பிராமணன் என்பவர் யார்? திரு.ரகுராமன்

‘‘திமுக அமைப்பின் செயலாளர், முன்னாள் ராஜ்யசபை எம்பியாக இருந்த ஆர்.எஸ்.பாரதி தனது அனுபவத்தை, அரசியல் நாகரீகத்தை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தமிழக மக்களை பற்றிய அவரது முத்தான கருத்துக்களை எடுத்து சொல்லியிருக்கிறார்.
இன்று நீதிபதியாகியிருக்கும் தலித்துகள் எல்லோருக்கும் இந்த பதவி திமுக போட்ட பிச்சை என…
அந்த பார்ப்பண நாய்கள் என்று பிராமணர்களை அநாகரீகமாக வசை பாடியுள்ளார்
ஊடகங்களை வேசிகள் என்று கேவலமாக பேசியுள்ளார்.
பலதரப்பட்ட மக்களை ஒரே மூச்சில் பகைத்துக் கொண்ட திமுக பிரமுகர் மேல் சகட்டு மேனிக்கு புகார்கள் குவிய, பொத்தாம் பொதுவாக, அலட்சியமாக ஒரு மன்னிப்பு கூறியுள்ளார்.
சட்டம் பயின்றவர்கள் தங்களை ‘பிச்சை’காரன் என்று கூறியதை வைத்து வன்கொடுமை சட்டத்தின்கீழ் சென்னை டிஜிபியிடம் புகார் பதிவு செய்துள்ளனர்.
அந்தணர் சங்கங்கள் ஒன்றுகூடி கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
மீடியா உலகம் மயான அமைதியில் உள்ளது இந்த விஷயத்தில் மட்டுமே.’’

திமுக அமைப்பு செயலாளர் திரு.ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சை குறித்து பாரதிய இந்து ஆதிவேஷன் அமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.ஜி.ரகுராமன் அவர்களுடன்…
நம்மிடையே தோன்றிய உங்களை போன்ற துடிப்பான தேசபற்று-ம், மோதி பார்த்து விடுவோம் எனும் உறுதியுடனும் உள்ள தலைவர்கள் தான் இன்றைய தேவை.

ஆர்எஸ் பாரதியின் பேச்சை குறித்து உங்களது கருத்து என்ன?

இது திமுகவின் அமைப்பாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சாக மட்டும் இதனை பார்க்கவில்லை. இதுதான் திமுக எனும் கட்சியின் அடி மன எண்ணம்.
அச்சமில்லை! அச்சமில்லை என்று பாடிய பாரதி ஒரு பிராமணன்!
இந்தியாவிற்கே சுதந்திர வேட்கையை உண்டு பண்ணிய வீரத் தமிழர் நம் முண்டாசு கவிஞர்.
ஜாதி இல்லை என்று கூறும் இவர்கள்தான் ஜாதி வெறி பிடித்தவர்கள்.
தலித்துகள் பிச்சைகாரர்கள் என்று சொல்லும் அவர்களது தரத்தைப் பற்றி என்ன சொல்ல?
ஆனால் நான் ரசிக்கும் ஒரு காமெடி இதுதான்! மீடியாக்களின் இன்றைய நிலை…

என்ன பரிதாபம் பாருங்கள்!

காமிரா இருந்தும், மைக் இருந்தும், விவாதம் செய்ய முடியவில்லையே! அப்படியென்றால் பாருங்களேன்! மீடியா உலக தாதா திமுக தான் போலும்.

பிராமணராக உங்களது ரியாக்ஷன் என்ன?

பர்சனலா சூரியனை பார்த்து குரைக்கிறதுகள் என்று தான் சொல்லுவேன். ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு பிராமணன் சொன்னால் அது கோழைத்தனம். நான் மும்பையில் வசிக்கிறேன். தமிழகத்தில் இனி அதிகளவு சேவை செய்ய உள்ளேன்.
தமிழ்நாட்டில் பிராமணர்களை பற்றிய புரிந்துணர்வு குறைந்துவிட்டது இந்த திராவிட அரசியல்வாதிகளால் என்பதே உண்மை. ஆனால் பிற மாநிலங்களில் அப்படி இல்லை.
வேதம் படித்த பிராமணர்கள் என்றால் அரசு உயர் பதவியில் இருப்பவர்கள் கூட மரியாதை செய்வார்கள்.

பிராமண சமூகம் எதற்கு தோன்றியது?!

பிரபஞ்சத்தில் முதல் மனிதன் தோன்றியபோதே ‘ரிக்’ வேதம் தோன்றியது. வேதங்கள் எப்போது தோன்றியது என்பதை இன்றளவு கணக்கிட முடியவில்லை.
மொத்தம் நான்கு வேதங்கள் ரிக், சாம, யஜூர், அதர்வன வேதங்கள். அளப்பரிய பொக்கிஷங்கள். உலகளவில் அறிஞர்கள் போற்றி வியக்கும் அற்புதங்கள்.
இதில் முக்கியமான ஒன்றை நீங்கள் யோசிக்க வேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த வேதங்களை இந்த பிராமண குலம், செவி வழி கற்று, மனப்பாடம் செய்து, அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுத்து, வேதத்தை பாதுகாத்து நின்றார்கள்.
எத்தனை அர்ப்பணிப்பு! அவர் களது வாழவே ஒரு தவமாக தானே வாழ்ந்து வந்தார்கள்.
இன்று விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. நம்மால் எல்லாவற்றையும் பல்வேறு வழியில் பதிவு செய்து பத்திரப்படுத்தி கொள்கிறோம்!
ஆனால் அன்று அப்படி இல்லையே…
இந்த பொக்கிஷங்களுக்கு சொற்பிழை, பொருள் பிழை, உச்சரிப்பில் பிழை என எதுவுமே வந்துவிட கூடாது என்று ஓதுவதும், ஓத கற்றுக் கொடுப்பதுமே இவர்களது வாழ்க்கையானது.
கடினமான இநத் வேள்வியில் மனம் கட்டுபாட்டில் இருக்க வேண்டும். ஒழுக்கம், தூய்மை, உணவு, கட்டுபாடு, சத் சங்கம் என தனது வாழ்க்கைக்கு எல்லை போட்டு, புலன்களை அடக்கியே வாழ்ந்தனர்.

உலகின் முதல் வார்த்தை டேப்ரிகார்டரில் பதிவு செய்யப்பட்டது. என்ன வரிகள் தெரியுமா?

ரிக் வேதத்தின் வரிகள்தான்! அக்னி மீலே புரோகிதே எனும் வேத வரிகள். வெளிநாட்டவரின் வேதங்களை கண்டு, படித்து, ஆராய்ந்து இன்றும் அதிசயித்து போகின்றனர்.
அந்த வேதங்களை பல ஆயிரம் ஆண்டுகள் பாதுகாத்து கொடுத்த அந்தணர்களுக்கு நன்றி பட்டுள்ளது மொத்த மனித சமுதாயம்.

தமிழ்நாட்டில் ஏன் இவ்வளவு பிராமண எதிர்ப்பு?!

பிப்ரவரி 2, 1835ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆங்கிலேய கலெக்டர் மெக்காலேவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
இன்று எனக்கு நேர்ந்த ஒரு சம்பவம் ஒரு உண்மையை எனக்கு காட்டியுள்ளது. நம் வேர் இங்கு தரையை தாண்டி கீழே பாயாது. பிராமண சமூகம் மதிக்கப்படும் வரையில் நம்மால் இந்து மதத்தை வீழ்த்த முடியாது. அவர்கள் வேத தர்மத்தை எடுத்து கூறி இந்து மதத்தை கோலோச்ச வைக்கிறார்கள் என்று எழுதினார் உடனே மெக்காலே தனது சதி திட்டத்தை தொடங்கினான்.
தமிழ்நாட்டின் தலைவிதி! மதம் மாற்ற வந்த கால்ட்வெலின் அடிவருடியாக ராமசாமி நாயக்கர் வந்து சேர்ந்தார்.
இந்துமத எதிர்ப்பை பிராமண துவேஷம் ஆக மாற்றி பிரச்சாரம் செய்தார்.

விளைவு என்ன?

இன்று அமெரிக்காவில் நியூஜெர்சியில் மட்டும் ஒரு மில்லியன் பிராமணர்கள் உள்னர்.
நமது மேதமை செல்வங்கள் புலம் பெயர்ந்து விட்டன. நமது தாய்திரு நாட்டுக்கு அல்லவா நஷ்டம்?!
தமிழ்நாட்டு மக்கள் அந்தணர்களின் பங்கை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் ஒன்று, இவர்கள் வேதத்தை தான் அழிக்க நினைக்கிறார்கள். எனவே தான் சமஸ்கிருதம் படிக்க கூடாது என்று அண்ணாதுரை பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக, சமஸ்கிருத வகுப்புகளை மூடும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
வேதங்களை ரட்சிக்க அவதாரம் எடுத்து வருவேன் என்று பகவான் சத்தியம் செய்துள்ளார்.

தெளிவு

ஏன் அந்தணர்களின் இந்த அளப்பரிய அர்ப்பணிப்பை யாரும் சொல்வதில்லை. 70 வருடம் இந்த போலி மதசார்பின்மை அரசியல்வாதிகளிடம் சிக்கிய தமிழக மக்கள் இப்போது புது தெளிவுடன் இருப்பதாகவே தோன்றுகிறது.
நாத்திகம் அழிந்துவிட்டது. நாத்திகம் பேசும் அரசியல்வாதிகளும் கோவிலில் பரிகாரம் ராவோடு ராவாக பண்ணிக் கொள்கின்றனரே! பகுத்தறிவு பல்லிளிக்கிறது.

உங்கள் திட்டம் என்ன?

தற்போது என் மனதில் தமிழகத்தில் இந்து மக்களுக்கு முறையான ஆன்மீக கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது. தமிழகம் ஒரு ஆன்மீக பூமி. ஆழ்வார்களும், நாயன்மார்களும் வாழ்ந்த பொன்பூமி இது. மக்களும் இதையே தான் எதிர்பார்க்கின்றனர்.
அடுத்து நமது கோவில்களை பற்றிய சிந்தனை மிகுந்த கவலையளிக்கிறது. சரித்திர புகழ்வாய்ந்த கோவில்கள் சிதிலமடைந்து விளக்கின்றி இருப்பதை பார்க்கும்போது, பெற்ற தாய் உணவின்றி இருப்பதை பார்க்கும் ஓர் மகனை போல வேதனைபடுகிறேன்.
இந்த நிலை மாற அயராது பாடுபடுவேன்!

பிராமணர்கள் ஏன் பொறுமையாக இருக்கிறார்கள்.

அவர்கள் பயப்படுகிறார்கள். கோழைகள் என்று அர்த்தம் பண்ணிக் கொள்வது தவறு. தர்ம பிரச்சாரம் பண்ணும் பிராமணர்கள் அகிம்சையை பூண்டவர்கள். அதுவே அவர்கள் இயல்பானது.
நமது வேதம் முடிவில் பசுவும், பிராமணர்களும் சவுக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது!
பசு தன்னை காத்து கொள்ளாது. அந்தணர்களும் தங்களை காத்துக் கொள்ள முடியாதவர்கள். அவர்களின் தர்ம பிரச்சாரம் இல்லையென்றால், வேதம் இல்லை. சமூகத்தில் அறம் போகும். சமச்சீர் போகும்.
எனவே அக்காலத்தில் பிற சமூகத்தினர் அந்தணர்களை பாதுகாத்து போற்றி வந்தனர்.

அந்தணர்கள் கோழை அல்ல…

தாங்கள் நம்பும் வேதங்களுக்காக, தங்களது தெய்வங்களுக்காக உயிர் துறந்துள்ளனர்.
மொகலாய படையெடுப்பில் உடைக்கப்பட்ட லட்சக்கணக்கான கோயில்களின் சரித்திரத்தில் அங்கு பூஜை செய்த அந்தணரின் இறுதி மூச்சு கலந்து இருக்கும்.
வேதங்களை பல்லாயிரக்கணக்கான வருடங்கள் சுக துக்கங்களை தவிர்த்து பாதுகாத்த அந்தணர்கள் ஒருவகை என்றால்… இன்னொரு வகை அந்தணர்கள் உண்டு.
காசி விஸ்வநாத கோயிலை இடிக்க 1664ம் ஆண்டு வந்த சுல்தானை ஓட ஓட விரட்டிய நாகா சாதுக்கள்!
1669ல் மீண்டும் வந்து காசி விஸ்வநாத கோயிலை இடித்தபோது 40,000 நாக சாதுக்கள் மாண்டு கிடந்தனர்.
குஜராத் சோம்நாத் கோவிலை கஜினி உடைத்தபோது, 1000 அந்தணர்கள் குருதி வெள்ளத்தில் மாண்டனர். அது தான் முதல் ‘ரெட்’ கார்பெட் என நினைக்கிறேன்.
தன்னை வருத்திக்கொண்டு, சுக துக்கங்களை மறந்து வேதத்தையும் நமது கோயில்களையும் காக்க போராடுபவர்கள் தான் அந்தணர் குலம்.
விடியலுக்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதே சுபச் செய்தி.

நீங்கள் ஆர்எஸ்எஸ் சமூக சேவையாளர் தானே..

எனக்கு ஜாதி மத பகுபாடு இல்லை.
இந்து வேதத்திலும் ஜாதி ஏற்றத் தாழ்வு இல்லை
வேதத்தை கற்பவன் தான் பிராமணன் என்று அர்த்தம்.
குலத்தால் அதாவது பிறப்பால் ஜாதி இல்லை
குணத்தால் மட்டுமே ஜாதி வருகிறது. அதிலும் ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகமாகவே நமது பண்டைய பாரதம் இருந்தது.
இன்று சீனாவில் கொரோனா வைரஸ் வந்த பிறகு அவர்கள் சைவ உணவிற்கு மாறி விட்டார்கள். மிளகு, இஞ்சி, வேப்பிலை என்று மாறிவிட்டார்கள். கை கால்களை சுத்தம் செய்து கொண்டு தான் வீட்டுக்குள் நுழைய வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் விளக்கு… சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் நமது முன்னோர் சொல்லி சென்ற பழக்கங்கள். நம் பாதுகாப்பிற்காக!
இந்து மதம் தமிழ்நாடென்ன… உலகம் முழுவதும் வியாபிக்க தொடங்கிவிட்டது என்பதே நிஜம்.

நன்றி திரு.ரகுராம் அவர்களே. தமிழ்நாட்டில் இனி உங்கள் பிரச்சாரம் ஓங்கி, ஒலிக்க எங்கள் வாழ்த்துக்கள்.