Saturday, November 28, 2020

மோடியை விமர்சித்தால் நோபல் பரிசு நிச்சயம்! நிரூபிக்கும் போர்டு பவுண்டேஷன்

சந்தனம் எந்தன் நாட்டின் புழுதி என்ற தேச பக்தர் தன் ரத்தத்தை அந்த சந்தனத்தில் கலந்தவர்…

இந்து மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களை கண்டு நெஞ்சு பதைத்த, இராமகோபாலன் அவர்கள் அன்றே முடிவெடுத்தார்.

இந்து தர்மத்திற்காகவே வாழ்வது! இந்துக்களை பாதுகாக்கவே உயிர் துறக்கவும் தயாராவது என்று…

இந்து தர்மத்திற்காகவே வாழ்வது! இந்துக்களை பாதுகாக்கவே உயிர் துறக்கவும் தயாராவது என்று…

பாரத மண்னின் மைந்தர் இளைஞன் இராம கோபாலின் வீரம் கண்டு பயந்த இஸ்லாமியர், அவரை கொல்ல சரி செய்தார்.

பாரத தாயின் மடியில் ரத்தத் வெள்ளத்தில் சரிந்த, வீர துறவியாக உயிர்தெழ வைத்தாள் அந்த தவபுதல்வனை பாரத தாய் அன்று!!

Articles_2_1

இன்று 94வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள அந்த வீரத்துறவியினை வாழ்த்தி வணங்க பல ஆயிரம் தொண்டர்கள் குவிந்துள்ளது கண்கொள்ளாக் காட்சி மட்டும் அல்ல… நெஞ்சை நெகிழ வைப்பதும் ஆகும்.

 

பலவிதம்

சிறுவர்கள், சிறுமிகள், இளைய தலைமுறையினர், பல்வேறு துறைகளின் பிரபலங்கள் என சபை நிறைந்து சாஸ்தா ஹாசனின் தேசபக்தி பாடல்களும், நாட்டியமும் மக்களை உற்சாக படுத்தின.

இந்து முன்னணி தலைவர்கள் திரு.காடேஷ்வரன், திரு. பரமேஷ்வரன் என பல இந்து தலைவர்கள் சூழ்ந்திருக்க, சென்னை மாநில தலைவர் திரு. இளங்கோ அவர்கள் முன்மொழிய வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் உள்ளே வர அரங்கமே கை தட்டி வாழ்த்தி வரவேற்றது கண் கொள்ளா காட்சி.

 

இந்து முன்னணி

1947ம் ஆண்டில் பாரத நாடு பிரிந்து. அப்போது இஸ்லாமியரின் கொடூர தாக்குதலால் பல லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டு, குழந்தைகள் அடிமைகளாக்கப்பட்டு கடுந்துயரத்திற்கு ஆளானார்கள்.

அதிலிருந்து தப்பி வந்த சில ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சொந்த ஊரில் அகதிகளாக, அவர்கள் ரத்த களரியாக திக்கற்று நின்ற நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் அவர்களுக்கு சேவை செய்து வந்தது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்திருந்த இளைஞன் இராம கோபாலன் இந்த கொடுமைகளை கண்டு அதிர்ந்து, வீர சபதம் செய்தார். என் வாழ்வின் நோக்கம் இனி ஒன்று தான் இந்து தர்மத்திற்காகவும், இந்து சமுதாயத்திற்காகவும் மட்டுமே இனி என் வாழ்கை அர்ப்பணம் என்றார்.

 

இந்து முன்னணி

தொடர்ந்து இந்து மக்களின் குரலுக்கு ஒடி வரும் தாயாகவே இராம கோபாலன் சேவை செய்து வந்தார். 1980ம் ஆண்டு, தமிழ்நாடு இருந்த நிலையில், திராவிட ஆட்சியின் உச்சத்தில் தான் ‘இந்து முன்னணி’ எனும் அமைப்பை துவக்கி அதற்கு பொறுப்பாக ராம கோபாலன் அமர்த்தப்பட்டார்.

 

ஜெய் காளி

ஒம் காளி! ஜெய் காளி! என்ற உணர்ச்சி ததும்பும் வரிகளோடு இன்றளவு இந்து முன்னணி தொண்டர் கள் களத்தில் போராடுவதை நாம் பார்க்கலாம்.

சுமார் 40,000 வழக்குகளை சுமந்து கொண்டு சமுகத்திலிருந்து எந்த பிரதிபலனையும் பாராது, சனாதன தர்மத்தை காக்கவே புறப்பட்ட இந்த சிங்கங்களை தயார் செய்த வீரத்துறவி இராம கோபாலன் அவர்களுக்கு தமிழக இந்துக்கள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளனர் என்பது நிச்சயம்.

 

வெற்றிகள்

மீனாட்சிபுர மதமாற்றமே இந்த அமைப்பு உருவாக முக்கிய காரணியாக இருந்தது என்றால் மிகையில்லை. ராமநாதபுர இந்துக் களை ஒருங்கிணைத்து பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் தலைவர் இராம கோபாலன் ஜி அவர்கள்.

விடுதலை போராட்டத்தில் இந்துக் களை ஒன்றிணைத்த விநாயகர் ஊர்வலத்தை கையில் எடுத்த இந்து முன்னணி அமைப்பு இன்றுவரை லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர், மூர்த்திகளை குடியிருப்பில் வைத்து சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

வேலூரில் 400 ஆண்டுகள் சாமி இல்லாமல் இருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், சாமி விக்ரஹம் பிரதிஷ்டை செய்ததும் இவர்தான்.

 

சிதம்பர ரகசியம்

இன்றுவரை தமிழகத்தில் சிதம்பர ரகசியமாக இந்துக்கள் பலருக்கு ஒன்று தெரியும். தங்களுக்கு வேற்று மதத்தவரால் மிரட்டல் என்றாலோ, தங்களது கலாச்சாரத்தை இழிவு செய்தாலோ உதவிக்கு அழைக்க ஒருவர் மட்டுமே உள்ளனர். அது வீரத்துறவி ராம கோபாலன் ஜி இன் சிங்க படையான இந்து முன்னணி மட்டும் தான்.

 

இந்து முன்னணியின் குறிக்கோள்கள்

 • நாத்திகம் என்ற பெயரில் இந்து சமயத்தை கேவலப்படுத்தியபோதும், மதமாற்றத்தால் இந்துக்களை வேட்டையாடியபோதும், மதத்தின் பெயரால் பயங்கரவாதம் நடைபெற்றபோதும் யாரும் இந்துக்களை பாதுகாக்க முன்வராத நிலையில், இந்துக்களுக்காக ஒரு இயக்கம் வேண்டும் என்ற நிலையில் இறைவனின் அருளால் தோன்றியதே இந்து முன்னணி.
 • கடந்த 40 ஆண்டுகளில் இந்து முன்னணி பல்லாயிரம் சாதனைகளை, வெற்றிகளை படைத்திருக்கிறது, படைத்து வருகிறது… அதில் சில..
 • இந்து என்று சொல்லவே தயங்கி, மயங்கி, கலங்கி நின்ற சமுதாயத்தை தலைநிமிர்ந்து பெருமிதமாக இந்து என்று சொல்ல வைத்தது இந்து முன்னணி.
 • தமிழின் பெயரால் நாத்திகத்தை அரங்கேற்றியதை முறியடித்து, இது ஆன்மீக பூமி என்பதை நிலை நிறுத்தியது.
 • 400 ஆண்டுகளாக சாமி இல்லாத கோயிலாக இருந்த வேலூர் ஜலகண்டேஸ்வரரை மக்கள் ஆதரவோடு பிரதிஷ்டை செய்தது.
 • பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த ஆசியாவிலேயே பெரியதும், புகழ்பெற்றதுமான திருவாரூர் தேர் உற்சவத்தை நடத்தி காட்டியது.
 • வரலாறு, புராண, ஆன்மீக நம்பிக்கையோடு தொடர்புடைய ஸ்ரீராமர் பாலத்தை உடைத்தெரிய நடந்த சதியை முன்னின்று தடுத்து நிறுத்தியது.
 • பொள்ளாச்சியில் கொரியன் கம்பெனியோடு இணைந்து தமிழக அரசு துவக்க இருந்த பசுக்கொலைக் கூடத்தை பெரும்போராட்டத்தால் தடுத்து நிறுத்தியது.
 • கடவுளை காட்சிப் பொருளாக்கும் தரிசன கட்டண முறையை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது.
 • மதமாற்ற பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி, இந்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
 • இந்து முன்னணியின் தன்னலமற்ற இந்து தர்மத்தை காக்க புறப்பட்டுள்ள வீர தொண்டர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.
 • வீரத்துறவி ராமகோபாலன் அவர்களின் தொண்டினை பராட்டி அவரை வணங்கி அவர் நலத்தோடு பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறோம்.