கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கிகளுடன் இணையும் மத்திய அரசு அதிரடி

விவசாயிகளின் நலன் மற்றும் சிறு வர்த்தகர்களின் நலனைகருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் கூட்டுறவு வங்கிகள் இந்த நிலையில இந்த கூட்டுறவு வங்கிகளில் பல தில்லுமுல்லு நடக்கிறதை கண்டுபிடித்த மத்திய அரசு இந்த வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர அறிவிப்பு வெளியிட்டது
கடந்த 1905ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த கூட்டுறவு வங்கிகள் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கான கடன் சேவைகள் , சேமிப்பு , சிறு குறு தொழிலுக்கான கடன் வசதி, தனிநபர் கடன் வசதி,கல்வி கடன் ,பெண்களுக்கான சிறப்பு கடன் திட்டம் என பல வழிகளில் உதவி வருகிறது கூட்டுறவில் கடனுக்கான வட்டி விகிதமும் குறைவு. சேமிப்பிலும் சற்று அதிக வட்டி தருகிறது.
நபார்டு வங்கி கட்டுபாட்டின் கீழ் செயல்படும் இந்த வங்கிகள் மாநில அளவில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி என்றும் , மாவட்ட அளவில் மத்திய கூட்டுறவு வங்கி என்றும், கிராம அளவில் வேளான்மை கூட்டுறவு வங்கிகள் என்றும் செயல் படுகிறது.

கடன் வகை

பயிர்க்கடன், நகைகடன் , தனிநபர் அடமான கடன், கல்விக்கடன் என அனைத்து வகையான கடன்களையும் தர்ற இந்த வங்கிகள் கடந்த நூறு வருஷத்திற்கு மேலா செயல்பட்டதில ரூ 16, 500 கோடி வரை பணப்புழக்கம் ஏற்பட்டு . சுமார் 45 கோடி ரூபாய்கள் வரை லாபமும் கிடைச்சிருக்கு.
இந்த சூழலில் , ரிசர்வ் வங்கிக்கு கீழ கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவது விவசாய நலனுக்கும் ,ஜனநாயகத்திற்கும் எதிரானது அப்படின்னு தெரிவிச்ச திமுக ஸ்டாலின், இதுக்கு ஆளும் அதிமுகவோட ஆதரவையும் கேட்டிருக்கார்.

என்ன ஊழல்

கூட்டுறவு வங்களில் அரசியல் வாதிகள் தங்களுடைய பினாமிகளை நிர்வாக குழுவில் அமர்த்தி, விவசாயிகள் இல்லாதவர்களுக்கும், தனது கட்சிகாரர்களுக்கும் தாராளமாக கடன் உதவி செய்து அதில் வருமானம் பார்ப்பது பல காலமாக நடந்து வருகிறது. தேர்தலின் போது விவசாயகடன் ரத்து என்று அறிக்கை விட்டு கூட்டுறவு வங்கிகளை திவாலாக்கி விடுவதும் தொடர்கிறது. இதனால் உண்மையான கிராமபுற விவசாயிகளும் வியாபாரிகளும் பாதிப்படைகின்றனர். அவர்களுக்கு தேவையான அளவு உதவி செய்ய முடியாமல் கூட்டுறவு வங்கிகள் முடங்கி விடுகின்றன

பினாமிகளுக்கு கடன்

உண்மை சொல்ல போனா இந்த அறிவிப்பும் சட்டமும் இதற்கு முன்னாடியே கொண்டு வந்திருக்க வேண்டியது. கூட்டுறவு வங்கிகளை தங்களோட வீட்டு பீரோவை போல் பயன்படுத்தும் திராவிட மற்றும் காங்கிரஸ் அரசியல் வாதிகளுக்கு சரியான சவுக்கடி.

கூட்டுறவு வங்கிகளில் கொஞ்சம் அதிக வட்டி கொடுப்பதால் விவசாயிகள் அந்த வங்கிலேயே பணம் போடுகிறார்கள். ஆனால்,கடன் என்னவோ கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளின் பினாமிகளுக்குதான் கொடுக்கபடுகிறது. சேலம் பகுதியில ஒரு காலத்துல “வீரபாண்டிகள் “ அடித்த கொள்ளை ரொம்ப பிரசித்தம். இதே போலத்தான் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களிலும், குறிப்பாக மகாராஷ்டிராவில் சரத்பவார் கூட்டுறவு வங்கிகளை கையில் போட்டு கொண்டு கோடிக்கணக்கான கருப்பு பணத்தை வெள்ளையாக்கி வந்தார். அதிலும் “டிமானிடைஷேசன்“ சமயத்தில் விவசாயிகளின் அக்கவுண்டை பயன்படுத்தி பணமாற்று வேலை செய்ய முயன்றார்.
இதையெல்லாம் கண்காணிக்கத்தான் ரிசர்வ் வங்கி மேற்பார்வை நிச்சயம் அவசியம் அதைத்தான் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
இதனால், தங்கள் பினாமிகளுக்கு கடன் கொடுப்பது போல் கொடுத்து விட்டு பின்னர் விவசாய கடன்கள் தள்ளுபடி என ஏமாற்றும் அரசியல் இனி முடியாத காரியம்.

ஸ்டாலினின் கவலை

கூட்டுறவு வங்கி கடன் மூலம் இனி சம்பாதிக்க முடியாதது மட்டுமல்ல, வரும் காலங்களில் கணக்கு காட்ட வேண்டும் என்ற நெருக்கடியும்தான் இப்போது திமுக ஸ்டாலினின் கவலை..
அதனால்தான் ஸ்டாலின், சரத்பவார் முதற்கொண்டு திராவிட காங்கிரஸ் கட்சிகள் அனைத்தும் கூட்டுறவுகளை, ரிசர்வ் வங்கிகளுடன் இணைப்பதில் அதிர்ச்சியும், ஆவேசமும். காட்டுகின்றன.

உண்மையான விவசாயிகளுக்கு இனி கவலை இல்லை

கூட்டுறவு வங்கிகளில் அரசியல் தலையீடு இல்லாமல், உண்மையான கிராமபுற விவசாயிகளுக்கும், சிறுகுறு வியாபாரிகளுக்கும் இனி கடன் கொடுக்கல், வாங்கலில் வெளிப்படைதன்மை இருக்கும். புயல், மழை போன்றவற்றால் நஷ்டம் என்றாலும் பயிர் காப்பீடு போன்றவை உள்ளது.
மேலும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் வருவதால் 8.6 கோடி வாடிக்கையாளர்களின் ரூ 4. 84 லட்சம் கோடிகள் பாதுகாப்பாக இருக்கும். என மத்திய அரசு உறுதியளித்துள்ளது கூடுதல் தகவல்.