இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த பாகிஸ்தான், பங்களா தேஷ் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த அந்நாட்டின் பெரும்பான்மை மக்களான இஸ்லாமியர்கள் அந்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள் என்ற குடியுரிமை சட்ட திருத்தம் மோடி அரசால் கொண்டு வரப்பட்டது.
சதி
இதனை எதிர்த்து சிலர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உலக நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தன. அதே நிலையில் திட்டமிட்டு ஒரு நாட்டிற்குள் இஸ்லாமியர்கள் ஒன்றாக புகுந்து, பின்பு அதனை தங்கள் வசம் கொண்டுவந்து, பிறகு அந்நாட்டின் இறையாண்மையை அழிக்க நினைப்பதாகவும், இதனால்தான் ஒவ்வொரு நாட்டிற்கும் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை கண்டறிய வேண்டிய தேவை இருப்பதாகவும், அதனை எங்கள் நாட்டின் பாதுகாப்பு கருதி தாங்கள் செய்துவிட்டதாக இந்தியா மறைமுகமாக உலகிற்கு சொன்னது.
எதிர்த்த சில நாடுகள்
அப்போது ஐரோப்பிய யூனியனை சேர்ந்த சில நாடுகள் இந்தியாவின் சிகிகி சட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன், உடனடியாக தங்கள் ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய யூனியனை சேர்ந்த சில நாடுகளே கள்ள குடியேறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலியாகும் அதே நாடுகள்
உலக நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் சட்டவிரோத குடியேறிகள் & அகதிகள் படையெடுப்பால் மிகப்பெரும் ஆக்கிரமிப்பு பிரச்சினையில் சிக்கி திணறுகின்றன. சிரியா போருக்கு பின்னர், இஸ்லாமிய நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு லட்சக்கணக்கில் இடம்பெயரும் அகதிகள் பிரச்சினையால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
துருக்கியின் பழி
இதற்கிடையில், சிரியாவில் ரஷ்யா நடத்திய சமீபத்திய தாக்குதலில் துருக்கியை சேர்ந்த ராணுவத்தினர் பலர் பலியாகினர். இதற்கு பழிவாங்கும் வகையில் துருக்கி, தன்னுடைய எல்லை வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் வகையில் உள்ள தன்னுடைய எல்லையோர மின்வேலியை திறந்து விட்டுவிட்டது !! சிரியாவிலிருந்து வந்து துருக்கியில் தங்கியிருந்த அகதிகள் ஆயிரக்கணக்கில் இப்பாதை வழியாக கிரீஸ் நாட்டிற்குள் நுழைந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் சென்றுவிட திட்டமிட்டு உள்ளனர்.
அதிர்ச்சியில் ஐரோப்பா
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகள் கிரீஸ் நாட்டிற்குள் அவர்கள் நுழையாத வண்ணம் கிரீஸ் நாட்டின் ராணுவத்தை கொண்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை மீண்டும் துருக்கிக்குள் விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறது.
சக இஸ்லாமியராக இருந்தாலும்
சிரியாவிலிருந்து அகதியாக வந்திருக்கும் சக இஸ்லாமியர்களை இன்னொரு இஸ்லாமிய நாடான துருக்கி முரட்டுத்தனமாக விரட்டி அடிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் துருக்கி மக்கள். சக இஸ்லாமியர்களாக இருந்தாலும், சிரியா நாட்டிலிருந்து தங்கள் நாட்டிற்குள் வந்து தங்களை சுரண்டுவதை எதிர்த்து வன்முறையிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். துருக்கிக்கு இதனால் உளநாட்டிலேயே ஏகப்பட்ட பிரச்சினை.
அகதிகளை அன்று வரவேற்ற நாடுகள்!
ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து போன்ற பல நாடுகளும் முன்னர் அகதிகளை வரவேற்ற நிலை போக இப்போது துருக்கியிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய விரும்பும் அகதிகளை ஏற்றுக்கொள்ள இந்த நாடுகள் எதுவுமே தயாராக இல்லை. ஏற்கனவே அடிப்படை வாதமும் வன்முறையும் தங்கள் நாடுகளுக்குள் நுழைந்த அகதிகளால் தங்களுடைய அடையாளங்கள், கலாச்சாரம், மொழி, பண்பாடு காணாமல் போவதோடு வன்முறைகள் பெருகிவிட்டன. அடிப்படைவாத இஸ்லாம் காலூன்றுகிறது என்று அகதிகளை வரவேற்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் அனைவரிடம் இருந்தும் வருகிற எதிர் குரல்கள் அதிகமாகிவிட்டன. அகதிகள் பிரச்சினையோடு அடிப்படைவாத பிரச்சினையும் சேர்ந்தே வருகிறது என்பதை அந்தந்த நாடுகளின் அரசுகளும் உணரத் துவங்கிவிட்டன.
குடியுரிமை சட்டம் பாயும்
ஆனால் தற்போது ஐரோப்பிய நாடுகளில் துருக்கி எல்லையை பயன்படுத்தி கிரீஸ் நாட்டிற்குள் நுழைந்து அங்கிருந்து சட்டவிரோதமாக ஜெர்மனி, பின்லாந்து போன்ற நாடுகளை குறிவைத்து இஸ்லாமிய அகதிகள் படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. எனவே எந்த ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றம் இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்ததோ அங்குள்ள நாடுகளை தங்கள் நாட்டு மக்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளன.
இந்தியா நடைமுறைபடுத்திய சட்டம் ஒன்று,
இன்று உலக நாடுகள் பலவற்றிற்கும்
வழிகாட்டியாக அமைந்துள்ளது.
அகதிகள் வெளியேற்றம்
குறிப்பாக கிரீஸ், பின்லாந்து, லிதுணியா, மால்டா, போலந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அதிக அளவில் அகதிகள் திருட்டு வழியில் குடியேறி இருக்கலாம் என்பதால், குடியுரிமையை உறுதி படுத்தும் வகையில் கணக்கெடுப்பு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவின் வழியில் சட்டவிரோதமாக குடியேறியவர் களில் வெளியேற்ற தங்கள் நாடுகளுக்கு ஏற்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதன்மூலம் அகதிகள் அனைவரும் வெளியேற்றப்படுவார் கள் என கூறப்படுகிறது.
அரபு நாடுகளிடம் வலியுறுத்தல்
இதற்கு இடையில் பல உலகநாடுகளில் அகதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களை பணக்கார அரபு நாடுகளான சவூதி, துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகள் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்நாடுகள் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. உலகில் இந்தியா நடைமுறைபடுத்திய சட்டம் ஒன்று, இன்று உலக நாடுகள் பலவற்றிற்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.