Friday, January 15, 2021

நாரதராகும் ஸ்டாலின்...

அடுக்கடுக்காக தீர்வுக்கு காத்திருக்கும் பிரச்சினைகள்...

artyt

நமது கடவுளர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புண்டு. இதில், திரிலோக சஞ்சாரி எனப்படும் பிரம்மச்சாரி நாரதருக்கு மட்டும் எப்போதும் ஒரே வேலைதான். அதாவது, ஏதாவது ஒரு பிரச்னையை முன் வைத்து, கடவுளர்களுக்கும், அரக்கர் களுக்கும் கலகத்தை உண்டு பண்ணி, அதை மனித குலத்துக்கு சாதகமாக முடித்து வைப்பது.

முருகனின் அவதாரம், துர்கையின் அவதாரம், நரசிம்மரின் அவதாரம் என்று பல அவதாரங்களுக்கு அடித்தளம் போட்டவர் நாரதர் என்பது புராணங்கள் கூறும் உண்மை. இந்தக் கலியுகத்தில், இப்போதைய சூழலில் நமது மாநிலத்தில் எத்தனையோ பிரச்னைகள் தலையெடுத்துள்ளன. பிரச்னையின் ஆரம்பம் எது, தீர்வு எது என்று யாரும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, தனது நாரத அவதாரத்தை வெளிப்படுத்தி, தமிழகத்தில் தீர்வு காண முடியாத பல பிரச்னைகளுக்கு தீர்வுக்கான வழியை உருவாக்கியுள்ளார்.

 

யார் அந்த மகான்?

யார் அந்த மகான் என்று நீங்கள் கேட்கலாம். அவர் வேறு யாருமல்ல, சாட்சாத் திமுக தலைவர் ஸ்டாலின்தான். தமிழகத்தில் இப்போது, மிகவும் அதிகமாக பேசப்படும் விஷயங்கள் 2 மட்டுமே. ஒன்று பஞ்சமி நிலம், மற்றொன்று பொய்யாமொழி புலவர் திருவள்ளுவர்.

 

பஞ்சமி நிலம்

Article_1_2

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு, ஆங்கிலேய ஆட்சியாளர்களால் 12 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலம் தானமாக வழங்கப்பட்டது.

இதை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அல்லாதவர் வாங்கவோ, விற்கவோ முடியாது. முதல் 10 ஆண்டுகளுக்கு நிலத்தின் உரிமையில் மாற்றம் இருக்காது. இதன் பின்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மட்டுமே வாங்க வேண்டும் என்று எத்தனையோ விதிகள் இருந்தாலும் கூட, இன்று சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் விரல்விட்டுத் தேடினாலும் பஞ்சமி நிலம் உள்ள தாழ்த்தப்பட்ட சமூக மக்களை கண்டுபிடிக்க முடியாது. காரணம், அத்தனையிலும் ஆக்கிரமிப்பு.

இது பஞ்சமி நில நாரத கலகம்

அரசியல், அடாவடி, கட்டப் பஞ்சாயத்துடன் போலீஸ் செல்வாக்கும் இருந்தால் போதும். எதையும் கைப்பற்றலாம் என்ற நிலையில், பஞ்சமி நிலம் மட்டும் விதிவிலக்காக இருந்துவிட முடியாது. ஆனால், இந்த பஞ்சமி நில மீட்பை எங்கிருந்து, யார் தொடங்குவது என்ற பிரச்னைக்கு விடை தெரியாத நிலையில், அதை தானே முன்னின்று தொடங்கி வைத்த பெருமை ஸ்டாலினையே சேரும்.

 

படம் அல்ல பாடம்!

நாங்குனேரி இடைத்தேர்தலுக்காக 2ம் கட்ட பிரச்சாரம் மேற் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில், அக்டோபர் 16ம் தேதி இரவு காட்சியாக தனுஷ் நடித்த அசுரன் படத்தைப் பார்த்து ரசித்தார். பார்த்ததும், சும்மா இருந்திருக்காலமே. ‘‘அசுரன் படத்தில் தனுஷ் வாழ்ந்திருக்கிறார். அசுரன் படம் மட்டுமல்ல, பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்’’ என தன் அட்மின் மூலம் பாராட்டு பத்திரத்தை வாசித்தார்.

 
Article_1_4

பட்டாசு ராமதாஸ்

அவ்வளவுதான், பற்றிக் கொண்டது கலகம். ‘‘பஞ்சமி நில மீட்பு பற்றி பேசுகிறீர்கள். உங்கள் முரசொலி பத்திரிகை அலுவலகமே பஞ்சமி நிலத்தின் மீதுதான் கட்டப்பட்டுள்ளது’’ என்று பாமக தலைவர் ராமதாஸ் பட்டாசு கொளுத்திப்போட, ஸ்டாலின் சட்டென 1985ம் ஆண்டில் முரசொலி கிரையப் பத்திரத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். கிரையப்பத்திரம் இருக்கட்டும், அந்த நிலத்தின் (தாய்) மூல பத்திரம் எங்கே? என்று இன்று சமூக வலைத்தளங்கில் திமுகவை திணறத் திணற அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

மூல பத்திரம் எங்கே? டாக்டர் ராமதாஸ்

முரசொலி நிலம் குறித்த அறிக்கை உண்மை. ஸ்டாலின் காட்டும் பட்டா 1985ம் ஆண்டுக்கானது. ஆனால், 1923ம் ஆண்டின் நிரந்த கணக்குப் பதிவேடு, அதாவது நிரந்தர பதிவேடு, ஆர்எஸ்ஆர் எனப்படும் ரீ செட்டில்மென்ட் பதிவேடு, எஸ்எல்ஆர் எனப்படும் நில செட்டில்மென்ட் பதிவேடு 1935ன் அரசு கெஜட் காப்பி ஆகியவற்றில், மேற்படி முரசொலியின் சர்வே எண் குறித்து தெரிந்து கொண்டு ஸ்டாலின் பேச வேண்டும். முதலில் ஒரு தாழ்த்தப்பட்டவருக்கும், பின்னர் தலித் அல்லாத 2 பேருக்கும், கை மாற்றப்பட்டு, 4வதாக அஞ்சுகம் பதிப்பதகதுக்கு நிலம் வாங்கப்பட்டுள்ளது. 1985ம் ஆண்டின் ஆவணத்தின் மூலத்தை காண்பிப்பேன் என்பது ஸ்டாலினின் வாய் சவடால்.

 
Article_1_6

டாக்டர் ராமதாஸ் மூலம் பஞ்சமி நில மீட்புக்கு தீர்பு கிடைக்கட்டும்’’ என்று விடுதலை சிறுத்தைகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், இப்போதைய பாஜவின் தீவிர ஆதரவாளருமான தடா பெரியசாமி திட்டவட்டமாக கூறியதுடன், நவம்பர் 19ம் தேதி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில், இதுகுறித்த விசாரணையில் ஆஜராகி, இதற்கான ஆவணத்தின் நகலைத் தாக்கல் செய்துள்ளார்.

 

மிரட்டும் திமுக

தங்களிடம் மூலப்பத்திரம் உள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தன் சட்டப் பிரதிநிதியான ஆர்.எஸ்.பாரதி மூலம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணையில் ஆஜராகி, விசாரணை ஆணையரையே மிரட்டும் தொனி யில் பேசியுள்ளார். திமுக இப்போது மட்டுமல்ல, எப்போதும் நில அபகரிப்புக்குப் பெயர் பெற்றது என்பதை இந்த ‘மூலப்பத்திரம் எங்கே’ என்ற ஹேஸ்டேக் மூலம் இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தி, பஞ்சமி நில மீட்புக்கு பிள்ளையார் சுழிபோட்ட பெருமை திமுக தலைவர் ஸ்டாலினையே சேரும்.

 

இப்போது திருவள்ளுவர்...

தமிழ்ப் புலவர், தெய்வப் புலவர், பொய்யா மொழிப் புலவர் என்று எத்தனை பெயரில் அழைத்தாலும் அது திருவள்ளுவர் ஒருவரையேச் சேரும். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை, மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய கொண்டு வந்தபோது, அங்கிருந்த புலவர்கள் திருக்குறளை ஒரு நூலாகவே ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கிருந்த தமிழ்ப்பாட்டி ஔவையார், திருக்குறளை பொற்றாமரைக் குளத்தில் இருட்டு, இறைவன் மீட்டுக் கொடுத்தால், அதை தமிழ் சங்கத்தில் உள்ள புலவர்கள் ஏற்றக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

 
Article_1_7

மூன்றாவது தமிழ் சங்க காலம்

குளத்தில் தோன்றிய பொற்றாமரையும், சங்கப் பலகையும் திருக்குறளை தன்னகத்தே ஏந்தி, புலவர்களிடம் சேர்த்தது என்பது புராணங்கள் கூறும் உண்மை. இந்த வகையில், இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் புலவர், இந்து மதம் சார்ந்த வாழ்வியல் முறைகளை போதித்துள்ளார் என்பதே உண்மை. அவரது 1330 திருக்குறளும் சொல்லும் பொருளும், வாழ்வியல் உண்மையும், அறமும், வேதத்தின் சாரம் என்பதே உண்மை!

 

கிறிஸ்துவராக மாற்றும் முயற்சி

திருக்குறளை தங்கத் தட்டில் வைக்கப்பட்ட மலம் என்று விமர்சித்த ஈரோடு ராமசாமியின் வழித்தோன்றல்களாக வந்த திமுகவினர், திருக்குறளை தமிழ்நூல் என்று ஏற்றுக் கொண்டனர். ஆனால், தமிழர் வாழ்வியலில் குறிப்பிடப்பட்ட திருநீறு இட்ட நெற்றியுடனும், கழுத்தில் உருட்திராட்சி மாலையுடனும் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவரை, வெள்ளை உடை உடுத்திய நபராக, நீரில்லாத நெற்றியுடன், 1977-முதல் ‘‘இவர்தான் வள்ளுவர். இப்படித்தான் இவர் வாழ்ந்தார்’’ என்று அடையாளப்படுத்தினர் திமுகவினர்.

 

காங்கிரஸின் பக்க வாத்தியம்...

போர்டு பவுண்டேஷன் கிறிஸ்தவ அமைப்பு என்பதால், இந்தியாவில் மீண்டும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கொண்டு வர வேண்டும் என்று ரொம்பவும் மெனக்கெட்டது. இதற்காக, தன் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் அபிஜித் பேனர்ஜி மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை உருவாக்கி, அவற்றை அமல்படுத்தவும் முடியும் என்று போலியாக பரிந்துரை மற்றும் பிரச்சாரம் செய்தது.

 

வள்ளுவர் இந்து அல்ல...

கள் உண்ணாமை, புலால் உண்ணாமை, பிறன் மனை நோக்காமை, வாய்மை, புறங்கூறாமை என்று 1330 குறளில் வள்ளுவர் கூறிய எதையும் பின்பற்றாத திமுக, அவரை இந்து மக்களுக்கு உரியவர் அல்ல என்று மெல்ல மெல்ல விளம்பரம் செய்துவந்தது. ஒரு கட்டத்தில், திருவள்ளுவருக்கு திருக்குறள் எழுத ஐடியா கொடுத்ததே நான்தான் என்று 8ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லபடும் புனித தாமஸின் கட்டு கதையும் உண்டு.

வள்ளுவர் வாழ்ந்தது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருப்பினும் அஞ்சாது தாமஸ் கூறுகிறார். 8ம் நூற்றாண்டில் மயிலையில் நானும் வள்ளுவரும் வாக்கிங் போனோம் அப்போது குறளுக்கான ஐடியா கொடுத்தேன் வள்ளுவர் கிறிஸ்துவராக மாறினார் என்று!!!

 

பல மாதங்கள் கழித்து பாஜகவின் காவி...

சுதாரித்துக் கொண்ட தமிழக பாஜக, ஒரே ஒரு திருவள்ளுவர் படத்தை காவியில் வெளியிட்டது. பல மாதங்கள் ஆன நிலையில் மூலபத்திரம் எங்கே என்ற கேள்விகளை மடைமாற்ற அதுவரை தூங்கிக் கொண்டிருந்த திமுக தையாதக்கா என்று குதிக்கத் தொடங்கியது. ‘‘திருவள்ளுவரை காவி மயமாக்கிய பாஜவை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கமாக ஒரு டுவிட் பதிவிட்டு, தன் நாரதர் கலகத்தைத் தொடங்கிவிட்டார்.

 

திமுக உரத்த குரல்

தலைவரைத் தொடர்ந்து, திமுகவும் திருவள்ளுவர் தமிழ் சமூகத்துக்கு பொதுவானவர் என்று கூக்குரல் இடத் தொடங்கியது. ஆமாம்… ஆமாம். அவர் மதச்சார்பற்றவர், அவருக்கு மதங்கள் இல்லை என்று, மனதாலும், மதத்தாலும் ஆபிரஹாமியத்தின் பிள்ளைகளாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம், கிறிஸ்தவர்களும் கூக்குரல் இட்டனர். ஆனால், தவறியும் கூட, பைபிளில் இல்லாதது, குரானில் இல்லாதது, திருக்குறளில் இருக் கிறது என்று இந்த தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தனிக்கதை.

இப்படி, அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசப் பட்டு, முழங்கப்பட்டு வந்த திருக்குறளையும், அதை எழுதிய திருவள்ளுவரையும் உலகம் முழுவதும் விவாதப் பொருளாக்கி, பிரபலப்படுத்திய பெருமை ஸ்டாலினையே சேரும்.

திருவள்ளுவர் குறித்த அவரது டுவிட் செய்த நாரதர்வேலை, இன்றைய தலைமுறையினருக்கு திருவள்ளுவர் குறித்த பல்வேறு உண்மைகளை புரிய வைத்துள்ளது. குறிப்பாக, 1900ம் ஆண்டுகளில் தொடங்கி, 1965 வரை திருவள்ளுவரின் உருவம், அவரது தவக் கோலம் ஆகியவை குறித்த படங்களும், ‘திருவள்ளுவ நாயனார்’ என்ற அவரது அடைமொழியும் இப்போதைக்கு தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பிரபல்யமாகிவிட்டது. இதற்காக, ஸ்டாலினுக்கு தமிழ் சமூகம் மட்டுமல்ல, தமிழக பாஜவும் நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளது.

 
Article_1_10

டாக்டர் இரா.நாகசாமி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்

திருக்குறளை வள்ளுவர் வேதக் கருத்துக் களின் அடிப்படையில் எழுதி உள்ளார் என்று நான் கூறியதால் என்னை தமிழ் விரோதி என்றும் என்னை செம்மொழி விருது பெறுவோரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். பரிமேலழகரும் பல பேராசிரியர்களின் கருத்தும் இதுதான்.

ஜி.யூ.போப், தமது 1886ல் வெளியிடட்ட “திருவள்ளுவ நாயனார்”என்னும் நூலில் இந்து சமயத்தையும், சங்கரரின் சீர்திருத்தங்களையும், சமணர் கோட்பாடுகளையும், பகவத் கீதையின் கருத்துக்களையுமே வள்ளுவர் எழுதியுள்ளார்.

 

குறிப்பாக பகவத்கீதையின் அடிச்சுவட்டிலேயே திருக்குறளை யாத்துள்ளார் என்றும் பலவிடங்களிளும் கூறியுள்ளார். மேலும் சாந்தோகிய உபநிடத கருத்துக்களையும் மனுவின் தர்ம சாஸ்த்திரத்தை சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கோள்களாக எழுதியுள்ளார். ஆதலின் ஸ்டாலின், திருக்குறளை நான் சிறுமைப்படுத்தியுள்ளேன் என்று கூறுவது அவரது தமிழ் அறியாமையே! இந்த பழிச் சொல்லில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய, தமது அறிக்கையை திரும்பப் பெற்றுக் கொள்வதே சாலச் சிறந்தாகும் எனத் தோன்றுகிறது.

 
Article_1_3

தடா பெரியசாமி (பிறப்பு:5 செப்டம்பர், 1962)

Article_1_5

தமிழக அரசியல்வாதி மற்றும் பட்டியலின மக்கள் செயற் பாட்டாளர் ஆவார். பஞ்சமி நிலம் மீட்புப்பணிக்காக மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பையும், நந்தனார் சேவாசிரம அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். முரசொலி கட்டிடம் இருந்த இடத்தில் கல்லூரி இருந்தது. – தடா பெரியசாமி

 

வி.ஜி.பி சந்தோசம் ஐயாவை நினைத்தால் தான் காமெடியாக உள்ளது. உலகெங்கும் 1000 வள்ளுவர் சிலைகளை வைப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார்.

 

எந்த வள்ளுவரை தெரியுமா?

அடையாளங்கள் நீக்கப்பட்ட, வள்ளு வரை! கலைமகள் சரஸ்வதிக்கு பதிலாக அனைத்து தமிழ் கலை கூடங்களில் வள்ளுவரை நிறுவிய கிறிஸ்துவ மத பற்றாளர் சந்தோஷம் அவர்கள் என்ன செய்ய போகிறார் இனி?

இனி இந்த வள்ளுவர் சிலைகளுக்கு நாம் தான் சென்று திலகமிட்டு, காவி வேட்டி கட்டி, ருத்திராட்சம் அணிவிக்க வேண்டும் போல் இருக்கிறது.

 
Article_1_9