அந்நிய மதபிடியில்இருக்கும் இந்துஆன்மீகமண்காக்க…

இந்தியாவின் ஆன்மா எது என்றால் அது ஆன்மீகம். தமிழகமே ஆன்மீக பூமி. கோயில்களின் இருப்பிடம் தமிழகம் தான். ஆனால் காலத்தின் கொடுமையான விளையாட்டில் நமது கோயிலின் அரும்பெரும் சொத்துகள் களவாட பட்டு கொண்டிருக்கின்றன.
அன்று வெளியே இருந்து வந்த கொடூர மண் ஆசை பிடித்தவர்களால்!! இன்று நம்மால் அரசில் வைக்கபட்ட உள்ளு£ர் களவாணிகளால்! அந்நிய மத வியாபாரிகளிடமிருந்து தாய் மண், நமது ஆன்மீக மண் காக்காமல் ஒயமாட்டேன் என வீர சபதம் செய்து களம் இறங்கியுள்ள தமிழ்நாடு முன்னேற்ற கழகம் நிறுவனர் திரு.எஸ்.கே.சாமி உடன்
ஒரு உரையாடல்…

மிகவும் சந்தோஷம். பொது வாழ்வில் பதவியும், பணமும் மட்டுமே பிரதானம் என்று இருக்கும் சூழலில் நீங்கள் ஏன் போராட்ட பாதையை தேர்ந்தெடுத்தீர்கள்?

என் தந்தை நான் பிறந்த போதே சொல்லி விட்டாராம். இவன் சமூகத்திற்கான பிள்ளை என்று. அப்படித்தான் என்னை சொல்லி வளர்த்தார். அப்படித்தான் நானும் வளர்ந்தேன். ஆன்மீகம் மட்டுமே என் மனதில் நிறைவை தருகிறது.
கடினமான பாதை, போராட்டம் என்பதெல்லாம் கூட ஒரு மன நிலை தான். இதை நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்ய வேண்டும். இது நம் வீட்டு பிரச்சனை. நான் நாட்டின் பிள்ளை. இது எனது முக்கிய கடமை.

லயோலாவை எதிர் கொள்வது சாமானிய காரியமா?? அவர்களின் பின்புலம், அதிகார பலம், பண பலம் கொண்டவர்கள் அல்லவா??

வருடம் 2019. லயோலா கல்லூரியில் ஒவிய கண்காட்சி என்ற பெயரில் நமது இந்து தெய்வங்களை மிகவும் வக்கிரமாக, கொச்சையாக வரைந்து வைத்திருந்தனர். பாரத மாதாவை நிர்வாணமாக வரைந்து வைத்திருந்தனர். இன்னும் சொல்லவே கூசும் அருவெறுப்பான குப்பைகளை வைத்திருந்தனர் ஒவியங்கள் என்ற பெயரில்.
அப்போதே சபதம் எடுத்துக் கொண்டேன் இந்த லயோலா கல்லூரிக்கு விநாச காலம் வந்துவிட்டது அதுதான் இந்த விபரீத புத்தி. இந்த கல்லூரியை நாம் ஆராய வேண்டும். என முடிவெடுத்தேன்
அன்றே என் வேலையை தொடங்குவேன் என்று உறுதி மொழி எடுத்து கொண்டேன்.

லயோலா கல்லூரி மிகவும் பிரபலமானது. வலிமையானது! அவ்வளவு சுலபமா??

லயோலா கல்லூரியின் லட்சணம் எல்லோருக்கும் தெரிந்தது தான்! கிறிஸ்துவ ஏஜென்டுகள் என்றால் மிகையில்லை. கூடங்குளம் உதயகுமார் கலகம், ஸ்டெர்லைட் கலகம் என ‘சர்ச்சுகளின் தாதா’வாக செயல்படுவது லயோலா தான்.
இவ்வளவு பணமும், பணத்தால் வரும் பலமும் எப்படி வந்தது என்று நாம் இனி ஆராய வேண்டும்.

குத்தகை தான்!

1600ம் வருடம் முதல் மேற்கத்திய நாடுகள் வளம் மிகுந்த இந்தியாவினை சுற்றி வர தொடங்கியது.
கிழக்கிந்திய கம்பெனி பல ஊர்களுக்கும் சென்று, எனக்கு உங்கள் ஊரை குத்தகைக்கு தருமாறு கேட்டான். நிறைய பணம் தருகிறேன் இதனை வியாபாரத்திற்கு மட்டுமே கேட்கிறேன் என்றான்! பல மாநிலங்கள் மறுத்தன.
மதராசா பட்டினம் மட்டுமே முதலில் குத்தகைக்கு விட சம்மதித்தது. இடத்த கொடுத்தா மடத்த பிடிக்கிற மாதிரி, கொஞ்ச காலத்தில் ஆங்கிலேயன் தந்திரமாக, பிரிட்டிஷ் அரசின் பண உதவியோடு பாரதத்தின் பல இடங்களை குத்தகைக்கு எடுத்து விட்டான்.

மாறியது காட்சி

ஆங்கிலேயன் இப்போது நமது சிற்றரசர்களிடமிருந்து வரி கேட்க தொடங்கினான். இது என் இடம். நீ இங்கு பெறும் பணத்தில் எனக்கும் பங்கு உண்டு என்பதே அவன் லாஜிக்.
வேலு நாச்சியார் தான் முதல் எதிர்ப்பு குரல் கொடுத்தார். வருடங்கள் ஓடியது. சுதந்திரம் வந்தது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். அப்படி என்றால் எல்லாவிதமான குத்தகைகளும் முடிவுக்கு வந்து விட்டது.
மேலும் 1950ம் ஆண்டு நமது அரசு சாஸனம் எழுதப்பட்டு விட்டது. நமது பாரத நாடு மீண்டு வந்து விட்டது.
பிரிடிஷ்காரன் போகிற போக்கில் கொடுத்த குத்தகைகள் மதரீதியானவை! முதலில் அதனை கொடுக்கும் உரிமையே அவனுக்கில்லை. மேலும் சுதந்திரம் வந்தவுடன் அனைத்து நிலங்களும் இந்திய அரசுக்கே சொந்தம்.

லயோலா கல்லூரி நிலம் யாருடையது?

லயோலா கல்லூரி நிலம் சிவன் கோயில் சொத்து. அங்கு ஒரு ஏரி உள்ளது. மேலும் அரசு நிலமும் உள்ளது. மொத்தம் 99 ஏக்கர் நிலர். கணக்கு போட்டு பாருங்கள்.
இன்றைய மதிப்பு என்ன என்று?? சுமார் 1780 கிரவுண்ட்! ஒரு கிரவுண்ட் 10 கோடி என்றால்!!! அதனால் தான் கேட்கிறோம் ஆவணங்கள் எங்கே என்று??

பொது நோட்டீஸ் என்று கூறி இருப்பதால் அடுத்து எனன செய்ய முடியும்?

மக்களுக்கு இந்த செய்தி போய் சேர வேண்டும். நம் கையை கொண்டு நம் கண்ணை குத்துவதா? நமது கோயில் நிலத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மை வேரறுக்க திட்டம் போடுவதா?
அதனால் தான் பிப்ரவரி 6 அன்று திருவல்லிக்கேணி கோயிலில் இருந்து ஆண்டாள் கோயில் வரை நடைபயணம் செய்கிறோம். அடுத்த நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்.

நீங்கள் ஒரு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். அதுவும் மிகவும் பிரபலமானவர். நீங்கள் எப்போது வழக்கு போடுவீர்கள்!!

உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
1881ம் ஆண்டு ஆங்கிலேயர்கள், தங்கள் நிர்வாகம் சரியாக நடக்க வேண்டியே நீதிமன்றத்தை ஆரம்பித்தனர். காசு வாங்கி கொண்டு, பொது மக்களுக்கு தங்களின் சொந்த நலனை கருத்தில் கொண்டே நீதி வழங்கினர்.
இதில் என்ன ஒரு வேதனை என்றால் இன்றும் பெரும்பாலான அதே சட்டங்கள் தான் பயன்பாட்டில் உள்ளன. அவர்களது சட்டங்கள் இந்துக்களையும் நமது தர்மத்தையும் காக்காது.
இவ்வளவு ஏன்? அவன் உருவாக்கிய நீதிதுறையை பாருங்கள். உயர் நீதிமன்றங்களின் உள் விவகாரங்களில், மாநில அரசு, மத்திய அரசு ஏன் உச்ச நீதிமன்றம் கூட தலையிட முடியாது.
நிச்சயம் வழக்கு வரும். இப்போதைக்கு நாம் லயோலா கல்லூரியிடம் ஆவணங்களை கேட்டுள்ளோம். நமது ஆன்மீக பூமியை காக்க பெரும் படையென புறப்பட்டு வாருங்கள் என்பதே என் வேண்டுகோள்.

வெற்றி நிச்சயம். சகோதரரே. ஏன் எனில் இது தர்மத்தின் பாதை. உங்கள் பயணம் கடினமானதாக இருந்தாலும் உங்கள் இலக்கு மேன்மையை தர வல்லது! புனிதமானது. வெற்றி பெற சுதேசியின் அன்பு வாழ்த்துகள்.