காமராசருக்கும் பாஜகவிற்கும் என்னசம்மந்தம்?

பாஜகவுடன்
கூட்டணி
வைத்த முதல்
தமிழக தலைவர்
பெரும்தலைவர்
காமராசர்…

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில் காங்கிரசாரால் இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்!
ரூபாய் மதிப்பிழப்பு விசயத்தில் காமராசர் பெயரை பிரதமர் ஏன் பயன்படுத்தினார் எனவும் காமராசருக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம் எனவும் பல அதிமேதாவிகளும் காங்கிரஸ்காரர்களும் கேட்டுவருகின்றனர்..
மக்களுக்கு மறதிவியாதி எல்லாக்காலத்திலும் இருந்திருக்கிறது..
உண்மையில் தேசபக்தர்கள் எல்லோரும் எங்களின் தலைவர்கள்தான்..

காமராஜர் யார்?

காமராஜர் காங்கிரஸ் தலைவர் இல்லை.. ஸ்தாபன காங்கிரசின் தலைவர்..

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர், இந்திராவை பிரதமராக நியமித்தார்.. ஆனால் இந்திரா தொடர்ந்து இந்திரா ஊழல் மற்றும் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் 1969-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்கினார்..

இதனால் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஸ்தாபனகாங்கிரஸ் எனவும், இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (ஆர்) எனவும் பிளவுபட்டு காங்கிரசின் சின்னம் முடக்கப்பட்டது..

கருணாநிதி இந்திரா கூட்டணி

காங்கிரஸ் பிளவுபட்ட பின் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்திரா, காமராஜரை ஒருமையில திட்டிய கருணாநிதியுடன் கூட்டணி சேர்ந்து காமராஜரை நிந்தித்தார்…
கருணாநிதி – இந்திரா கூட்டணி காமராசரை மரியாதை குறைவாக நடத்தியது….

முதல் கூட்டணி

பின்னர் 1971-ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காமராசரின் ஸ்தாபன காங்கிரஸ், பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்துடன் இணைந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது… காமராசர் முதல்வராகவே கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இந்திரா கருணாநிதியுடன் கூட்டணி வைத்தார்.. அந்த தேர்தலில் காமராசர்-ஜனசங்க கூட்டணி தோற்றது!
பாஜகவுடன் கூட்டணி வைத்த முதல் தமிழக தலைவர் பெரும்தலைவர் காமராசர்..
ஆனால் மீண்டும் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்- பாஜகவின் ஜனசங்க கூட்டணி 1975-ல் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இந்திரா காங்கிரசை மண்ணைகவ்வ செய்தது…
இதனால் இன்றும் குஜராத் ஸ்தாபனகாங்கிரஸ் தலைவர்கள் வீட்டில் காமராசர் படம் உள்ளது!

மெர்ஜென்ஸி

இதற்கிடையே ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் தேர்தலில் முறைகேடாக வெற்றி பெற்ற இந்திராவை அலகாபாத் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்ததால் இந்தியாவில் சட்டவிரோத எமர்ஜென்சி கொண்டுவந்தார் இந்திரா!
எமர்ஜென்சியில் சுதந்திரபோராட்ட காங்கிரசாரை கைது செய்து, இந்திரா சிறையிலடைத்தார்.. காந்தி பிறந்த நாளிலாவது சுதந்திரபோராட்ட உண்மை காங்கிரசாரை இந்திரா விடுவிப்பார் என காத்திருந்தார் காமராசர்..
ஆனால் இந்திராவோ சுதந்திர போராட்ட வீரர் ஆச்சாரியா கிருபாளினியை கைது செய்து துன்புறுத்தினார்.. இதனால் மனம்வெந்த காமராசர் 1975ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார்..

ஸ்தாபன காங்கிரஸ்

காமராசர் இறந்த பிறகு ஸ்தாபன காங்கிரசின் ஒரு பிரிவினர் மூப்பனார் சிவாஜிகணேசன் போன்றோர் இந்திரா காங்கிரசில் சேர்ந்தனர்..

சில தீவிர காமராசர் பக்தர்கள் காமராசரை கொன்ற இந்திராவோடு சேரக்கூடாது என்ற காரணத்தால் ஸ்தாபன காங்கிரசிலேயே தொடர்ந்தனர்..

பின்னர் காமராசரின் பக்தர்களின் ஸ்தாபனகாங்கிரஸ், பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கம் மற்றும் பாரதிய லோக்தளம் மற்றும் சோஷலிச கட்சி ஆகியவை இணைந்து ஜனதா பரிக்ஷத் கட்சி உருவானது..

இந்த கூட்டணி 1977-ல் நடைபெற்ற தேர்தலில் இந்திராவை மண்ணைகவ்வ செய்து பெரும் வெற்றி பெற்று மொராய்ஜி தேசாய் அவர்களை பிரதமராக்கியது..
அந்த அரசில் அடல்பிஹாரி வாஜ்பாய் மத்திய அமைச்சர் ஆனார்..

உருவானது பாஜக…

இந்த அரசு கவிந்தபோது காமராஜரின் ஸ்தாபனகாங்கிரசாரின் ஒரு பகுதியினரை இணைத்து, ஜனசங்கம் என்ற கட்சி பாஜக என்ற புதிய கட்சியாக உருவானது.. இதில் இணைந்த காமராசர் பக்தர்களின் பிரதான நோக்கம் எந்த காலத்திலும் இந்திரா குடும்பத்தை எதிர்க்க வேண்டும் என்பதே!

ஃபாக்ஸ்

ஆக தற்போதைய பாஜக வில் உள்ள ஒரு பிரிவினர் காமராசரின் பழைய ஸ்தாபன காங்கிரஸ்காரர்கள்..

டெல்லியில் மோடி புகழ்ச்சி

எனவேதான் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக பேசிய பிரதமர் “காமராசர் உயிரோடு இருந்திருந்தால் இந்த விசயத்தை பாராட்டியிருப்பார்” என்று டெல்லியில் பேசினார்..
ஓட்டுவங்கிக்காக காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் காமராசரை புகழ்வது போலல்லாமல் டெல்லியில் காமராசரை புகழ்ந்தார் பிரதமர்..

காங்கிரஸை எதிர்ப்பதே குறிக்கோள்

காமராசர் கடைசி வரை ஸ்தாபன காங்கிரசில்தான் இருந்தார்.. காமராசரை கொன்ற இன்றைய இந்திரா காங்கிரசாரும், நடுநிலமைவாதிகளும், காமராசரின் பக்தர்களும் இருட்டடிக்கப்பட்ட காமராசரின் உண்மையான வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளவும்…

உண்மையான வரலாற்றை படித்தால் தான் பாஜகவுக்கும் காமராசருக்கும் இருக்கும் தொடர்பும் பிரதமர் மோடி ஏன் காமராசரை நினைவுகூர்ந்தார் எனவும் புரியும்…