ஏமாற்றப்படும் ரசிகர்களே…

ஏமாற்றப்படும் ரசிகர்களுக்காகத்தான் நாங்க போராடுறோம்.. மேட்டருக்கு வருவோம்..
ஏழாவது படிக்கும் சிறுவர்கள் 4 பேர் தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 2,000 ரூபாய் கொடுத்து படத்தை காலை 6 மணிக்கு படத்தை பார்த்து இருக்கிறார்கள். இதில் ஒரு வீட்டில் சிறுவனின் பிடிவாதத்தை தாக்கு பிடிக்க முடியாமல் கேஸ் சிலிண்டர்க்கு எடுத்து வைத்திருந்த பணத்தை கொடுத்து சமாளித்திருக்கிறார் தாயார். நெய்வேலியில் காதில் விழுந்த நிலவரம் இது.

இந்து மதத்தை மட்டும் சீண்டி, சிலுவை சுமக்கும் நாயகன். கலாசாரம் அழிக்க துடிக்கும் ஹீரோ!

பரம ரசிகன்

பையன் கேட்கிறான் என்றால் பணத்தை கொடுத்து சினிமாவுக்கு அனுப்பத்தான் வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ரெண்டுங்கெட்டான் வயதில் உள்ள பிள்ளைகள் கேட்டதை செய்யாவிட்டால், எப்படியெல்லாம் ரியாக்ட் பண்ணுவார்கள் என்பது பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும். கோபம் மட்டுமல்ல ஏதாவது ஆகித்தொலையப்போகுது என்ற பயமும் கலந்த மொமன்ட் அது.
சரி பணத்தை கொடுக்காவிட்டால் சிறுவர்கள் என்ன செய்வார்கள்? ஒன்று வீட்டுக்குள்ளேயே திருட ஆரம்பித்து விடுவார்கள். அல்லது தெரிந்த உறவுகளிடம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி சொல்லி காசு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.
இதெல்லாம் சாதாரண ரகம். எக்ஸ்ட்ரீம் ரகமும் உண்டு.. களவாணி படத்தில் பொறுக்கி மாதிரி ஊர் சுற்றிக்கொண்டு தடிமாடு மாதிரி இருக்கும் ஒரு கதாநாயகன், தனது வீட்டில் செலவுக்காக கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் டிவியை உடைப்பேன் என்று கல்லை தூக்குவானே.. அதையெல்லாம் சினிமாவில் ரசிப்போம் ஆனால் அதன் பின்னால் உள்ள அயோக்கியத்தனமும் சைக்கோ தனமும் என்றைக்காவது நமக்கு மண்டையில் ஏறி இருக்கிறதா?
வருவாய் ஈட்டும் முன் சகலத்திற்கும் பெற்றோரை மட்டுமே நம்பியிருக்கும் இளைய தலைமுறையிடம் இருந்துதான் இப்படி ஈவிரக்கமில்லாமல் இந்த மாஸ் ஹீரோக்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்..

சினிமா கணக்கு

எனக்கு இவ்ளோ சம்பளம்னு பெரும் தொகையை ஹீரோ கேக்கறான். அவன் சம்பளத்தை அடிப்படையா வெச்சி பிரமாண்டமா மட்டுமே எடுப்பேன்னு தயாரிப்பாளருக்கு இந்த அரைவேக்காடு டைரக்டர் முண்டம் தண்ட செலவு வெக்கிறான்.
தண்டமா கொட்டி அழும் தயாரிப்பாளர், நான் இவ்ளோ செலவு பண்ணியிருக்கேன்னு விநியோகஸ்தர் தலைல ஏத்தறான், அவன் தியேட்டர்காரங்க தலைலை கை வைக்கிறான்.
கடைசியில கவர்மெண்ட்டையும் ஏமாத்தி டிக்கெட்விலைல ரசிகர்கள்கிட்ட மொத்தமா கொள்ளை அடிக்கறானுங்க..
இதுல ஏமார்ற கவர்மெண்ட்டுக்கும் வெக்கம் கிடையாது. ஏன்னா படத்தை வாங்குறவன்ல

முக்கால்வாசி அரசியல்வாதிங்க பினாமி.
ரசிகனுக்கும் நம்மளை இப்படி ஏமாத்தறாங்களேன்ற உணர்வு இல்லை..

கலர் கலரா பணம்

இன்னொரு வகையான அக்கப்போர் இருக்கு.. யார் யாருடைய கருப்பு பணத்தையோ, உள்ளே வெள்ளையா கொண்டு வர்ற தயாரிப்பு நிறுவனங்கள்.. இவனுங்களுக்கு இந்த மாஸ் ஹீரோக்கள்தான் சரியான எடுபுடி கம் பினாமி..
படம் வெளியான தியேட்டர்களில் ஒன்னு ரெண்டு தவிர பாக்கி எல்லாமே வெறிச்சோடும். திரும்ப திரும்ப பாக்கற வெறி பிடிச்ச ரசிகனைக்கூட தியேட்டர் பக்கம் பாக்க முடியாது. வேற எங்கயும் வேணாம், அப்படியே வெளியே போனீங்கனா, உங்க ஊர்ல உங்க கண்ணாலேயே இந்த நிலைமையை பாக்கலாம்..
ஆனா, 500 கோடி வசூல் ஐயாயிரம் கோடி வசூல்னு சொல்லி இந்த உஷார் கும்பல் எப்பவும் உதார் விட்டுக்கிட்டே இருப்பானுங்க.
எந்த ஊர்ல டெய்லி அடிச்சி புடிச்சி ஜனங்க பாக்கறதுல இவ்ளோ கலக்சன் ஆவுதுன்னு எவனுக்குமே தெரியாது.
சில பண முதலைகள் எடுப்பது சினிமா அல்ல, சினிமா என்ற பெயரில் மிகப்பெரிய சூதாட்டம்.
இதுல பல ஏரியாவுல கம்பனிங்க டிசைன் டிசைன்னா ஒர்க் பண்ணும். சமூக வலைத்தளங்கள்ல அவங்க கிரியேட் பண்ணித்தர்ற மாய பிம்பங்களை பார்த்துதான் இங்கே நிறைய பேர் குதிக்கிறாங்க.

மாஸ் ஹீரோத்தனம் ஒழிக…

மறுபடியும் சொல்கிறோம் தமிழ் சினிமாவில் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் இந்த மாஸ் ஹீரோக்கள்.. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு வெறும் பில்டப் மனநிலையை மட்டுமே திரும்பத் திரும்ப வளர்த்து மூளை மழுங்கிப்போய் கொண்டிருக்கும் பெரும் கும்பலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் இந்த மாஸ் ஹீரோக்கள்
திரும்பிப் பார்த்தாலே வில்லன் விழுவது போன்ற அபத்தமான காட்சிகள்.. பஞ்ச் டயலாக்குகள் பில்டப் சீன்கள் போன்றவற்றை மட்டும் நம்பி முழுக்க முழுக்க பிழைப்பை நடத்துபவர்கள்.
மேலே சொன்ன அம்சங்களைத் தவிர்த்து விட்டு இவர்களை ஆர்ப்பாட்டமே இல்லாமல் கதையோடு ஒன்றி ஒரு படம் நடிக்க சொல்லுங்களேன் பார்க்கலாம்..

தரம் வரும்

இவர்களால், ரசிப்புத் தன்மை என்பது நாசமாகிக் கொண்டிருக்கிறது. மற்ற திறமையான கலைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.. தரமான சினிமாக்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் தமிழ் சினிமா உலகமும் தவியாய் தவிக்கிறது, கண்ணீர் வடிக்கிறது..

மறுபடியும் சொல்கிறோம்.. அடுத்த தலைமுறையை சீரழிப்பதில் மது போதையை போல ஆபத்தானவர்கள் தமிழ் சினிமா உலகில் இருந்து அகற்றப்பட வேண்டிய இந்த மாஸ் ஹீரோக்கள்…