பொடியன் சித்தார்த்…

சித்தார்த் பற்றிய பதிவுகளில் அவர் சொன்ன கருத்தை விட, ‘அவன் தைரியத்த பாத்தியா?’, ‘அவன் கட்ஸ்க்கு ஒரு சல்யூட்’ போன்ற அமெச்சூர்த்தனமான பாராட்டுக்களைத் தான் பார்க்க முடிகிறது.. கருத்தை விட, ஒருத்தன் பேசும் தைரியத்தைத் தான் பாராட்ட வேண்டுமென்றால், வெற்றிகொண்டான், மன்சூர் அலிகான், ‘என் ஏரியாவுக்கு வந்து பார்ரா’ வடிவேலு எல்லாம் சித்தார்த்தை விட 100 மடங்கு பாராட்டிற்குத் தகுதியானவர்கள், தைரியசாலிகள்.. அதுவும் இவருடைய கட்ஸ் யார் முன்? எல்லா எதிர்க்கருத்துகளுக்கும் இடம் தரும் பாஜக முன்..

மீடியாவில் இருந்து சோஷியல் மீடியா வரை, ஒரு அஜெண்டாவோடு பாஜக, மோடி, யோகி எனக் கழுவி ஊற்றும் போது, அதில் இவரும் சேர்ந்து கொண்டார் அவ்வளவே.. அதில் என்ன கட்ஸ் உள்ளது? கட்ஸ் என்றால் என்னவெனத் தெரியுமா?

கலைஞரை எதிர்த்து நின்ற உதயகுமார்

உதயகுமார்னு ஒரு பையன்.. ஒரு பிரபல திராவிட அரசியல்வாதிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து, ‘அவரெல்லாம் என்னத்தைக் கிழிச்சிட்டார்னு டாக்டர் பட்டம்?’ எனக் கேள்வி கேட்டான்.. கொலை மிரட்டல் எல்லாம் கூட வந்தது.. ஆனாலும் அவன் எதிர்ப்பைக் காட்டினான்.. அவனைக் கொன்று, அவன் தந்தையையே ‘இது என் மகனின் பிணம் இல்லை’ எனச் சொல்ல வைத்து, உதயகுமார் என்ன ஆனான் என்றே தெரியாதவாறு Recordical ஆக முடித்து வைத்தார்கள்..

இத்தனைக்கும் இப்போது போல் அப்போதெல் லாம் சமூக வலைத்தளம் கிடையாது.. அதனால் உதயகுமாரின் போராட்டமோ எதிர்ப்போ அந்த அரசியல்வாதியைப் பெரிதாக பாதித்திருக்காது.. ஆனாலும் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்டவன் இல்லாமல் போகும் அளவிற்கு இறங்கினார்கள் திராவிடக் கட்சியினர்.. கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் எனத் தெரிந்தும் இறங்கினானே உதயகுமார் அது தான் கட்ஸ், அது தான் தைரியம்..

வடிவேலு கதையை கூட பாருங்க…

சரி 1971 கதை எதற்கு? 2011 கதைக்கு வருவோம்.. காமெடி கிங்காக இருந்தவர் வடிவேலு.. ரஜினி, விஜய் படங்கள் கூட வடிவேலு கால்ஷீட் இல்லாமல் ஆரம்பிக்காது என்கிற நிலையில் இருந்தவர்.. 2011 தேர்தலில் பிரசாரம் செய்தார்.. திராவிடக் கட்சியை எதிர்க்காமல், அதில் இருந்த ஒரே ஒரு கூட்டணிக் கட்சியை மட்டும் எதிர்த்துத் தான் பிரச்சாரம் செய்தார்.. அதற்கே, சினிமாவில் உச்சத்தில் இருந்த அவரை, இன்று வரை 12th மேன் அளவில் கூட சினிமா ஏற்றுக்கொள்ளவில்லை.. திராவிடக் கட்சிகளைப் பகைத்தால் இது தான் நிலை..

இன்னும் பலர் கூட…

உதயகுமார், வடிவேலு என்றில்லை, ஆடிட்டர், சாதிக் பாட்ஷா, பல நிருபர்கள், பல அச்சு ஊடக அலுவலகங்கள் என அனைத்திற்கும் தெரியும் திராவிட அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என.. அதனால் தான் அவர்களைக் கேள்வி கேட்க எவருக்கும் கட்ஸ் இருப்பதில்லை..

சித்தார்த் தைரியசாலியா?

இந்த சித்தார்த் நிஜமான தைரியசாலியாக இருந்திருந்தால், தான் பிழைக்க வந்த தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளைப் பேசியிருக்க வேண்டும்.. பேசவில்லை.. அல்லது சொந்த மாநில YSR Congress, TRS கட்சித் தலைவர்களைக் கேட்டிருக்க வேண்டும்.. அதையும் கேட்கவில்லை.. அருகில் இருக்கும் கேரளமும் மராட்டியமும் கொரோனாவால் விழுங்கப்படுவதையாவது கொஞ்சமாவது சிந்தித்திருக்க வேண்டும்.. சிந்திக்கவில்லை.. ஸ்ட்ரெயிட்டாக உ.பி.க்குத் தான் செல்வார்..

மீடியா மாபியா

சித்தார்த் என்றில்லை.. நம் மீடியா, செலிப்ரிட்டிகள், அரசியல்வியாதிகள் என எல்லோருமே கொரோனா பற்றிய செய்தியில்

உ.பி.யை மட்டுமே டார்கெட் செய்வதன் ரகசியம் புரியவில்லை எனக்கு.

இவர்கள் கடந்த ஆண்டு கேரள மாடல் எனக் கொண்டாடிய கேரளம் 30,000 கேஸ்களைத் தாண்டிவிட்டது.. டெஸ்டிங்கில் 25% பாசிடிவ் அங்கு.

மராட்டியம் எல்லாம் கடந்த ஆண்டு பட்ட அடியில் இருந்து துளி கூடப் பாடம் படிக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய அசிங்கம்?
தேசியத் தலைநகரத் தலைவர் எல்லாம் அரசாங்கம் ஆக்ஸிஜன் தயாரிக்கக் கொடுத்த காசில் கூட, பத்திரிகைகளில் சுய விளம்பரம் கொடுத்து, இன்று மக்களை மூச்சு முட்டி சாகடிக்கிறார்.

யோகியின் ஆட்சியில்…

ஆனால் எந்த சமூக அக்கறையாளனின் கண்களுக்கும் இது ஏன் தெரிவதில்லை??? தெரிந்தும் ஏன் மூடிக்கொண்டிருக்கிறார்கள்?? அட மூடிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை, கேரளா மாடல், தாக்கரேவின் டாக்டிக்ஸ், கெஜ்ரிவால் ஒரு சிம்மசொப்பனம் என்கிற ரேஞ்சிற்கு மீடியாவில் எழுதித் தள்ளுகிறார்கள்.. சரி யோகி எப்படி??

பதவி ஏற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் 7 அரசு மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பித்துள்ளார் யோகி.. அனைத்திலும் கோர்ஸ் ஆரம்பித்து நடக்கிறது.. இன்னும் 22 கல்லூரிகள் திட்டத்தில் உள்ளன.. மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்னும் தொலைநோக்கில் செல்கிறார்.. 20கோடி மக்கள் தொகை கொண்ட உ.பி.யில் எந்த அரசியல்வாதியும் செய்து காட்ட முடியாததை அவர் செய்து கொண்டிருக்கிறார்.. மத்திய அரசு கொடுத்த நிதியில் 10 ஆக்ஸிஜன் ப்ளாண்ட் நிறுவியுள்ளார்.. அப்படிப்பட்டவர் அரசாங்கத்தில் ஆக்ஸிஜன் இல்லை எனப் பொய் சொன்னால் நடவடிக்கை தான் எடுப்பார்..

எலும்பு துண்டை வாங்கிகிட்டு…

கடுமையான நடவடிக்கையே உன்னை கோபப்படுத்துகிறது என்றால், ஒன்னத்துக்கும் உதவாத பினராயி, தாக்கரே, கெஜ்ரிவால் மேல் எல்லாம் உனக்கு இந்நேரம் கோபம் கொப்பளித்திருக்க வேண்டுமே? ஏனப்பா வரவில்லை?? ஏன்னா முதலாளி எழுதிக் கொடுக்கவில்லை, சிம்பிள்.. இவனையெல்லாம் தைரியசாலின்னு பேசிக்கிட்டு.. அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரையும் சமமாகப் பார்த்துக் கேள்வி கேட்பவனே நிஜமான சமூக அக்கறையுள்ள தைரியசாலி.. இவனெல்லாம் கூலிக்கு மாரடிப்பவன்.

தல… உண்மையில் தலதான்!

நிஜமான தைரியசாலி யாரென நான் சொல்லவா? அதே திராவிடக் கட்சித் தலைவரின் கடந்த ஆட்சியில் முனுக்கென்றால் ஒரு பாராட்டு விழா நடத்திவிடுவார்கள் அவருக்கு.. கண்டிப்பாக சினிமா நட்சத்திரப் பட்டாளமே வந்தாக வேண்டும்.. நடிகைகள் குத்தாட்டம் போட வேண்டும்.. விருப்பம் இல்லையென்றாலும் மிரட்டி வர வைத்தார்கள்.. அது போன்ற ஒரு பாராட்டு விழாவில், மேடையில் அந்தத் தலைவரை வைத்துக் கொண்டே, “ஐயா எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், மிரட்டி உங்க நிகழ்ச்சிக்கு வர வைக்கிறாங்கய்யா.. பாராட்டி பேசச் சொல்லி கட்டாயப் படுத்துறாங்க.. அது உங்களுக்குத் தெரியுமா?” என முகத்திற்கு நேராகக் கேட்டான் பாருங்கள், அவன் தான் தைரியசாலி..