Saturday, June 22, 2024
jiyar
history

மிரட்டப்படும் இந்துமதத் தலைவர்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு சம்மன்! என்ன நடக்கிறது தமிழகத்தில்?! எஸ்றா சற்குணத்தின் பெயரைக்கூட உச்சரிக்க முடியாத கோழைகள்!

 

தமிழக காவல்துறை சம்மன்!

வகுப்புவாத வெறுப்பைத் தூண்ட முயற்சித்ததாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஏஐடிஜே) நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மணிவாள மாமுனிகள் ஜீயர் மடத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிக்கு தமிழக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

 

இஸ்லாமிய அமைப்பு புகார்!

கடந்த ஜூலை 22ஆம் தேதி, காஞ்சிபுரம் ஆதிஅத்திவரதரின் விக்ரஹத்தை மீண்டும் கோயில் திருக்குளத்தில் மூழ்கடிக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கருத்து தெரிவித்திருந்தார். அதற்குக் காரணமாக அவர் தெரிவித்தது, நாட்டில் இப்போது இஸ்லாமியப் படையெடுப்பின் தாக்கம் இல்லையே! ஏன் அந்தக் காலம் போல் அத்திவரதரை மீண்டும் நீருக்குள் எழச் செய்ய வேண்டும்!? அவர் திருமேனியை கோயிலில் எங்காவது சந்நிதியில் எல்லா நாட்களும் பார்க்கும் வகையில் எழுந்தருளச் செய்யலாமே! – என்று கருத்து தெரிவித்திருந்தார்.

 

இஸ்லாமிய படையெடுப்பால்...

கடந்த காலத்தில் இஸ்லாமிய படையெடுப் பாளர்களிடம் இருந்து விக்ரகங்கள் மறைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது; அது திருக்குளத்தில் மூழ்கடிக்கப்பட்டு, பாதுகாப்பது அவசியமானது என்று அன்றைய அன்பர்கள் கருதினர்! ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவே, 48 நாட்களுக்குப் பிறகு தரிசனத்தின் முடிவில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் பெருமான் விக்ரகத்தை மீண்டும் மூழ்கடிக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை என்று தனது கருத்தை அவர் நியாயப்படுத்தினார்.

 
 

கோரிக்கை

jeeyar

கோயில் திருக்குளத்தில் விக்ரகத்தை திருப்பியும் மறைத்து வைக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தி, அனைத்து மடங்களின் தலைவர்களும் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியை சந்திக்க திட்டமிட்டதாகவும் ஜீயர் கூறியிருந்தார். தற்போது, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் ஒரு நிகழ்வை தமிழகம் கண்டது. காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஆதி அத்திவரதர் தரிசனம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு – வைணவர்களுக்கு மட்டுமல்ல, இந்து ஆன்மிக அன்பர்களுக்கு மிக மிக முக்கியமான நிகழ்வுதான்!

 
 
 

கோடி மக்கள் தரிசனம்

கடந்த 47 நாட்களில் 1 கோடிக்கும் அதிகமானோர் ஆதி அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர், வார நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக இரண்டு லட்சம், வார இறுதி நாட்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமாக என அத்திவரதரை தரிசித்தனர். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர், சில நேரங்களில், பக்தர்கள் தரிசனம் செய்ய 10 முதல் 12 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

god

அத்திவரதர்

ஆதிஅத்திவரதர் விக்ரகம், ஒன்பது அடி உயர மூர்த்தி அத்தி மரத்திலிருந்து உருவாக்கப் பெற்ற ஒன்று! இந்த மூர்த்தியே ஆலயத்தின் கருவறையில் 16 ஆம் நூற்றாண்டு வரை அமையப் பெற்று, வணங்கப் பட்டார். 16ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்தக் கோயிலின் விக்ரகத்தையும், செல்வங்களையும் காப்பாற்ற கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் ஆகியோர் ஆதி அத்திவரதர் மூர்த்தியை மறைக்க முடிவு செய்தனர்.

 

கோயில்களை சிதைத்த இஸ்லாமியர்

காரணம், உருவ வழிபாட்டை வெறுத்து, சிலை வணக்கத்தை காபிர்கள் என்று சொல்லி, எங்கெல்லாம் கோயில்கள் உள்ளனவோ அவற்றை அழித்து தரைமட்டம் ஆக்கியவர்கள் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் என்பது, இந்திய வரலாற்றில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது.

 

மறைத்து வைக்கப்பட்ட அத்திவரதர்

அப்படிப்பட்ட ஒரு மோசமான சூழலில், கோயிலில் இருந்தவர்கள் தங்கள் தெய்வ வழிபாட்டு விக்ரஹத்தை காப்பதற்காக ஆதி அத்திவரதரை கோயிலின் திருக்குளத்தில் மறைத்து வைத்தனர். பல ஆண்டுகளாக, கோயில் மூர்த்தியை திருக்குளத்தில் ரகசியமாக வைத்திருந்த இரண்டு முக்கிய ஆசார்யர்கள் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாமல் இறந்து போனதால், மூல மூர்த்தி இருக்கும் இடம் யாருக்கும் தெரியாமல் போனது.

 

வேறு ஒரு மூர்த்தி

இந்நிலையில், இஸ்லாமியப் படையெடுப்பின் தாக்கம் குறைந்த நேரத்தில், தேவராஜப் பெருமாளின் விக்ரகம் தேடியும் கிடைக்காமையால், காஞ்சிபுரத்துக்கு அருகே சீவரம் மலையில் இருந்து கல் எடுத்து, வேறு ஒரு மூர்த்தி அதே போல் வடிக்கப் பட்டுள்ளது.
இந்த மூர்த்தம், ஆதி அத்திவரதருக்கு பதிலாக நியமிக்கப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. 1709 ஆம் ஆண்டில், கோயில் திருக்குளம் ஏதோ காரணத்தால் வறண்டு, தண்ணீர் இன்மையால், வரதர் மூர்த்தி வெள்ளி கலசத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு மூர்த்தி 40 ஆண்டு களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே கொண்டு வரப்பட்டு 48 நாட்களுக்கு பொது தரிசனத்திற்காக வைக்கப்படுவார் என்று கோயில் அதிகாரிகள் அப்போது முடிவு செய்துள்ளனர்.
இதற்கான கோயில் ஆவணக் குறிப்புகள், கல்வெட்டு, செவிவழிச் செய்திகள் என பல உள்ளன. இதனைத்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தனது கருத்தில் குறிப்பிட்டார்.
எனவே, தற்போது இஸ்லாமியப் படையெடுப்பின் தாக்கம் இல்லை என்றும், எனவே இடையில் தோன்றிய வழக்கத்தை ஏன் நாம் அப்படியே பின்பற்ற வேண்டும் என்றும் ஒரு கருத்தில் அவர் கூறினார்.

மத நல்லிணக்க பாதிப்பு...

ஆனால், அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் (ஏ.ஐ.டி.ஜே) காஞ்சிபுரம் மாவட்ட பிரிவின் செயலாளர் சயீத் அலி தாக்கல் செய்த மனுவில், அவரது கருத்து சமூக நல்லிணக்கத்தை பாதிப்பதாக குறிப்பிட்டு, அவர் மீது புகார் கூறியுள்ளார்.

 

சுறுசுறுப்பு காவல் படை...

இந்தப் புகாரின் அடிப்படையில், ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. முதலமைச்சரின் சிறப்பு பிரிவில் இயங்கும் ஆன்லைன் போர்ட்டல் மூலம் அலி புகார் அளித்தார். அதற்கு மிகத் தீவிரமாக செயலாற்றி போலீஸார் ஒரு மதத்தின் தலைவரை காவல் நிலையத்துக்கு ஆஜராக அழைத்துள்ளனர்.

இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி

தமிழகத்தில் இந்துக்களின் மூஞ்சியில் குத்துவிடு, அவனை கிறிஸ்துவத்துக்கு மாற்று என்று வன்முறையைப் பேசி, மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் செயல்பட்ட கிறிஸ்துவ பிசப்பு எஸ்ரா சற்குணத்தை கேள்வி கேட்க முடியாத காவல்துறையும், தமிழக அரசும் ஜீயர் விவகாரத்தில் முந்திக் கொண்டு வந்திருப்பது, ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற பழமொழியை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது.

மறைத்து வைக்கப்பட்ட அத்திவரதர்

அப்படிப்பட்ட ஒரு மோசமான சூழலில், கோயிலில் இருந்தவர்கள் தங்கள் தெய்வ வழிபாட்டு விக்ரஹத்தை காப்பதற்காக ஆதி அத்திவரதரை கோயிலின் திருக்குளத்தில் மறைத்து வைத்தனர். பல ஆண்டுகளாக, கோயில் மூர்த்தியை திருக்குளத்தில் ரகசியமாக வைத்திருந்த இரண்டு முக்கிய ஆசார்யர்கள் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாமல் இறந்து போனதால், மூல மூர்த்தி இருக்கும் இடம் யாருக்கும் தெரியாமல் போனது.

 

நற்சான்றிதழ் தவறு தானா...

இஸ்லாமியப் படையெடுப்பின் கோரமான தாக்கம் இப்போது இல்லை என்று இன்றைய இஸ்லாமிய சமூகத்துக்கு நற்சான்றிதழ் கொடுத்த ஜீயரின் பேச்சு பொய்யாகியிருக்கிறது. இன்றும் இஸ்லாமிய சமூகத்தின் உருட்டலும் மிரட்டலும், ஹிந்து சமூகத்தினரை அச்சமூட்டும் வகையில் செயல்படும் பழைய காட்டுமிராண்டித் தனங்களும் தாங்கள் மாறாமல் கொண்டிருக்கிறோம் என்பதை சிலர் மெய்ப்பித்திருக்கிறார்கள்!

வரலாறு தெரிய கூடாதா?...

வரலாற்று நிகழ்வை வெளியில் சொல்லக் கூடாது என்று தடை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது!

சரித்திரம் சொல்வது என்ன?

இந்திய வரலாற்றின் பக்கங்களில் முஸ்லிம்களின் படையெடுப்பின் கொடூரங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மதமாற்றங்கள், திட்டமிட்ட பஞ்சங்கள் குறித்த தகவல்களை வரலாற்று ஆசிரியர்கள் பெருமளவு பதிவிடவில்லை. இஸ்லாமிய தாக்குதலில் பேசப்படும் பெரிய கோயில்கள் சுமார் 40,000 இடிக்கப்பட்டு சொத்துக்கள் களவாடப்பட்டுள்ளன! தேசிய உணர்வு உள்ள வரலாற்று ஆசிரியர்கள் தாங்கள் சேகரித்த செய்திகள் பல புத்தங்களில் பதிவு செய்தனர்.
இன்றைய தலைமுறையினருக்கு மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் படையெடுப்பில் நிகழ்த்தப்பட்ட ஆலய சூறையாடல்களுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் மிகச்சிறந்த சாட்சிகள்.

சாட்சி:1 ஸ்ரீரங்கம் நம்பெருமாள்...

temple

ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதனின் இன்னொருபெயர் நம்பெருமாள். இவர் முஸ்லிம் படையெடுப்புகள் நிகழ்ந்தபோது, 48 ஆண்டுகள் கோயிலில் இல்லை என்பதே உண்மை. வைணவர்களின் 108 திவ்யதேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். முஸ்லிம்கள் 13ம் நூற்றாண்டில், தமிழகம் மீது படையெடுத்தனர். இதில், மாலிக்காபூர் என்ற கொடுங்கோல் முஸ்லிம் தளபதியின் தலைமையில், தென்னகத்தில் நடந்த அட்டூழியங்கள் அதிகம்.
கி.பிந.1310 ஆம் ஆண்டில், மாலிக்காபூர் படை யெடுப்பின்போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். 

 

ஸ்ரீரங்கம் மக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சித்து, டில்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர் ஆனால், கி.பி. 1323 ஆம் ஆண்டில் முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பின்போது, மீண்டும் ரங்கநாதர் கோயிலுக்கு சிக்கல் ஏற்பட்டது. கோயில் சூறையாடப்பட்டு, பலர் கொல்லப்பட்டனர். அப்போது அங்கிருந்த, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவர், மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்துவிட்டு, உற்சவர் அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி தம்முடன் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நீண்டதொரு பயணம் புறப்பட்டார். 

oldtemple
lakhshimidevi

திருமாலிருஞ்சோலை, கோழிக்கோடு, முந்திரி மலை பள்ளத்தாக்கு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி, அழகியமணவாளம் கிராமம் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய பின்னர், கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்) திருவரங்கத்துக்கு 48 ஆண்டுகள் கழித்து, படையெடுப்பு பாதிப்புகள் குறைந்த பின்னர் மீண்டும் அழகிய மணவாளர் எழுந்தருளினார். கிபி 1323 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்ற அழகிய மணவாளன், 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்தபோது கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்தே விட்டனர் (அதாவது வரலாறு மறந்து விட்டது). ஏற்கனவே படையெடுப்பின் போது பலர் கொல்லப்பட்டதால், வந்தவர் திருவரங்கத்தில் இருந்த அசல் அழகிய மணவாளன் தான என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது. 

 

தங்கள் சந்தேகத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்று வழி தெரியாது தவித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அழகிய மணவாளனின் வஸ்திரங்களை துவைத்த ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் இதற்கு ஏதேனும் விடைக்கிடைக்கலாம் என்றும் தெரிந்தது. அவரை தேடிச் சென்றபோது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் அந்த சலவைத் தொழிலாளிக்கு வயது 90 என்பது மட்டுமல்ல அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை வேறு கிடையாது. பார்வை இல்லாத நிலையில் எப்படி இவர் தான் அசல் அரங்கன் என்று அடையாளம் கூற முடியும்?
இவர்கள் வந்த நோக்கத்தை தெரிந்த கொண்ட அந்த தொழிலாளி, “கவலைப்படாதீர்கள் எனக்கு புறக்கண்தான் இல்லையே தவிர அரங்கன் தந்த அகக்கண் இன்னமும் உள்ளது” என்று கூறியவர், “அரங்கனின் மேனியில் கஸ்தூரி அதிகளவு, பயன்படுத்தப்பட்டிருக்கும். அவரது ஆடையை நான் துவைப்பதற்கு முன், அந்த ஆடையை நனைத்து அதை பிழிந்து அந்த நீரை பருகிவிட்டே தான் ஒவ்வொரு முறையும் சலவை செய்வது வழக்கம், எனவே அரங்கனுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்துவிட்டு அந்த ஈர ஆடையை என்னிடம் கொடுங்கள் போதும்!” என்றும் கூறினார்.
அவர்களும் அதே போன்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்து ஈர ஆடையை தர, அதை கண்களில் ஒற்றிக்கொண்டு பிழிந்து பருகிய அந்த
வரலாற்று நிகழ்வை வெளியில் சொல்லக் கூடாது என்று தடை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது!
சலவைத் தொழிலாளி, “இவரே நம் பெருமாள்!” என்று உற்சாகத்துடன் கூக்குரலிட்டார். அன்று முதல் தான் திருவரங்கத்தில் உற்சவருக்கு ‘நம்பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது.

“வரலாற்று நிகழ்வை வெளியில் சொல்லக் கூடாது என்று தடை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது!”

சாட்சி:2 மதுரை ஸ்தானிகர் வரலாறு ஆதாரம்!

ஸ்ரீரங்கத்தை சிதைத்த மாலிக்காபூரின் படைகள், மதுரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. பாண்டிய மன்னர்களுக்கு இடையே குழப்பம் காரணமாக, சகோதர மோதல்கள் நிகழ்ந்தன. இதில், சுல்தான்களின் படையெடுப்பு ஸ்ரீரங்கம் வரை வந்தது தெரியவந்தது. இந்நேரத்தில், கிபி 1311ம் ஆண்டில் மதுரையில் பாண்டிய வம்சத்தில் வந்த குலசேகர பாண்டியனின் வாரிசுகளான சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரிடையே அரியணைப் போட்டி ஏற்பட்டது. இதில், அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக்காபூரிடம் உதவி கேட்டான் சுந்தரபாண்டியன். இவர்களது முட்டாள் தனத்தைப் பயன்படுத்தி, மாலிக்காபூர் மதுரையை சூறையாடினான். மதுரை மீனாட்சியம்மன் கோயிலை கொள்ளையிட்டான். 612 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், 96 ஆயிரம் மணக்கு தங்கம், ஆயிரக் கணக்கான பெட்டிகளில் முத்துக் குவியல், ரத்தினங்களுடன் 1311-ஆம் ஆண்டு மாலிக்காபூர் டில்லி புறப்பட்டான் என்பது வரலாறு.
மாலிக்காபூர் படையெடுப்பு காலத்தில் மதுரையில் இந்துக்கள் கொல்லப்பட்டனர். இங்கே அவனது பிரதிநிதியாக இருந்தவர்கள், இந்துமத வழிபாட்டுக்குத் தடைவிதித்தனர். சிலை வழிபாடு கூடாது என்றனர். அன்னை மீனாட்சியின் சிலையையும், சுந்தரேஸ்வரரின் லிங்கத்தையும் உடைக்க முடிவு செய்தனர். இதையறிந்த கோயில் ஸ்தானீகர்கள் கிபி 1323ம் ஆண்டில், மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் கருவரையின் வாசல்களை மூடினர். அதற்கு முன்னர் சுவர் எழுப்பினர். முன்னதாக, அதன் அன்றாட பூஜைகளும் முடிக்கப்பட்டு, அன்னைக்கும், சுந்தரேஸ்வரருக்கும் சூட்டப்பட்ட மாலை, ஏற்றப்பட்ட தீபத்துடன் சுவர் எழுப்பப்பட்டது.
விஜயநகர பேரரசு உதயமான பின்னர், 2-ஆம் கம்பண உடையார் கிபி 1371ம் ஆண்டில், தன் மனைவி கங்காதேவியுடன் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். கோயில் கருவறை இளவரசர் கம்பண உடையார் முன் உடைக்கப்பட்டது. உடைக்கப்பட்ட சுவருக்குப் பின்னால், கருவறையைத் திறந்து பார்த்தவர்கள் அப்படியே ஸ்தம்பித்தனர். ஆமாம், கருவறையில் கடைசியாக பூஜை முடிந்து மூடப்பட்ட போது ஏற்றப்பட்ட தீபமும், அன்னைக்கும், சுந்தரேஸ்வரருக்கு சூட்டப்பட்ட மாலைகளும் அப்படியே வாடாமல் இருந்தன. இதனால், மனமுருகிப்போன கம்பண உடையார், கோயிலை மீண்டும் புதுப்பொலிவுடன் கொண்டு வந்தார். இந்த வரலாறும் இன்றைய மக்களுக்குத் தெரியாது.

இப்படிப்பட்ட சூழல்களில், மதத்தலைவர்கள் வரலாற்று பதிவுகளை கூறினால், அது மததுவேசத்தை தூண்டுவதாக கூறுவதும், குற்றம் சாட்டுவதும் சரியாகுமா? இது அரசு யோசிக்க வேண்டிய விஷயம். இப்படி உண்மையைப் பேசுவதற்கு விதிக்கப்படும் தடையானது, அரசியல் சாசனம் கொடுத்துள்ள பேச்சு சுதந்திரத்தை பறிப்பதற்கு சமம். வரலாற்று உண்மைகளை ஆதாரத்துடன் பேசும்போது, அதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், இப்படி மதத் தலைவர்களை மிரட்டத் தொடங்கியுள்ளனர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் சிதைக்கப்பட்ட சொக்கநாதர் லிங்கத் திருமேனியை பிராகாரத்தில் வரலாற்றுக் குறிப்புகளுடன் வைத்திருக்கிறார்கள். அது வருங்காலத்தில் தமிழக அரசின் அறநிலையத் துறையால் அப்புறப் படுத்தப் படக் கூடும்! இனி பக்தர்கள் தான் 24 மணி நேரமும் காவல் காத்து அந்த வரலாற்று நிகழ்வின் சுவடுகள் மறையாமல் இருக்க வழி செய்ய வேண்டும்! வரலாற்றுக் கல்வெட்டுகளையும் கோயில்களின் சரித்திரங்களையும் பாதுகாக்க பக்தர்கள்தான் தீவிரமாக இருந்தாகவேண்டும்! தமிழக அரசும் அறநிலையத்துறையும் நம்புவதற்கு இல்லை!
அதைத்தான் இந்த நிகழ்வு நமக்குக் காட்டியிருக்கிறது!