சிறகுகள் உதிரும் சிறைப்பறவை

‘‘தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் திருப்பங்கள் நடக்கும், அவரது விடுதலை அதிமுகவை உடைக்கும். அதிமுக பிளவுபடும்’’ என்று சசிகலாவுக்காக கொடுக்கப்பட்ட பில்டப்புகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. சசிகலா சுதந்திரத்துக்காகவோ அல்லது அரசியல் போராட்டத்தில் கலந்து கொண்டோ சிறை சென்று மீண்டவர் அல்ல, மேலே சொன்ன கணிப்புகள் நடப்பதற்கு. அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 4 ஆண்டு தண்டனையை முடித்துவிட்டுத் திரும்பியவர். இந்தளவுக்கே அவரது அரசியல் அறிமுகம் தொடங்குகிறது.

உதிரும் சிறைப்பறவை

‘‘தமிழகத்தில் மிகப் பெரிய அரிசியல் திருப்பங்கள் நடக்கும், அவரது விடுதலை அதிமுகவை உடைக்கும். அதிமுக பிளவுபடும்’’ என்று சசிகலாவுக்காக கொடுக்கப்பட்ட பில்டப்புகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. சசிகலா சுதந்திரத்துக்காகவோ அல்லது அரசியல் போராட்டத்தில் கலந்து கொண்டோ சிறை சென்று மீண்டவர் அல்ல, மேலே சொன்ன கணிப்புகள் நடப்பதற்கு. அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 4 ஆண்டு தண்டனையை முடித்துவிட்டுத் திரும்பியவர். இந்தளவுக்கே அவரது அரசியல் அறிமுகம் தொடங்குகிறது.

தோழியாக தொடங்கி நிழலாக தொடர்ந்த வாழ்க்கை

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ஜெயலலிதா, நதியைத் தேடிவந்த கடலுக்குப் பின் நடிப்பில் இருந்து ஒதுங்கினார். தனிமையில் இருந்த அவருக்கு உதவியாக, வந்து சேர்ந்தவர்தான் சசிகலா. நடராஜனின் மனைவி. ஆனால், காலப்போக்கில் அவர் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வரத் தொடங்கினார். உதவியாளர் என்ற நிலையில் தொடங்கிய இவர்களது நடப்பு, உடன் பிறவா சகோதரி என்ற நிலையை எட்டியது. 1989 சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிறிந்தபோது, அப்போதைக்கு ஜெயலலிதாவின் பக்கபலமாக இருந்தார். இதனால், 1991ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்ற பின், முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சேர்ந்து, சசிகலாவும் வளரத் தொடங்கினார். இந்தப் பயணம் 2016 செப்டம்பரில், முதல்வர் ஜெயலலிதா சுயநினைவை இழந்து, அப்பல்லோவில் மர்மமான முறையில் மரணிக்கும் வரைத் தொடர்ந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கு

1991-96 ஆட்சியில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக கூறி, 1996 – 2001ல் ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில்தான், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்த தனி நீதிபதி குன்ஹா, இந்த 4 பேருக்கும் தண்டனையை உறுதி செய்தார். மேல்முறையீடு வழக்கை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி, இந்த 4 பேரையும் விடுவித்தார். இதை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த முறையீடு விசாரணையில் இருந்தபோதே ஜெ., இறந்தார். இதனால், அவரை வழக்கில் இருந்து விடுவித்து, மற்ற 3 பேர் மீதான குற்றத்தை உறுதி செய்தது சுப்ரீம்கோர்ட்.

கைமாறிய முதல்வர் பதவி

முதல்வராக இருந்த ஜெயலலிதா சுயநினைவின்றி மயங்கியதும், இடைக்கால முதல்வராக பன்னீர்செல்வம் செயல்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், மெல்ல தலையெடுத்த மன்னார்குடி மாபியா கும்பலின் தடாலடி நடவடிக்கையால், அதிமுகவில் பூகம்பம் ஏற்பட்டது. தர்மயுத்தம் நடத்திய அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்திடம் இருந்தது பதவி பறிக்கப்பட்டு, கூவாத்தூரில் எம்ஏக்களை அடைத்துவைத்த சசிகலா, தினகரன் கோஷ்டியினர், அப்படியே தங்கள் நம்பிக்கைக்கு உரிய பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தனர்.

சசிகலா உள்ளே அதிமுகவில் பன்னீர்

பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்ட முதல்வர் பதவியில் தான் அமரலாம் என்று சசிகலா ஆசைப்பட்ட நிலையில், சசிகலாவின் பின்புலத்தில் உள்ள மிடாஸ் மற்றும் குடும்ப அரசியலை கணித்த மத்திய அரசு, சத்தம் இல்லாமல் சொத்துக்குவிப்பு வழக்கின் ரிசல்ட்டை ரிலீஸ் செய்ய வைத்தது. இதனால், சசிகலாவின் முதல்வர் கனவில் மன் விழுந்ததால், பழனிசாமி முதல்வர் பதவியேற்றார். அதேநேரத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்கள் இல்லாமல் முதல்வர் பதவியேற்ற பழனிசாமியை, திமுக தலைவர் ஸ்டாலின், ‘ஒரு வாரத்தில், ஒரு

பெரும்பான்மைக்குத்
தேவையான எம்எல்ஏக்கள் இல்லாமல் முதல்வர் பதவியேற்ற பழனிசாமியை, திமுக தலைவர் ஸ்டாலின், ‘ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில், 6 மாதத்தில், ஏன் ஓராண்டில் ஆட்சி கவிழ்ப்பு’ என்று பூச்சாண்டி காண்பித்துக் கொண்டிருந்தார்.

மாதத்தில், 6 மாதத்தில், ஏன் ஓராண்டில் ஆட்சி கவிழ்ப்பு’ என்று பூச்சாண்டி காண்பித்துக் கொண்டிருந்தார். அதேநேரத்தில், அரசியல் சதுரங்கம் விளையாடத் தொடங்கிய முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான 19 எம்ஏக்களை தன் வசம் இணைத்துக் கொண்டு, அதிமுவை பலப்படுத்தினார்.

சசிகலாவுக்கு பெப்பே…

சசிகலா நேரடியாகவோ அல்லது தினகரன் ரூபத்திலோ, அதிமுகவில் நீடிப்பது கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என்று முடிவு செய்த பழனிசாமியும், துணை முதல்வராக நியமிக்கப்பட்ட பன்னீர்செல்வமும், அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்று கூறி, இதன்பின் அந்தப் பதவிக்க கல்தா கொடுத்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், (துணை முதல்வர் பன்னீர்செல்வம்), துணை ஒருங்கிணைப்பாளர் (முதல்வர் பழனிசாமி) என்ற சக்திவாய்ந்த பதவியை உருவாக்கி, தங்களை வலுப்படுத்திக் கொண்டனர். சசிகலா சிறையில் இருந்த நாட்களில் அதிமுகவுக்கு எதிராக அமமுக என்ற கட்சியை தினகரன் தொடங்கி பதிவு செய்தார். இதனால், அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் வருவார்கள் என்று தினகரன் கணக்குப்போட்டார்.

ஆர்.கே.நகர் தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் இதே நம்பிக்கையுடன் தினகரன் போட்டியிட்டார் என்பார்கள் பலர். ஆனால், அவரது நம்பிக்கை தொண்டர்களைவிட பணபலத்தின் மீதுதான் இருந்தது. அந்தத் தேர்தலில் பணத்தை நம்பாமல், தன் பலத்தை தினகரன் நிரூபித்திருந்தால், அதிமுகவை அசைத்துப் பார்த்திருக்கலாம். ஆனால், அமமுக தொடங்கியதும், கட்சிக்கு அவரை பொதுச் செயலாளராக்கியதும், அவரது அதிமுக ஆசைக்கு முற்றுப்புள்ள வைத்துவிட்டது.

சிறைப்பறவையின் நம்பிக்கை

சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அதிமுகவில் இருந்து 20 முதல் 30 எம்எல்ஏக்கள், 10 மந்திரிகள் அவரை சந்தித்து, தங்களை அமமுகவில் இணைத்துக் கொள்ளவுள்ளனர் என்றும், அதிமுக ஆட்சி இதன்பின்னர் இருக்காது என்றும் செய்திகள் அதிகமாக பரவின. இந்த செய்திகளின் சூத்திரதாரி யார் என்று விசாரித்தால், திமுகவின் ஐடிவிங் மிகச் சிறப்பாக இந்தப் பணியை செய்து கொண்டிருந்தது.

ஆடுகள் முட்டிக் கொண்டால், ஓநாய்க்கு கொண்டாட்டம் என்ற ரீதியாக, அதிமுக, அமமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இடையே கொம்பு சீவும் வேலையை, திமுக ஐடி விங் சிறப்பாக செய்து செய்து கொண்டிருந்தது. அதிமுகவை காலி செய்தால் மட்டுமே, தங்களது சட்டசபைத் தேர்தல் வெற்றி உறுதி என்பதால், பெங்களூரில் இருந்து சசிகலா சென்னை வருவதை, டுவிட்டர், சமூக வலைத்தளம் என்று பரப்பியதில் அமமுகவைவிட, திமுக ஐடி விங் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டது.

சசிகலாவுக்கு விளம்பர பில்டப்

பெங்களூர் சிறையில் இருந்து சென்னை வந்த சசிகலாவுக்கு, ஆயிரக் கணக்கான கார்கள் சூழ, பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த வரவேற்புக்கு அமமுக சார்பில் 190 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது. சட்டசபைத் தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோரிடம் திமுக 380 கோடி ரூபாய் கொடுத்து பாடம் படித்த நிகழ்வுக்கு கொஞ்சமும் குறைவில்லாத சம்பவாக இது இருந்தது.
ஆனால், அதன் பின் நடந்தது என்ன? சசிகலா சென்னை வந்த பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் கொத்து கொத்தாக சென்று பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு எம்எல்ஏ கூட சென்று பார்க்கவில்லை. சசிகலாவை வரவேற்பு போஸ்டர் ஒட்டிய பல அதிமுகவினர், கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டனர். இதனால் பயந்துபோன மற்ற நிர்வாகிகள், தங்கள் வசம் உள்ள பதவியை தக்கவைத்துக் கொள்ள விரும்பி, சசிகலா புராணம் பாடுவதை நிறுத்தினர்.

அதிமுக என்பது யார்?

அதிமுக நிர்வாகம் யார் வசம் உள்ளது என்பதைவிட, அதன் சின்னமான இரட்டை இலை யார் வசம் உள்ளது என்பதில்தான் கட்சியின் வெற்றி உள்ளது, அந்தக் கட்சியின் அடிப்படைத் தொண்டருக்கும் தெரியும். அதேநேரத்தில், சசிகலா சார்ந்த சமூகத்தினர் தென் மாவட்டங்களில் கணிசமானோர் உள்ளதால், அவர்களில் ஒருபிரிவினர் சசிகலா அரசியலுக்கு வருவதை விரும்புகின்றனர். ஆனால், சசிகலாவின் உடல்நிலை? சர்க்கரை உட்பட சில உடல் உபாதைகளால் அவதிப்படும் சசிகலாவை, அரசியலில் இழுத்து அவரை சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என்று பலரும் திட்டமிடுகின்றனர். ஆனால், ‘எங்களுக்கு பொது எதிரி திமுக’தான், என்று சசிகலா விடுத்த ஒரே ஒரு ஸ்டேட்மென்ட், இப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவின் அரசியல் எதிர்காலம் என்ன?

தன் விடுதலைக்குப் பின்னர், தமிழக அரசியல் களத்தில் ஒரு கலக்கு கலக்கலாம் என்ற நினைப்பில் இருந்த சசிகலாவுக்கு, அமமுகவில் அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருப்பது சறுக்கலான ஒரு விஷயமாகிவிட்டது. இதனால், ‘சட்டப் போராட்டத்தால் அதிமுகவை மீட்போம்’ என்ற கோஷத்தை முன்வைத்துள்ளனர். ஆனால், இந்த சட்டசபைத் தேர்தலில் அமமுக கணிசமான அளவு எம்எல்ஏக்களை பெறாவிட்டால், இத்துடன் அந்தக் கட்சியின் கதை முடிந்தது. இது அமமுகவை அறிமுகம் செய்த தினகரனுக்கும் தெரியும். சசிகலாவுக்கும் தெரியும். அதேநேரத்தில், 1989 சட்டசபைத் தேர்தலில் அதிமுவில் ஜா – ஜெ அணிகள் பிறிந்ததால் ஏற்பட்ட, காலியிடத்தை திமுக கைப்பற்றியது. இதேபோன்ற ஒரு சூழலைத்தான் 30 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக மீண்டும், 2019 லோக்சபா தேர்தலில் பயன்படுத்திக் கொண்டது.
இப்படிப்பட்ட சூழலில், 2021ல் இந்த வாய்ப்பை, மீண்டும் ஒருமுறை பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்துவிட திமுக துடித்துக் கொண்டிருக்கிறது. அப்படி திமுக பயன்படுத்துமானால், அது அமமுகவுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் கடும் சோதனையாகிவிடும். இதனால், ‘நம்ம பங்காளி சண்டையை அப்புறம் பார்க்கலாம். முதலில் எதிரியை கவனிப்போம்’ என்ற ரீதியில் அதிமுக – அமமுக இடையேயான நகர்வு தொடங்கியுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம்.

சிதறடித்த சிறிய கட்சிகள்

சிறையில் இருந்து மீண்டு, வீட்டில் உள்ள சசிகலாவை சமக தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உட்பட பலரும் சந்தித்து வந்தனர். இதனால், அமமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று கூறப்பட்டது. ஆனால், ‘சசிகலாவை சந்தித்தது எல்லாம் மரியாதை நிமித்தம்தான்’ அந்தக் கட்சிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. அத்துடன் கமலுடன் கை கோர்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால், அமமுக மற்றும் சசிகலாவின் அரசியல் எதிர்காலம், அதிமுகவை சார்ந்தே உள்ளது என்பதும், அதிமுகவின் அரசியல் யுக்தி, அமமுகவை தக்க வைப்பதில் இருக்கிறது என்பதே உண்மை.

அம்மாவின் தொண்டர்கள்

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் கள், அவரை உள்ளன்போடு ‘அம்மா’ என்ற ழைத்து பொது ஜனம். அடி மட்டத்தில் இருந்து மேட்டுகுடி வரைக்கும் அவரது ஆளுமை பரந்திருந்தது.
அரசியலில் அந்தர் பல்டி சாதாரணம் என்றாலும் பொதுஜனம் சசிகலாவை சின்னம்மா என்று ஏற்கவில்லை. கழகத்தின் உள்ளே மட்டுமே அவருக்கு அதிகாரம் இருந்தது. அம்மாவின் 75 நாள் அப்பல்லோ வாசம். பொது ஜனம் சசிகலாவின் மேல் உள்ள கோவத்தை அதிகபடுத்தியுள்ளது என்பதே நிஜம்.
ஜெயலலிதா இறந்து விட்டார். சசிகலா ஜெயலலிதா போல உடை அணிந்து தானே முதல்வராக கற்பனை செய்து கொண்டு இரட்டை இலை சின்னத்தை போயஸ் வீட்டிலிருந்து காண்பிக்க மக்களின் கோபம் தலைகேறியது. கோபம் குறையவில்லை. தனது தங்க தலைவியின் சாவில் சசிகலாவின் பங்கு உள்ளது என நம்பும் மக்களின் காயமும் ஆறவில்லை.
சசிகலா சட்டத்தின் நுணுக்கத்தால் தேர்தலில் போட்டியிட்டாலும் அவருக்கு விழும் ஒட்டுக்கள் அதிகளவு இருக்காது என்பதை அவரே அறிவார்.

அவரால் பதவிக்கு வந்தவர்கள், சசிகலா வால் பயனடைந்தவர்கள், அவருடன் கூட்டுக் கொள்ளையடித்தவர்கள், அவரால் இனி ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்ற நப்பாசை கொண்டவர்கள் அவரை சுயநலத்துடன் தவறாக வழி நடத்துகிறார்கள். இந்த முறை அவரை மீட்பதற்கு ஜெயலலிதா இல்லை என்பதை சசிகலா நினைத்து பார்க்க வேண்டும். அவர் இல்லாமல் போக விட்டது தவறு என்று சசிகலா வேதனை படும் காலம் தொலைவில் இல்லை….