இலவசங்களுக்கு அடிமையாகிவிட்ட தமிழா…

நம் முன்னோர்கள் ரத்தம் சிந்தி போராடி பெற்ற இந்த சுதந்திரம் இன்று ஏன் பறி போகிறது?
கார்ல்மார்க்ஸ் எனும் அறிஞர் “ஒவ்வொரு உரிமையாக அவர்களுக்கே தெரியாமல் நாசுக்காக பறித்து வந்தால் இறுதியில் சுதந்திரம் என்றால் என்னவென்றே மக்கள் மறந்து விடுவார்கள் “ என்று கூறி உள்ளார்.
காட்டுப்பன்றிகளை பிடிப்பது எப்படி ?
காட்டில் ஒரு சிறிய பகுதியில் பன்றிகளுக்கு பிடித்த உணவான சோளங்களை போடுங்கள். அவை அங்கு கூட்டமாக வந்து உண்ண தொடங்கும். சிறிது நாட்களுக்கு பிறகு ஒரு பக்கம் வேலி போடுங்கள். பன்றிகள் மற்ற 3 வழிகளில் வந்து சோளங்களை சாப்பிட்டு செல்லும். ஒரு சில வாரங்களில் மற்றொரு பக்க வேலியை கட்டி விடுங்கள் பன்றிகள் தொடர்ந்து உண்ண வரும் 3 வது பக்க வேலியையும் முடியட்டும். பிறகென்ன சில நாட்களில் நான்காவது வேலியும் போட்டு விடுங்கள். கேட் திறந்து இருக்கட்டும். பன்றிகள் உள்ளே வந்த பிறகு கேட்டை இழுத்து மூடி விடுங்கள்.
சுதந்திரமாக உணவை தேடி தின்ற காட்டுப் பன்றிகள் இந்த வேலிக்குள் மாட்டிக்கொண்டவுடன் சுத்தி சுத்தி ஓடி வரும். பிறகு சோளங்களை பார்த்த பின் சாப்பிட துவங்கும். பிறகு இதுவே பழகி விடும்.

இலவசங்களும் நம்மை சிறை படுத்தி விட்டன!
இப்படித்தான் நம் மக்களும், உயிரை கொடுத்து வாங்கி தந்த சுதந்திரத்தை இழந்து விட்டோம்.-இந்த இலவசங்களால்.
ஒட்டு போட வேண்டியவர்கள் கேட்க வேண்டிய கேள்விகள் !
இந்த அரசு என்ன நன்மைகள் செய்து உள்ளது? என்ன திட்டங்கள் மக்கள் நன்மைக்கென்று வைத்துள்ளது.? கல்வி, தரமான உள்கட்டமைப்பு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சாலைகள் என எதனை கடந்த ஐந்து ஆண்டுகள் இந்த அரசு சாதித்து உள்ளது என்று யோசிக்காமல் சிறு அல்ப ரொட்டி துண்டுகளை, பன்றிகள் சோளங்களை பொறுக்கிதின்று சாப்பிடுவது போல நமது ஜனநாயக உரிமையான வாக்கு சீட்டை கேவலம் 500, 1000 2000 ரூபாய்க்கு விற்று விடுகிறோம். பிறகென்ன? அந்த பன்றிகளை போல, இந்த இலவசங்களுக்கு மயங்கி, அரசியல் வாதிகளின் ஊழல்களால் நல்ல கல்வி நல்ல சாலைகள் இன்றி, சாலைகளே இன்றி, குப்பை மேடுகளின் அருகே வேலை வாய்ப்பு இல்லாமல் அலைகிறோம்.
சோசியலிசம், கம்யூனிசம், என கூறி நம்மை கையேந்த வைக்கும் இந்த இலவசங்களை உதறி தள்ளி, நாட்டின் வளமையான எதிர்காலத்திற்கான திட்டங்கள் என்ன என்று கூறும் நல்ல தலைவர்களை தேடி நமது வாக்குகளை அளிப்போம். இலவசங்களை தவிர்ப்போம்.. நாம் அறிவுள்ள மானமுள்ள மனிதர்கள்தானே..அடுத்த தலைமுறையினருக்காக நாம் இதனை செய்ய வேண்டும்.