Thursday, April 25, 2024

தேசத்தை பாதுகாக்கவே குடிமக்கள் பதிவேடு!

மோடியின் அடுத்த அதிரடி!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்… செப்டம்பர் மாதத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகளில் ஒன்று. இதே மாயாவதி லோக்சபா தேர்தல் நடந்த காலகட்டத்தில், ‘மோடி இந்தியாவின் காலாவதி பிரதமர். அவரிடம் எல்லாம் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை’ என்று காட்டமாக விமர்சித்தார் அப்படிப்பட்ட மாயாவதி, 2 வாரங்களுக்கு முன்னர் டில்லிக்கு வந்தார். முதலில் பிரதமர் மோடியையும், பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். என்ன மேடம்? இவ்வளவு துாரம் வந்துருக்கீங்க? என்று மீடியாக்கள் கேட்டபோது, ‘‘தேசிய குடிமக்கள் பதிவேடு ஆவணத்தை மேற்கு வங்க மாநிலம் தயாரிப்பதில் இருந்து விலக்கு வழங்கிட வேண்டும்’’ இதை்தான் கேட்க வந்தேன் என்று நெளிந்து கொண்டே கூறினார்.

mamata.modi

இதுதான் மம்தாவின் நோக்கமா?

தேசிய குடிமக்கள் பதிவேடு என்று மம்தாவின் பதிலில் உள்ளது ஒரு கேடயமே. ஆனால், மம்தா டில்லி வந்ததின் உண்மையான நோக்கம் வேறு. அதாவது, சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில், மம்தாவின் ஏஜன்டாக செயல்பட்ட, கொல்கத்தா போலீசின் முன்னாள் கமிஷனர் ராஜீவ் ரஞ்சன் மீதான கைதுக்கு விதிக்கப்பட்டத் தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. அவரை அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டுபோய், உரிய முறையில் விசாரித்தால், மம்தாவின் கேபினட்டில் இப்போதுள்ள 60 சதவீதம் பேர் அவுட் ஆகிவிடுவார்கள். அத்துடன், கட்சியே கலகலத்துவிடும். அதனால், முடிந்தவரை தனக்கு விசுவாசமான அந்த அதிகாரியை காப்பாற்றுதற்காகவே மம்தா கொல்கத்தாவில் இருந்து விமானம் பிடித்து டில்லிக் வந்தார்.

வந்த இடத்தில் மீடியாக்களிடம், ‘ராஜீவ் ரஞ்சனைக் காப்பாற்றத்தான் வந்தேன்’ என்றா சொல்ல முடியும். அதற்காக, தேசிய குடிமக்கள் பதவேடு கோரிக்கையை கையோடு கொண்டு வந்தார். அசாமில் இப்போது அரசு மேற் கொண்டுள்ள இந்தத் திட்டத்தை, மேற்கு வங்கத்தில் ஒத்தி வைக்கக்கேட்டு, மத்திய அரசிடம் மன்றாட வந்ததாக கூறினார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு ஏன்?

Acharya
nrc

இந்தியாவில், இந்தியக் குடியுரிமை இல்லாமல், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரால் தேசத்தின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு பிரச்னைகள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன், அரசியல் களத்தில் இந்தியர்கள் என்ற அடையாளத்துடன் புகுந்துவிடும், இந்த வெளிநாட்டினர், தங்களுக்கு சாதகமான அரசியல் இயக்கத்தினருடன் சேர்ந்து கொண்டு, பொது அமைதிக்கும், தேசத்தின் வளர்ச்சிக்கும் ஆபத்து ஏற்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் அடிப்படையில் 2013ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த, உறுதியான உத்தரவின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது

 

பிரச்னையின் தொடக்கமும், சிக்கலும்...

Rajeev

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் தொடக்கம் இந்தியா, பாகிஸ்தான் இடையே 1948 மற்றும் 1971ம் ஆண்டு மூண்ட போர்கள் எனலாம். இந்த 2 போர்களின் போது, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து கோடிக் கணக்கான மக்கள் வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தனர். குறிப்பாக, 1971ம் ஆண்டில் வங்கதேசப் போரில் இது இன்னமும் அதிகரித்தது. இதற்கிடையே, பாகிஸ்தானின் ஆதிக்கத்தில் இருந்த, கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டகாசம் அதிகரித்தது. கிழக்கு பாகிஸ்தானின், பூர்வ குடிகளான வங்கதேசத்தினரை, பாகிஸ்தானியர்கள் கொடுமைப்படுத்தினர். 1968 முதல் முறையான ஆவணங்கள் இன்றி லட்சக் கணக்கான மக்கள் மேற்கு வங்கம் 

வழியாக, வடகிழக்கு மாநிலங்களில் குடியேறினர். தொடக்கத்தில் மெல்ல மெல்ல நடந்த குடியேற்றம், 1970களில் அணை கடந்த வௌ்ளம்போல் மாறியது. 1971ம் ஆண்டு போருக்குப் பின்னர் வங்கதேசம் சுதந்திர நாடாக மாறினாலும், அடிப்படை இஸ்லாமியவாத நாடாக இருந்தது. அத்துடன், வங்கத்தில் இருந்து குடியேறிய மக்களுக்கு, அசாம், மேற்கு வங்கம் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் சொர்க்கமாக இருந்ததால், அவர்கள் நிரந்தர குடியேறிகளாகினர். இது உள்ளூர் மக்களை எரிச்சலில் ஆழ்த்தியது.

அசாமில் தோன்றிய புரட்சி

இந்தியா -& பாகிஸ்தான் போரின்போது, வடகிழக்கு மாநிலங்களில் குடியேறிய மக்களின் எண்ணிக்கை ஒரு கோடி என்கிறது அப்போதைய மத்திய அரசின் ஆவணம். ஆனால், உண்மையில் இதற்கு அதிகமான வங்கதேசத்தினர் வடகிழக்குகளில் குடியேறினர் என்பதே உண்மை. அசாம், மேற்கு வங்காளம், திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்களில் குடியேறிய வங்கதேசத்தினர், தொடக்கத்தில் அமைதியாக இருந்தாலும், பின்னர் வழக்கப்படி இஸ்லாமிய அடிப்படை வாதம் பேசத் தொடங்கினர்.

குறிப்பாக, அசாமில் இதன் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. 1980களில் அசாம் மக்களின் வேலை வாய்ப்பின் 60 சதவீதத்தை வங்கதேச குடியேறிகள் தட்டிப் பறித்ததாக கூறி, உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர். இதனால், படித்த, படிக்காத அசாமியர்களுக்கு வேலை வாய்ப்பை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அரசியல், கல்வி, சமூகப் பொருளாதரத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்த அசாமியர்கள், வங்கதேசத்தவர்களை அசாம் மாநிலத்திலிருந்து வெளியேற்றக் கோரி, அனைத்து அசாமிய மாணவர் அமைப்புகள் பெரும்போராட்டங்களும், வன்முறைகளும் மேற்கொண்டனர்.

உருவானது அசாம் கணபரிஷத் கட்சி

வங்கதேச குடியேறிகளிடம் இருந்து தங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்காக அசாம் கணபரிஷத் கட்சி தொடங்கப்பட்டது. 1980களில் தொடங்கப்பட்ட கட்சி, வெகு வேகமாக வளர்ந்து 1985&89 மற்றும் 1996&2001 என்று 2 முறை ஆட்சியில் இருந்தது. எதிர் கட்சியாகவம் செயல்பட்டது. அசாம் கணபரிஷத் ஏற்படுத்திய அதிர்வு சுப்ரீம் கோர்ட்டின் கதவைத் தட்டியது. எனவே, இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும், வெளிநாட்டினரை இனம்கண்டு வெளியேற்றும் வகையில், அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க வேண்டம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 2010ம் ஆண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது. எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இதன் பின்னர், சுப்ரீம்கோர்ட் கண்டிப்பால் 2013ம் ஆண்டில் இந்தப் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது.
1951ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ளவர்கள், அல்லது 1971ம் ஆண்டு மார்ச் 24ம் தேதிக்கு முன் (போர் தொடங்கும் நேரத்துக்கு முன்) இந்தியாவில் தங்கியிருந்தவர்கள் மட்டுமே இந்தப் பட்டிடயலில் இடம் பிடிப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

mamata

பிரச்னை... பிரச்னைக்கு மேல் பிரச்னை...

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்தாலும், குடிமக்களை அடையாளம் கண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 1971ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்தவர்களின் வாரிசுகள், இவர்களின் வழிவந்தர்கள், ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி, இந்தப் பட்டியலில் சேர்க்கலாம் என்று கூறப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு அசாமில் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் பெயர் விடுபட்டது. இதன் பின்னர், புதி்ய அரசு அமைந்த நிலையில், மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், 21 லட்சம் பேர் திருத்தம் முறையில் தேசிய வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தனர். 19 லட்சத்துக்கும் அதிகமானோர் இப்போது பட்டியலில் சேர்க்க முடியாமல், அகதிகள் அந்தஸ்தில் உள்ளனர். இவர்கள், வெளிநாட்டு அகதிகள் அந்தஸ்தில் பராமரிக்கப்படுவார்கள். அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

குறிப்பாக, அசாமில் இதன் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. 1980களில் அசாம் மக்களின் வேலை வாய்ப்பின் 60 சதவீதத்தை வங்கதேச குடியேறிகள் தட்டிப் பறித்ததாக கூறி, உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர். இதனால், படித்த, படிக்காத அசாமியர்களுக்கு வேலை வாய்ப்பை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அரசியல், கல்வி, சமூகப் பொருளாதரத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்த அசாமியர்கள், வங்கதேசத்தவர்களை அசாம் மாநிலத்திலிருந்து வெளியேற்றக் கோரி, அனைத்து அசாமிய மாணவர் அமைப்புகள் பெரும்போராட்டங்களும், வன்முறைகளும் மேற்கொண்டனர்.

தொடக்கம் அசாமில்... முடிவு?

தேசிய குடிமக்கள் பதிவேடு அசாமில் தயாரிக்கப்பட்டாலும், இது இந்தியா முழுவதற்கும் விரிவு படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது நாடு முழுவதும் மறைந்து வாழும் சட்டவிரோத குடியேறிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில். அசாம் மாநிலத்தில், 19 லட்சம் பேர் என்றால், மேற்கு வங்கத்தில் எத்தனை லட்சம் பேர்? ஒரு சிறிய கணக்கீட்டின்படி 80 லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை இருக்கலாம் என்கிறது தோராய மதிப்பீடுகள்.
இந்த சட்டவிரோத குடியேறிகள்தான், வங்கதேசத்தின் பல பகுதிகளில் சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகின்றனர். இவர்களுக்கு, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் முழு ஆதரவு கொடுக்கிறது. இதனால், தேர்தல் வெற்றிக்கும் இவர்கள் மிகப் பெரிய பங்களிப்பு செய்கின்றனர். இவர்களது, அட்டகாசம் பொறுக்க முடியாத, மேற்கு வங்க இந்துக்கள், கடந்த லோக்சபா தேர்தலில் அணிதிரண்டு, பாஜவுக்கு தங்கள் பிரமாண்ட ஆதரவை அள்ளிக் கொடுத்தனர். அதனால்தான், 18 தொகுதிகளில் பாஜவும் வெற்றிபெற முடிந்தது என்பதே உண்மை. இதைப் புரிந்து கொண்ட பாஜ, மேற்கு வங்க மாநிலத்தை, வங்காள குடியேறிகளிடம் இருந்து மீட்க கங்கணம் கட்டியுள்ளது.

குறிப்பாக, அசாமில் இதன் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. 1980களில் அசாம் மக்களின் வேலை வாய்ப்பின் 60 சதவீதத்தை வங்கதேச குடியேறிகள் தட்டிப் பறித்ததாக கூறி, உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர். இதனால், படித்த, படிக்காத அசாமியர்களுக்கு வேலை வாய்ப்பை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அரசியல், கல்வி, சமூகப் பொருளாதரத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்த அசாமியர்கள், வங்கதேசத்தவர்களை அசாம் மாநிலத்திலிருந்து வெளியேற்றக் கோரி, அனைத்து அசாமிய மாணவர் அமைப்புகள் பெரும்போராட்டங்களும், வன்முறைகளும் மேற்கொண்டனர்.

அடுத்தது தமிழகம், கேரளாவில்...

தமிழகத்தில் வங்கதேச குடியேறிகளின் ஆதிக்கம் சென்னை, கோவையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கோவையின் நகைப்பட்டறை உட்பட பல்வேறு தொழில்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வங்கதேசத்தினர் உள்ளனர். சென்னை, திருப்பூர் உட்பட பிற பகுதிகளில் வசிக்கும் வங்கதேசத்தினரின் எண்ணிக்கை இதில் இடம் பெறாது. இதிலும், ஒரு பியூட்டி என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் அடைக்கலமாகி, பின்னர் உள்ளூர் மக்களின் உதவியுடன், திமுக போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் சில இடங்களில் வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகள் பெற்றுள்ளனர்.
கேரளாவில் வங்கசேதத்தினருடன், பாகிஸ்தானியர் ஆதிக்கம் மெல்ல வளர்ந்துவருகிறது. குறிப்பாக மலப்புரம் உட்பட மாவட்டங்களில் உள்ளூர் முஸ்லிம்களுடன் இரண்டரக் கலந்து, வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட முஸ்லிம் இயக்கத்தின் தீவிரவாதி ஒருவன், கடந்த மாதம் கர்நாடகா மாநிலம் ராம்நகரில் கைது செய்யப்பட்டு, அவனை கிருஷ்ணகிரி மலையில் வைத்து என்ஐஏ போலீசார் விசாரித்தது தனிக்கதை.

உங்கள் கண்களுக்கு புலப்படாமல், பல லட்சக் கணக்கான வங்கதேசத்தினர் குறிப்பாக அடிப்படை வாத முஸ்லிம்கள், தீவிரவாத சித்தாந்தம் கொண்டவர்கள் தமிழகம், கர்நாடகா, கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரந்து விரிந்து வாழ்கின்றனர்.

 

அடுத்தது தமிழகம், கேரளாவில்...

ராம்நகரில் கைது செய்யப்பட்டத் தீவிரவாதி ஒரு சின்ன சாம்பிள். இப்போது உங்கள் கண் முன் வந்துள்ளது. ஆனால், உங்கள் கண்களுக்கு புலப்படாமல், பல லட்சக் கணக்கான வங்கதேசத்தினர் குறிப்பாக அடிப்படை வாத முஸ்லிம்கள், தீவிரவாத சித்தாந்தம் கொண்டவர்கள் தமிழகம், கர்நாடகா, கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரந்துவிரிந்து வாழ்கின்றனர். அதேபோல், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும், காஷ்மீர், அரியானாவிலும் சட்டவிரோத பாகிஸ்தான் குடியேறிகள் எண்ணிக்கை அதிகம். இவர்கள் உள்ளூரில் பம்மிக் கொண்டிருந்தாலும், நேரம் அமைந்தால், நவீன ஜிகாதிகளாக மாறி, மாபெரும் அழிவை ஏற்படுத்துவார்கள் என்று எச்சரித்துள்ளது உளவுத்துறையும், ராணுவமும்.

 

நாட்டின் பாதுகாப்புக்கும், ஒற்றுமைக்கும், அமைதியான வாழ்க்கைக்கும், இந்தியர்களை இனம்கண்டு பிரிப்பது அவசியம் என்பதால், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அரசு விரைந்து நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.