழ்நாள் அனுபவம்

கலை, இலக்கியம், மனிதம் எனும் அற்புத வலையால்
பின்னப்பட்டவர் தான்
ஆடிட்டர் திரு.ஜே.பாலசுப்பிரமணியன் அவர்கள் போலும். மனித நேயமிக்க அவரது சேவைகள் இதற்கு சாட்சி.

இவரது கல்விக்கும், மருத்துவ சேவைக்குமான சாவித்திரி அறக்கட்டளை 25 வருடங்களாக அவரது தாயாரின் அன்பு நினைவலைகளோடு உருண்டோடி உள்ளது. கலை, இலக்கிய சேவைக் கென உள்ள இவரது ஜே.பி.கிரியேஷன்ஸ் பல அரிய புத்தகங்களை வெளிக்கொணர உதவியுள்ளது. பல கலை செல்வங்களை நமக்கு அளித்துள்ளது.
சமீபத்தில் இவரது சேவையைப் பாராட்டி உலக அரங்கில் புகழ்பெற்ற குலோபல் பீஸ் பல்கலை இவருக்கு முனைவர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது.

பிரும்ம குமாரீஸ் அமைப்பு பற்றி…

பிரும்ம குமாரீஸ் என்ற அமைப்பு 1907ம் வருடம், ப்ரும்ம பாபா (இயற்பெயர் தாதா லேக்ராஜ்) அவர்களால் கராச்சியில் துவங்கப்பட்டது. தற்சமயம் இந்த அமைப்பின் தலைமை செயலகம் ராஜஸ்தானில் மவுண்ட் அபுவில் உள்ளது. 140 நாடுகளிலிருந்து செயல்படும் இந்த அமைப்பு, உலகம் முழுவதும் 8,800 மையங்கள் உள்ளன.

முக்கிய குறிக்கோள்

இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள், இந்த உலகத்தில் உள்ள அனைவரும் கடவுளின் குழந்தைகளே என்னும் உண்மையை புரிய வைப்பதாகும். மேலும், இந்த பிரபஞ்சம் கலியுகத்தின் கடைசி பாதத்தில் இருப்பதாகவும், விநாசத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிப்பதாகும்.

ஆழ்ந்த தத்துவம்

இது மட்டுமல்லாமல், இந்த உடல் என்பது நான் அல்ல, இது அழியக்கூடியது, இரண்டு புருவத்தற்கு மத்தியில் உள்ள ஜோதி ஸ்வரூபமான ஆத்மா தான் நாம் என்பதையும் உணர்த்துவதாகும். பல பிறவிகளில், நாம் மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் செய்த தீய செயல்கள் காரணமாக அந்த ஜோதி மங்கிய நிலையில் உள்ளது. அதை மீண்டும் பிரகாசிக்க வைக்க முனைய வேண்டும். அந்த ஆத்மாவை ஒளி பெற செய்ய, ஞான மார்கத்தையும், ராஜயோகத்தையும் போதிக்கும் தலையாய பணியை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறது இந்த ‘ப்ரும்ம குமாரீஸ்’
ப்ரும்ம குமாரீஸ் அமைப்பின் முதல்வர்
ஆதிபகவனான சிவபெருமான், இந்த அமைப்பை உருவாக்கிய ப்ரும்ம பாபா அவர்களின் உடல் மூலம் செயல்படுகிறார் என்பது நம்பப்படுகிறது. சர்வ விநாசம் ஏற்படுவதையும் அதன் பின் ஏற்படப்போகும் அதி ரம்யமான சத்யுகத்தையும் ப்ரும்ம பாபா வெவ்வேறு காட்சிகளாக பார்த்தார் என்றும் கருதபடுகிறது. அந்த சத்யுகத்திற்கு எல்லோரையும் அழைத்து செல்லும் வழிகாட்டியாக ப்ரும்ம பாபா இருக்க வேண்டும் என்பது சிவபெருமானின் ஆஞ்ஞை என்று சொல்லப்படுகிறது.
ஒன்றே குலம்
இந்த உணர்வோடு, இந்த லட்சியத்தோடு செயல்பட ஆரம்பித்த ப்ரும்ம பாபா நிருவியது தான் ‘ப்ரும்ம குமாரீஸ்’. எவ்விதமான வேறுபாடோ, பாகுபாடோ இந்த அமைப்பில் கிடையாது. சொல்லப்போனால், அறிவார்ந்த சிந்தனையுடன், ஞான மார்க்கம் மூலமாக எல்லோரும் பரம்பொருளை, அந்த ஆத்மாவை உணர வேண்டும் என்பதே இந்த அமைப்பின் அவா.
இத்தகைய உயர்ந்த சிந்தனையையும், சித்தாந்தத்தையும் மையமாக கொண்டு உருவாகி கொண்டிருக்கும் மேடை நாடகம் தான் ‘ப்ரும்ம குமாரீஸ்’
இந்த நாடகம் எப்போது வர உள்ளது?
இந்த நாடகம் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி ‘மயிலாப்பூர், ஃபைன் ஆர்ட்ஸிலும், தொடர்ந்து 4ம் தேதி வாணி மஹாலிலும் மேடையேற இருக்கிறது. இரண்டு நாளும் மாலை 6.45க்கு நாடகம் துவங்கும்.
மேலும் இந்த மேடை நாடகம் வெள்ளி திரையிலும் மின்ன உள்ளது என்பதுதான் சிறப்பு.
இந்த நாடகத்தை எழுதி இயக்கியுள்ள பாம்பே சாணக்யா மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இயக்குநர் சிகரம் பாலச்சந்தருடன் பல வருடங்கள் பணிபுரிந்தவர். இவரது நாடகங்கள் புகழ் பெற்றவை. இவரது குழுவினரின் திறமையால் இந்த நாடகம் அமரத்துவம் பெறும் என்பது நிச்சயம்.
மக்கள் இந்த நாடகத்தைப் பார்த்து, தங்கள் வாழ்க்கையில் அமைதியை, தேடிய விடைகளை தங்களை பற்றிய ஆழ்ந்த புரிந்துணர்வை அடைய வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம்.
சமூகத்திற்கான அவரது அக்கறை நம்மை வியக்க வைக்கிறது.
நன்றி ஜேபி அவர்களே….
ராஜ யோகா
தியானம் என்பது அமைதி காணும் ஓர் அனுபவம் மட்டுமல்ல. சூழ்ந்த அந்த அமைதியே நான்தான் எனும் பேருண்மையை அறிவது. ராஜயோகா என்பது எளிமையான தியான முறை, உடலை வருத்தி செய்ய வேண்டியது இல்ல. நமது ஆழ் மனதை, நமது எண்ணங்களை நமது அறிவை புரிந்து கொள்ளும் ஒரு முறையே.
அமைதி தேடியோ, ஆக்கப்பூர்வமான சக்தி தேடியோ தன்னை அறிந்து கொள்ள என இவை அனைத்தையும் தருவது ராஜயோகா.
நாடகத்தைப் பற்றிய விவரங்களுக்கு
தொடர்பு கொள்ளவும்.
9176671177 | 044 – 4864 5965
ணினீணீவீறீ: ழீதீனீணீபீக்ஷீணீs@ரீனீணீவீறீ.நீஷீனீ