பால் தினகரன் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி மூலம் மத மாற்றத்தில் ஈடுபடுவது தெரிந்த விஷயம் தான் என்றாலும், அந்தப் பணத்தில் தான் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காருண்யா பல்கலைக் கழகம் கட்ட 900 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. தினகரனின் Cogwheel Trust, Peniel Orphanage, Buckley Orphanage உள்ளிட்ட அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து அனாதைக் குழந்தைகளுக்கு உதவுவதாகக் கூறி பல்லாயிரக் கணக்கான கோடி நிதி பெற்று இந்த நிலத்தை அபகரிக்க பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
யானை வழித்தடம்
இந்த நிலம் Elephant Corridor எனப்படும் யானை வழித்தடத்தில் உள்ளதாகவும் அதை ஆக்கிரமித்தே காருண்யா பல்கலைக்கழகம் கட்டப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பல கிறிஸ்தவ அமைப்புகளை நிறுவியுள்ள தினகரன் குடும்பம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 30 இடங்களில் ஜெப கோபுரங்களைக் கட்டியுள்ளது. இவற்றில் பலவும் தினகரன் குடும்பத்தினரின் பெயரில் தான் இருக்கின்றன எனவும், ஜெப பேக்கேஜ் என்ற பெயரில் பல கோடி ரூபாய் சம்பாதிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இது அவ்வாறு இருக்கும் போது குழந்தைகளைக் காட்டி வெளிநாடுகளில் பிச்சை எடுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள அமைப்புகளில் இருந்து பல ஆயிரம் டாலர் ரூபாய் நிதியில் இங்கு தினகரன் மற்றும் தினகரனின் மனைவி இவாஞ்சலின் நடத்தும் அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
சாமியார்களுக்கு ஆடம்பரம் தேவையா என்று ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது.
ஆனால் வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்துவ நிருவனங்கள் சமூக சேவை, குழந்தைகள் பாதுகாப்பு என்ற பெயரில் நிதி பெறும் தினகரனின் அமைப்புக்கள் குழந்தைகளை முடவர்களாகக் காட்டி பணம் பெற்று தாங்கள் வெளிநாடு களுக்கு சுற்றுலா செல்வது தமிழக ஊடகங்களின் கண்களுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
நற்செய்தி
நற்செய்தியைப் பரப்புகிறோம் என்று அப்பாவி இந்துக்களையும், அனாதைகள் என்று ஏழைக் குழந்தைகளையும் காட்டி வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் இவர்கள் அந்த நிதியை சொந்த காரியங்களுக்காகவும் சொத்து சேர்க்கவும் பயன்படுத்துவது சட்ட விரோதமான செயல் என்பதால் பால் தினகரன் நடத்தி வரும் அமைப்புக்கள் திசிஸிகி சட்ட விதிகளை மீறுவதாகும், எனவே அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் உள்துறை அமைச்சகத்துக்கு பல ஆண்டுகளாக பொது மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காருண்யா பால் தினகரன் கிறிஸ்துவ கும்பலின் அராஜகங்கள்..
“மேற்குத்தொடர்ச்சி மலையில உற்பத்தியாகி வரும் காட்டாறு ‘மசையெறும்பு’ ஆறு எனப்படும் வள்ளத்து ஓடை. இது, நொய்யல் ஆற்றின் கிளை நதி. ஒரு காலத்துல 126 அடி அகலத்துல மசையெறும்பு ஆறு இருந்துச்சு. காருண்யா பல்கலைக்கழக கல்வி நிறுவனம், பெதஸ்தா இயேசு அழைக்கிறார் ஊழிய ஜெப கூடம் போன்ற கார்ப்பரேட்கள் எனப் பலரும் அதை ஆக்கிரமிச்ச பிறகு, இப்போ நான்கைந்து அடிகளாக அதன் அகலம் சுருங்கிப்போச்சு…” எனக் குற்றம் சாட்டுகிறார்கள், வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தினர்.
ஒரு நதி ஓடையானது!
கோவை மாவட்டம், மத்துவராயபுரம் பேரூராட்சியில் நல்லூர்பதி என்ற பழங்குடி கிராமம் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், நல்லூர்பதி கிராமம் உள்ள பகுதியில்தான் காருண்யா
பல்கலைக்கழகம், காருண்யா சர்வதேசப் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. நல்லூர்பதியில்
பழங்குடி மக்கள் வழிபடும் சடையாண்டி கோயிலுக்குச் செல்லும் வழித்தடத்தையும் புறம்போக்கு நிலங்களையும் காருண்யா நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகப் புகார்கள் உள்ளன. காருண்யாவுக்கு எதிரான வழித்தட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் மசையெறும்பு ஆற்றை ஆக்கிரமித்து காருண்யா நிர்வாகம் கான்கிரீட் மதில் சுவர் எழுப்புவதாகவும் நல்லூர்பதி பழங்குடி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சடையாண்டி கோயில் நாசம் செய்த…
‘‘காருண்யா வந்து நிலத்தையெல்லாம் ஆக்கிரமிச்சாங்க. மரங்களை வெட்டுனாங்க. சடையாண்டி கோயில்ல 400 வருஷங்களா இருக்குற மரங்களையும் வெட்ட முயற்சி செஞ்சாங்க. சாமி சிலைய உடைச்சாங்க. இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்காங்களோ…” என்று வேதனையுடன் பேசினார், சடையாண்டி கோயில் அருகே வசிக்கும் சின்னமூப்பன்.
நல்லூர்பதியைச் சேர்ந்த சிவகாமி, “சடையாண்டி கோயில்கிட்டத்தான் 50 வருஷமா குடியிருந்தோம். காட்டு நிலங்களைக் காருண்யா நிர்வாகம் வாங்குச்சு. அப்புறம், கோயிலுக்குள்ள எங்களைப் போகவிடாமப் பண்ணிட்டாங். ஆற்றையும் ஆக்கிரமிச்சிட்டாங்க. ஆடு, மாடுகூட வளர்க்க விடமாட்றாங்க. காட்டுக்குள்ள போய் விறகு எடுக்க விடமாட்றாங்க. எது புறம்போக்கு நிலம், எது பட்டா நிலம்னு தெரியல. ‘பழைய ரெக்கார்டுபடி பார்த்து அளந்து கொடுங்க’னு அரசாங்கத்துக்கிட்ட கேட்டுட்டுருக்கோம்’’ என்றார் உடைந்த குரலில்.
காருண்யாவில் மாணவர் கலவரம்
இங்கு மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து கேள்வி எழுப்பினால் நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்துகின்றனர் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் திடீரென திரண்டு கல்லூரிக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதையடுத்து நிவாகத்தினருக்கும், மாணவர் களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பேராசிரியர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்மீது காரை ஏற்றிச்சென்றதாக கூறப்படுகிறது.
இதில் அந்த மாணவருக்கு காயம் ஏற்பட்டதால் மற்ற மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல்கலைக்கழகக் கட்டடங்கள் மற்றும் பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோள் படி கல்லூரிக்குள் வந்த போலீஸார், மாணவர்கள் மீது கடும் தடியடி நடத்தி மாணவர்கள் கூட்டத்தைக் கலைத்தனர்.
பின்னர், பல்கலைக்கழகத்துக்கு இரண்டு வாரம் விடுமுறை அறிவித்துவிட்டு ஊழியர்கள் பெரும் படையோடு வந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்த மாணவ- மாணவிகளை இரவோடு இரவாக வெளியே விரட்டி அடித்தார்கள்.
இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகம் வசூலித்து வருவதாகவும், அதற்கான காரணம் கேட்டால் சொல்ல மறுக்கிறார்கள். இதுகுறித்து நாங்கள் பல முறை புகார் கூறியதும் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுத்து போலீசாரை கொண்டு எங்களை தாக்கி விரட்டி உள்ளனர் என்று கூறினர்.
ஊழியர்களையும் வாட்டி வதைக்கும் காருண்யா
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் “காருண்யா பல்கலையில் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் தருவதில்லை. மேலும் உரிய விடுப்பு எடுக்கவும் அனுமதிப்பதில்லை. நிர்வாகம் மிகவும் கொடுமைப் படுத்துகிறது” என்று ஊழியர் ஒருவர் பல்கலைக்கழக கட்டிம் மீது ஏறி தற்கொலை செய்வதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம், சுரண்டை என்னும் ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த தினகரன், தான் வகித்து வந்த வங்கி கிளார்க் வேலையை உதறி விட்டு, அதை விடப் பல்லாயிரம் கோடி லாபம் தரக்கூடிய “யேசு அழைக்கிறார்!” என்ற பிரார்த் தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்குகிறார். எண்பதுகளின் தொடக்கத்தில்.
அந்நிய நிதி!
அளவுக்கு அதிகமாக ஜெபக் கூட்டங்களை நடத்த அவருக்கு அயல்நாட்டு நிதி வர தொடங்குகிறது, அதை வைத்து எண்பதுகளின் மத்தியில் குறைந்த விலையில் கோயம்புத்த்தூரில் வாங்கிய நிலத்தில் காருண்யா கல்வி அறக்கட்டளை சார்பாக பொறியியல் கல்லூரி துவங்கப்படுகிறது
அதிலும் மிக அதிகமான பணம் வெளுக்கத் தொடங்கிய பிறகு, தமிழகம் முழுக்க பரவலாக நிலம் வாங்கிக் குவிக்கபடுகிறது.
2006-ஆம் ஆண்டு காருண்யா கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறிய பிறகு, அவர்களின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது.
45,000 கோடிகள்!
2008-இல் தினகரன்தீவிர நோய்க்கு ஆட்பட்டு இறக்கும்போது, அவரின் சொத்து மதிப்பு சுமாராக 45,000 கோடி ருபாய்கள் மடடுமே!!!
மாபெரும் மோசடியாக, திறமையாக வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய வியாபார உத்தியுடன், மதத்தின் பெயரால் பல கள்ளப் பிரசங்கிகள் தோன்றி, ”எங்கள் ஜெபத்தால் முடவன் ஒலிம்பிக்கில் ஓடுவான், குருடன் கலர் திரைபடம் பார்ப்பான், செவிடன் இளையராஜா இசை கேட்பான், ஊமை லியோனி பட்டி மன்றத்தில் பேசுவான்,” என்று கலர்கலராக பொய்களைச் சொல்லி, அப்பாவி மக்களின் மூளையைக் சலவை செய்து, அவர்களை மனநோயாளிகளாக்கி, அவர்களிடமுள்ள பணத்தையும், பொருளையும் மறைமுகமாக கோடி கோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள் இந்த நவீன திருடர்கள்.
நவீன மருத்துவம் தங்களுக்கு மட்டுமே!
இவர்களுக்கு ஏதாவது உடல் நல குறைவு வந்தால் மருத்துவமனைக்கு போகிறார்கள.
ஆம் முடவனை நடக்க வைக்கும் தினகரனின் மகள் ஏஞ்சல், சாலை விபத்தில் அகால மரணம் அடைந்த போது இவரால் உயிர் கொடுக்க முடிய வில்லை…
அது போல தனக்கு கிட்னி ஆப்ரேஷன் செய்து கொள்ள அமெரிக்க-புரூக்ளின் ஆஸ்பத்திரிக்குப் போனார். He died in Hospital.
தினகரனின் மனைவியும் கேன்சரால் இறந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கண் தெரியாதவர்களுக்கு கண் பார்வையை கொண்டு வந்து விடுவாராம், நல்ல காமெடி.
கள்ள பிரசங்கிகள்
கள்ளநோட்டு அடிப்பவன், ரூபாய் நோட்டை இரட்டித்துத் தருவதாக ஏமாற்றுகிறவன், பித்தளையை தங்கம் என்று ஏமாற்றுபவன், கள்ள லாட்டரிச் சீட்டு விற்பவன், திருட்டு வி.சி.டி. எடுத்து விற்பவன், போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றுகிறவன் என்று சமூகத்தை ஏமாற்றும் மோசடிக் கொள்ளளைக்காரர்கள் போன்றவர்கள் தான், இந்தக் கள்ளப்பிரசங்கிகளும்.
மற்ற நாணயமான கிறிஸ்துவர்கள் பாவிகளா?
இன்றைய உலகத்தில் வாழும் 600 கோடி மக்களில், தினகரனை மட்டுமே இயேசு தேர்ந்தெடுத்து, இவர் தங்கியிருக்கும் ஸ்டார் ஓட்டல்களைத் தேடிப் போய் காட்சியளிக்கிறார், மீதி உள்ள 599 கோடியே, 99 லட்சத்து, 99,999 பேரும் பாவிகள்..
அப்படித்தானே? இது உலகமகா பிராடுத்தனம் இல்லையா?
இவர் மகன் பால் தினகரன் தான் இப்போது வாரிசு. இங்கேயும் வாரிசு அரசியல்தான்…