சர்வாதிகாரியால் சரியும் திமுக

அழிவுப்பாதையில் செல்லும் ஸ்டாலின்

‘‘திமுகவின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாக மாறுவேன்’’ என்று எந்த நேரத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறினாரோ தெரியவில்லை. ஏறக்குறைய, ஹிட்லர், முசோலினியை மிஞ்சிய, தன் அரசியல் லாபத்துக்காக எதையும் செய்யத் துணிந்த ஒரு சுயநல சர்வாதிகாரியாக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். அதன் வெளிப்பாடுதான் சிஏஏ சட்டத்துக்கு எதிரான அவரது தீவிர நிலைப்பாடு.

மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதத்தில் கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் உள்ள எந்தஒரு குடிமகனுக்கும் ஆபத்து இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. திமுகவின் 38 லோக்சபா எம்பிக்கள் மற்றும் ராஜ்சபாவின் எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்ட, கேள்வி & பதில் கூட்டத் தொடர், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் முடிந்த பின்னரே சிஏஏ சட்டம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய 2 சபைகளிலும் இந்த சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அமலுக்கும் வந்துவிட்டது. இந்தச் சட்டம் குறித்து மத்திய அரசின் கெஜட் உத்தரவும் பிறப்பிக் கப்பட்டுள்ளது.

எதிர்த்து நின்ற எதிர்கட்சிகள்

மத்திய அரசின் சிஏஏ சட்டத்தை எதிர்த்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, சட்டசபையில் சிஏஏ சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினார். அவரைத் தொடர்ந்து கேரளாவின் பிணராயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசும், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியும் சிஏஏ சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றின. இப்போது, நம் பக்கத்து மாநிலமான புதுச்சேரி, இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளது. ‘நானும் சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறேன்’ என்று நாராணய சாமியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர்.

சட்டசபைத் தீர்மானங்கள் செல்லுபடியாகுமா?

‘சிஏஏ சட்டத்துக்கு எதிராக தீர்மானம் இயற் றும்போதும், அதை சுப்ரீம் கோர்ட்டில் மனுவாக தாக்கல் செய்யும்போதும், மாநில நிர்வாகத்தின் அதிகாரத்தில் உள்ள கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது முதல்வருக்குத் தெரியாதா?’ என்று கேரள முதல்வர் ஆரிப்கான், முதல்வர் பிணராயி விஜயனுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார், இந்தத் தீர்மான குளறுபடிகளுக்கு எல்லாம் ஒரு சின்ன சாம்பிள்தான். ‘‘பார்லிமென்டின் 2 அவைகளிலும், பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டு, ஜனாதி பதி ஒப்புதலுடன் சட்டமாகி, கெஜட்டில் வந்துவிட்ட ஒரு சட்டத்தை, அமல்படுத்த மாட்டேன் என்று எந்த ஒரு மாநில அரசும் சொல்லவும் முடியாது. சொல்லவும் கூடாது. இது அரசியல் சாசனத்தையும், அதன் வரம்பையும் மீறிய செயல். இவ்வாறு எதிர்க்கும் மாநில அரசு களுக்கு பல சட்ட நெருக்கடிகள் உருவாகும்’’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த வக்கீலும், முன்னாள் அமைச்சருமான கபில்சிபல் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார். இதை மற்றொரு சீனியர் தலைவரான அபிஷேக் சிங்வி யும் வழிமொழிந்தார். மேலும் பலர் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டதால், காங்கிரஸ் கட்சித் தலைமை கடும் கோபத்தில் உள்ளது. அதாவது, சட்டசபைத் தீர்மானங்களை மத்திய அரசு தூக்கி குப்பையில் போட்டுவிட்டு, சட்டத்தை மதிக்காத அரசை டிஸ்மிஸ் செய்யவும் அதிகாரம் உள்ளதை, கபில்சிபல், அபிஷேக் சிங்வி சுட்டிக் காண்பித்துள்ளனர்.

தடைபோட மறுத்த சுப்ரீம் கோர்ட்

சிஏஏ சட்டத்தை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி யின் பிரசாந்த்பூஷன், திமுகவின் சட்டப் புலிகள் எல்லாம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதாவது, ‘‘மத்திய அரசின் இந்த சட்டத்தால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதிக்கப் படுவார்கள். அவர்களது குடியுரிமை பாதிக்கும் ஆபத்தில் உள்ளது’’ என்ற கோரசுடன்தான் 20க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டது. ஆனால், மனுக்கள் தாக்கல் செய்யும் முன்னர், மத்திய அரசின் சிஏஏ சட்டம் தொடர் பான கெஜட் காப்பியும் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு நகல் அனுப்பி வைக்கப்படும். இந்த வகை யில், அதீத பெரும்பான்மை பலத்துடன், நியாயமான முறையில் விவாதிக்கப்பட்டு, அமலுக்கு வந்த சட்டத்தை, இந்த மனுக்களின் அடிப்படையில் நிறுத்தி வைக்க முடியாது. அதற்கான சாத்தியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட், மனுதாரர் களின் பிடறியில் அடித்தார்போல் சொல்லி விட்டது. ‘நீங்கள் போட்ட மனுவுக்கு மதிப்பு கொடுத்து, மத்திய அரசிடம் இதுகுறித்து விளக்கம் வேண்டுமானால் கேட்கலாம்’ என்று ஆறுதல் கூறிவிட் டது. இதுதான் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நேர்ந்த சோகம்.

பிரதமர் அலுவலகம் உறுதி

சிஏஏ சட்டத்தால், இந்தியாவில் உள்ள எந்த ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளும் பறிக்கப்படாது, ஆனால், இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கி
யுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தினர் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக கூறி விட்டது. இதே கருத்தைத்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தெரிவித்துள்ளார். இதே வாதங்கள்தான் சுப்ரீம் கோர்ட்டிலும் முன் வைக்கப்படும். எனவே, சிஏஏவுக்கு எதிரான சட்டங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிற்காது. சட்டம் அமலுக்கு வந்தே தீரும் என்பதே உண்மை.

திமுகவின் முட்டாள்தனம்…

சிஏஏ சட்டத்துக்கு எதிராக திமுக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தபோதே, இந்த சட்டம் நிற்காது என்பது, திமுகவின் ‘சட்டப்புளி’ ஆர்.எஸ்.பாரதிக்கம், ராஜ்யசபா எம்பி வில்சன் உட்பட பலருக்கும் தெரியும். ஆனால், தமிழகத்தில் 2011ம் ஆண்டில் கிடைத்த மரண அடியில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் திமுகவும், எப்படியாவது தன் வாழ்நாளில் ஒருமுறையாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அழகு பார்க்க வேண்டும் என்ற துடிப்பில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியும், தங்கள் இலக்கை அடைய எந்த ஒரு வழியையும் கையாளத் துணிந்துவிட்டனர் என்றே சொல்லவேண்டும். சிஏஏவுக்கு எதிராக தங்கள் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, மனிதசங்கிலிப் போராட்டம், 2 கோடி கையெழுத்து இயக்கம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களால், யாருக்கு லாபமோ இல்லையோ, ஸ்டாலினுக்கு கொள்ளை லாபம்.

என்னவாகும் 2 கோடி கையெழுத்து?

மத்திய அரசின் சிஏஏ சட்டத்தை எதிர்த்து, திமுக தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த மிகப் பெரிய காமெடிப் போராட்டம் என்னவென்றால், 2 கோடி கையெழுத்து இயக்கம். சென்னையில் அவர் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தை, தமிழகம் முழுவதும் அவரது அடிமைகள் சிறப்பாக, கேள்வியே கேட்காமல் தொடர்ந்து எடுத்துச் சென்றனர்.
சிஏஏ சட்டம் தொடர்பாக, சில விபரம் தெரிந்த நபர்கள், கையெழுத்து வாங்கியவர்களிடம் கேள்விகேட்ட போது, அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர். இன்னும் சொல்லப்போனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கே, இந்த சட்டத்தின் உண்மையான நோக்கம், அதன் விரிவாக்கம், எந்தெந்த காலகட்டத்தில் இது கொண்டுவரப்பட்டது என்பது அறவே தெரியாது. காரணம், அவரது ஆங்கிலப் புலமை அப்படி. இந்தியும், ஆங்கிலமும் தெரி யாத ஒரு இணையற்ற தமிழக அரசியல் கட்சியின் தலைவர், அடிப்படையே தெரியாத ஒரு சட்டத்துக்கு எதிராக நடத்திய கையெழுத்துப் போராட்டம் என்னவாகும்?
ஒன்றம் ஆகாது. வாங்கிய கையெழுத்து பண்டலை தலைக்கு கீழ் வைத்துத் தூங்க வேண்டியதுதான். 2 கோடி கையெழுத்து இயக்கம் குறித்து சமூக வலைத்தளங்களில், ‘‘பிக்பாஸில், ஓவியா வுக்கு பிரச்னை என்றபோது, ஒரு கோடி கையெழுத்துப் போட்ட ரத்த பூமிய்யா இது. நயன் தாராவுக்கு பிரச்னைனா 4 கோடி கையெழுத்து 2 கையாலும் போடும் விசுவாசிகள் உள்ள தமிழ்நாடு. இதுல சிஏஏவுக்கு 2 கோடி கையெழுத்து பீற்றிக் கொள்ளவேண்டாம்’’ என்று ஸ்டாலினை கிண்டலடித்து வந்த மீம்ஸ்கள் அதிகம். ஆனா லும், அதற்கெல்லாம் அவர் அசந்துவிடவில்லை. எதிர்மறையான விளம்பரம் என்றே எடுத்துக் கொண்டார்.

திமுகவின் ஊக்கமும்,முஸ்லிம்களின் போராட்டமும்…

சிஏஏ சட்டத்தால், இந்தியாவில் முஸ்லிம்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிந்தும், வங்கதேச ரோஹிங்கியா முஸ்லிம்களை தங்களுடன் குடிவைத்து அழகுபார்க்க, இங் குள்ள முஸ்லிம்கள் தயாராகவே உள்ளனர். காரணம், ரோஹிங் கியா முஸ்லிம்களின் மூர்க்க, அரக்க குணம்தான். இதற் காகவே, திமுகவின் போராட் டத்தில் முஸ்லிம்கள் அதிகள வில் பங்கேற்று வருகின்றனர். தாய் மண் மீது பற்றும், மத்திய அரசின் மீதும் நம்பிக்கையும் உள்ள முஸ்லிம்கள் ஒதுங்கிக் கொள்ள, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக களம் இறங்கியவர்கள் அதிகம்.
இந்த சூழல்தான், பிப்ரவரி 28ம்தேதி வரை சென்னையில் போராட்டங்களுக்கு தடை விதித்து போலீசார் உத்தரவிட்ட நிலையில் 14ம் தேதி மாலை சென்னை வண்ணாரப் பேட்டையில் முஸ்லிம்கள் சட்ட விரோதமாக கூறி, சிஏஏ சட்டத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார், தடை குறித்து விளக்கிக் கூறி, கலையும்படி கூறினர். ஆனால், முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த மண்ணடி மற்றும் வண்ணாரப் பேட்டையில் இருந்து திரண்ட சிலர், போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால்தான் போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தாய் மண் மீது பற்றும், மத்திய அரசின் மீதும் நம்பிக்கையும் உள்ள முஸ்லிம்கள் ஒதுங்கிக் கொள்ள, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காகவும், பங்களாதேஷ் முஸ்லிம்களுக்காகவும் களம் இறங்கியவர்கள் அதிகம்.

திமுக போட்ட விதை, வன்முறையை வளர்க்கிறது

சிஏஏ சட்டத்தால் எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிந்தும், தன் அரசியல் ஆதாயத்துக்காகவும், நிலையற்ற தன் அரசியல் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்வதற்காகவும் திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்த அரசியல் விளையாட்டு, இப்போது வன்முறையை தமிக ழகம் முழுவதும் கட்டவிழ்த்துள் ளது. 14ம் தேதி கருப்பு இரவு என்று ஸ்டாலின் வர்ணிக்கும் அதே நேரத்தில், அதற்கான விதையை விதைத்தவர் அவர்தான் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். திமுகவின் ஓட்டு வங்கியைப் பாதுகாப்பதற்காக, அப்பாவி முஸ்லிம்களை பதட்டத்தில் ஆழ்த்தி, அவர்கள் அனைவரிடமும் பீதியை விதைத்து, அவற்றை வன்முறைப் பாதைக்குத் திருப்பி, குளிர்காயும் வேலையை ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ‘நீ எதை விதைக்கிறாயோ, அதையே அறுவடை செய்வாய்’ என்ற கீதையின் மொழி, உண்மை யானால், ஸ்டாலின் விதைத்த வன்முறை விதை, இன்று மரமாகி வளர்ந்து நிற்கிறது. இதன் பயனனை அவரே அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில்லை. இது அவருக்கும் தெரியும்.