ஓராசிரியர் பள்ளிகள் (சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம்)

‘‘பள்ளி இருக்கும் இடத்திற்கு மாணவர்கள் செல்ல முடியவில்லையா?
மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு பள்ளியை கொண்டு சேர்ப்போம்’’
சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் நடத்தப்படுவது தான் இந்த ‘‘ஓராசிரியர் பள்ளிக் கூடங்கள்.’’ இந்த ஓராசிரியர் பள்ளிகளில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளவை!

எங்கெல்லாம் உள்ளது?

திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், வேலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வருகின்றது.

எவ்வளவு?

சுமார் 850 கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகள் தற்போது இயங்கி வருகின்றன. 25,500 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் படித்து பயன் பெறுகிறார்கள்.

ஓராசிரியர் பள்ளி என்றால் என்ன?

மிகவும் பின்தங்கிய கிராமங்களில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை, போதுமான பயிற்சிகளுடன் கொண்டு சேர்ப்பது என்பது மிக கடினமான வேலை.
மேலும் கல்வியின் பிற்கால முக்கியத்துவம் அறியாமல், தேர்வில் தோல்வி என்றவுடன் படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்பதால் 8ம் வகுப்பு வரை கட்டாய ‘பாஸ்’ என்ற சட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது.

இதனால் அடிப்படை கல்வியில் மாணவர்கள் போதிய கவனம் செலுத்துவது இல்லை என்பதே உண்மை.
இதனால் தேர்வு, போட்டி தேர்வுகள் என்று எதனையுமே எதிர்கொள்ள முடியாத மாணவ சமுதாயமாக இந்த கிராமபுற மாணவர்கள் உள்ளனர்.

பின் தங்கிய கிராமப்புற பள்ளிகளில் கல்வி மட்டுமில்லாது இதுவரை ரூபாய் 4.75 லட்சம் செலவில் 950 குளிக்கும் வசதியுடன் கழிவறைகள் கட்டி கொடுத்துள்ளோம். மெகா மருத்துவ முகாம்களை நடத்துகிறோம், கோவில் குளங்களை தூர் வாருகிறோம், ஆயிரம் பெண் ஆசிரியர்கள் கிராமப் புறங்களில் பணியில் உள்ளனர்.

பேருதவி

இந்த அடிப்படை புரிதலை அளிக்கவே ஓராசிரியர் பள்ளிகள் பெரிதும் உதவி வருகின்றன.
கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள் போதிக்கப்படுகின்றது.
மாநில பள்ளி திட்டத்தின்படி தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாடங்கள் புரியும்வரை கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
அந்தந்த கிராமங்களில் உள்ள இளைய தலைமுறை ஆசிரியர்களும் இதில் ஈடுபாட்டோடு கற்று தருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் இந்த ஓராசிரியர் பள்ளி சேவை சென்று சேர்ந்திட வேண்டும்.
அப்போது தான் இந்த பின்தங்ஙகிய கிராம மாணவர்களுக்கு அடிப்படை விதிகள், அடிப்படை கல்வி கிடைக்கும்.
உயர்நிலைப் பள்ளி தேர்வு, போட்டித் தேர்வு என்று முன்னேறி செல்ல முடியும். மருத்துவ முகாம்கள், தூய்மை இந்தியா கழிப்பரை வசதிகள், நீர் மேலாண்மை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, விளையாட்டு நிகழ்ச்சிகள் என பின்தங்கிய கிராம பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சிறப்புத் திறனை வெளிக்கொண்டு வரவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் ஓராசிரியர் பள்ளிகள் மூலம் பெரும் முயற்சி எடுக்கப்படுகிறது.
ஆங்கோர் பிள்ளைக்கு எழுத்தறிவித்தல் என்று பாடிய பாரதியின் வாக்கினை பின்பற்றி இந்த ‘‘ஓராசிரியர் பள்ளிக்கு’’ உதவுமாறு அன்போடு கேட்டுக் கெள்கிறேன்.

வாருங்கள்! சேர்ந்து தொண்டு செய்வோம்…
உங்கள் மேலான பங்களிப்பை அன்புடன் எதிர்பார்க்கிறோம். கிராமங்கள் ஒளிர்ந்தால் மட்டுமே பாரதம் செழிக்கும்…


அன்புடன்
கௌரவ செயலர்
ஸ்ரீ ஸி.றி.கிருஷ்ணமாச்சாரி