குளியல் ரகசியம்!

குளியல் பற்றி இந்திரா சௌந்தர் ராஜனின் ‘‘கன்னிகள் ஏழு பேர்’’ என்ற நூலில்

எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும் தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அது போல் நாம் காற்றுக் குள் இருக்கிறோம்!

ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழி நடத்திக்கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காத்தோட கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும்போது அது நமக்குள்ளேயும் நுழை கிறது. ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது. இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம். அனைவரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கிடையாது.

மனித உடம்பு தூசு, தும்பு போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை, மற்ற மனிதர் களின் பார்வை என்னும் திருஷ்டி, எண்ணங்களின் தாக்கு தல், உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.

இந்த பாதிப்புகள் இரண்டு விதம்; ஒன்று நல்ல விதம், இன்னொன்று கெட்ட விதம். ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தால் அது நல்ல விதம், பொறாமைப்பட்டால் அது கெட்ட விதம்! இவற்றை நாம் கண்டறிய இயலாது, அது சாத்திய மும் இல்லை. ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை, நீங்களும் இல்லை. இந்த பாதிப்பு கூடிக் கொண்டே போகும் போது ஒரு கட்டத்தில் உடம்பு வலி, மன அசதி, மன அழுத்தம் என் றெல்லாம் பாடாய் படுத்தும். நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள் கிறோம்.

இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான்! குளிக்கும் போது, நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம். நீர் உச்சந்தலையில் படும் போது, உடம்பில் இருக்கும் சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக் கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாகத் தொடங்குகிறது! உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் உண்டாகும்!

இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான். சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம் கிடக்கும் இடத்தில் இருக்கும் கதிர் களைத்தான். எல்லார் மனமும் துக்கத்தில் இருக் கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்ல விதமாக இருக்காது. இவை நாம் குளிக்கும் போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது.
கோயிலுக்கு போய்ட்டு வந்தா குளிக்க கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம். கோயில் நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நட மாடும் ஒரு இடம். அத்தகைய கதிர்வீச்சை, குளித்து நீருடன் கலந்து வீணாக்கக் கூடாது என்ப தால்தான்!