சர்க்கரைவள்ளியின் மருத்துவகுணங்கள்!

சர்க்கரை வள்ளி கிழங்கை நாம் எல்லோரும் மிகவும் விரும்பி சாப்பிமுகிறோம். ஆனாலும் இது கிழங்கு வகை ஆச்சே!! வயதானவுடன் தடுக்க வேண்டும். மிகவும் இனிப்பு உள்ளதே… நீரிழிவு நோள் உள்ளவர்கள் சாப்பிடலாமா?
இனிப்பு பண்டமாக மற்றுமே நாம் பார்த்து வரும் சர்க்கரை வள்ளி கிழங்கு ஒரு அருமருந்து பெட்டகம்’’ என்று மருத்துவ உலகம் சொல்லுகிறது.
சர்க்கரை வள்ளி ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் நமக்கு கிடைக்கிறது.

வைட்டமிக் ஏ.டி

சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகளவு வைட்டமின் ஏ உள்ளது. பீடா கேரோடின் சத்து இருப்பதால் இது நமது உடலில் இரட்டிப்பு வைட்டமின் ஏ சத்தை உருவாக்குகிறது.
வைட்டமின் ஏ நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கொரோனா போன்ற தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கிறது. கண்களில் வறட்சி, பார்வை குறைபாடுகளுக்கு தீர்வு தருகிறது எனவே சர்க்கரை வள்ளியை சாப்பிட்டு வர வைட்டமின் ஏ குறைபாடு நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நீரிழிவு நோயை கட்டுபடுத்தும்

நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் அவசியமான நார்சத்துகள் மற்றும் மெக்னீசியம் நிறைந்தது சர்க்கரை வள்ளி கிழங்கு. மேலும் இது நமது உடலில் உணவில் உள்ள குளுகோஸ் சத்தை மெதுவாக ரத்தத்தில் கலக்கும் தன்மை கொண்டது. எனவே கிழங்கை சாப்பிட்டவுடன் தீடிரென சர்க்கரை அளவு எகிறாது.

படபடப்பு, மன உளைச்சலை தவிர்க்கும்…

சர்க்கரை வள்ளியில் நிறைந்திருக்கும் மெக்னீசியம் மன உளைச்சல் அநாவசிய கவலைகள், படபடப்பு போன்றவற்றை தவிர்கிறது, மெக்னீசியம் குறைபாட்டால் தோன்றும் இந்த வகை சிக்கல்களை சர்க்கரை வள்ளியை சாப்பிடுவதால் குறைகிறது.
சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயன்கள் ஊட்டச்சத்து

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. இந்த கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கிழங்கை சாப்பிடுவதால் உடலில் சத்து தேவைகள் பூர்த்தியாகும்.

கொலாஸ்ட்ரால்

இக்காலத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனை தங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் பெரும்பாலானவர்கள் கவனமாக இருக்கின்றனர். கிழங்கு வகை உணவுகள் என்றாலே அதில் சிறிதளவாவது கொழுப்பு இருக்கும். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு என்பது அறவே இல்லை. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.

உள்காயம், புண்கள்

நமது உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களை நாம் மருந்து தடவி சரி செய்து விட முடியும். ஆனால் அடிபடும் போது சமயத்தில் நமது உள்ளுறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அப்படிப்பட்டவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதில் இருக்கும் வைட்டமின் பி, சி மற்றும் நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் ஆகியவை உடலின் உள்ளே ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் உங்களை விரைவில் குணப்படுத்துகின்றன.

கருவுறுதல்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் திருமணமான பெண்களுக்கு சுலபமாக கருவுற முடிகிறது. ஆனால் சில பெண்களுக்கு உடலில் ஏற்படும் சத்துக் குறைபாட்டால் கருவுறுவது தாமதமாகிறது. இப்படிப்பட்ட பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதோடு சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் சேர்த்து சாப்பிடுவதால், அதில் இருக்கும் ஃபோலேட் எனப்படும் சத்து விரைவில் பெண்களுக்கு கரு உருவாதலை உறுதி செய்கிறது.

நுரையீரல்

நாம் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் நாம் சுவாசிக்கும் மூச்சு தான். அந்த மூச்சு சீராக இருக்க நமது நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது அதிசயம். ஒரு சிலருக்கு நுரையீரல் காற்றுப் பையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக எம்பஸீமா எனப்படும் நோய் ஏற்படுகிறது. இந்த நோய் சீராக சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுத்தும். இந்த நோய் ஏற்பட்டவர்கள் அடிக்கடி சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வருவதன் மூலம், இந்த நோய் குறைபாடு தீர்ந்து மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமங்களை போக்குகிறது.

அல்சர் பிரச்சனைகள்

நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் உணவை செரிக்கும் உறுப்புகளான வயிறு மற்றும் குடல்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். அன்றாடம் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும், அதிகமான கார வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் வயிறு மற்றும் குடல் போன்றவற்றில் அல்சர் உருவாகிறது. சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது.

இளமை தோற்றம்

இளமை தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஆசை தான். சர்க்கரைவள்ளி கிழங்குகளில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய்கள் ஏற்பட்ட பிறகு அவற்றிற்கான மருந்துகள் சாப்பிட்டு அதை நீக்குவதை விட நோயே வராமல் தடுப்பதுதான் சிறந்தது. இதற்கு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருக்க வேண்டும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.

மலச்சிக்கல்

ஒரு சில வகை கிழங்குகளை சாப்பிடுவதால் சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களின் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் புண்கள், நச்சுக்களை போக்கி, உங்களுக்கு மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே வாரம் ஒருமுறையாவது சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவது சிறந்தது.

தொண்டை புற்று மற்றும் பல வகை புற்று நோய்கள்…

புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன அதில் புகையிலை சார்ந்த பொருட்களை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு வாய் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இத்தகைய புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் நிறைந்து இருக்கும் சத்துகள் புற்றுநோய் செல்களை மேலும் மேலும் வளராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.