Thursday, April 25, 2024

சீனாவின் இஸ்லாமிய அடக்கு முறை!

‘‘இஸ்லாமியரின் தீவீரவாதம், பிரிவினைவாதம் மற்றும் அடிப்படை மதவாதம் என இம்மூன்றும் தான் சீனாவின் நலத்தையும், வளத்தையும் ஒற்றுமையையும் பாதிக்கும். ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள யுகிர் இஸ்லாமியர்களுக்கு செய்யப்பட்டுள்ள மூளைச்சலவை உலகிற்கே ஆபத்தானது. இதனை களைய அவர்களுக்கு ஆரோக்கியமான சூழலில் மறுவாழ்வு மையம் போன்ற புது கல்வி மையங்கள் திறக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்’’ என்று சீன அரசு ஐ.நா சபையில் பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

 

சீனாவும் இஸ்லாமும்...

123

7ம் நூற்றாண்டில் சீனாவில் கால்பதித்தது இஸ்லாம். கடல் வழியாகவும், தற்போது ‘சில்க்ரூட்’ எனும் நிலம் வழியாகவும் வந்த இஸ்லாமியர் 13ம் நூற்றாண்டு வரை தங்களுக்குள்ளாகவே ஜின்ஜியாங் எனும் மேற்கு எல்லை மாகாணத்திலேயே வாழ்ந்து வந்தனர். அருகில் உள்ள ஹான் வம்ச சீனர்களிடமிருந்து தனித்தே வாழ்ந்தனர். ஆனால் அமைதியாகவே நல்லிணக்கத்தோடு வாழ்ந்தனர். இவர்கள் துருக்கிய நாட்டு இஸ்லாமியராகவே பார்க்கபடுகின்றனர். அவர்களது மொழியும் அப்படித்தான்.

 

சீனாவும் இஸ்லாமும்...

19ம் நூற்றாண்டில் கம்யூனிஸ் அரசு தோற்றுவித்த பின்னர், இஸ்லாமியர் களின் அதிகார எல்லைகள் வரையறுக்கப்பட் டன.

ஏற்கெனவே மேற்கு எல்லையான ஜின்ஜியாங்கில் சுயேச்சை அரசாகவே செயல்பட்டு வந்ததும் சீன அரசுக்கு அச்சுறுத்த லாகவே இருந்தது.

மேலும் ஜின்ஜியாங் எல்லை மாகாணம் முற்றிலுமாக இஸ்லாமியர் களால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டதாக எண்ணி பிரிவினைவாத குரலுக்கு பயந்து சீன அரசு அந்த மாகாணத்தில் லட்ச்சகணக்கான ‘ஹான் சீனர்களை’ குடியமர்த்தியது.

தற்பேபது ஜின்ஜியாங் பகுதியில் சீனர்களும் இஸ்லாமியர்களும் ஒரளவு சரிசம அளவில் இருந்தாலும், சீனர்களின் அயரா உழைப்பும் கல்வி முறையும் அவர்களை வள மாக்கி உள்ளன.

125

இரட்டை கோபுர தாக்குதல்!

2011ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு சீனா அரசு யோசிக்க தொடங்கி விட்டது.

இஸ்லாமியரிடையே பழமைவாதம் அதிகரித்து விட்டதாக நினைத்த சீனா அரசு அதற்கான மாற்று வழிகளை ஆராய தொடங்கியது.

முன்பு இருந்த இஸ்லாமியர், மத கோட்பாடுகளுடன் இருந்தாலும், நாகரீகமாக முன்னேறி வரும் காலத்தினுடன் இணைந்தே இருந்தார்கள். பெண்கள் சுதந்திரமாக நாகரிக உடைகளுடன் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் தற்போது அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தால் இஸ்லாமியர்கள் அறிவியல் முன்னேற்றம், மனநலன், மத நல்லிக்கணம், ஒற்றுமை என்பனவற்றை தூக்கியெறிந்து விட்டு, நீண்டதாடி, குல்லா, புர்கா, மதராசா படிப்பு என்று ஆகிவிட்டது கவலை அளிக்கிறது என் சீன அரசு தனது செயல்களை நியாயபடுத்தியுள்ளது.

பத்து பிரிவுகள்!

சீன தேசம் கம்யூனிஸ் வகை அரசு அறிவிக்கப்பட்வுடன் மக்கள் தொகையை 56 வகையாக பிரித்தனர். அதில் இஸ்லாமியரில் 10 வகை பிரிவுகள் அல்லது ஜாதிகளாக பிரிக்கப்பட்டனர்.

தற்போது யுகீர் பிரிவினருக்கு மட்டுமே இந்த புது பயிற்சி நிலையங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது ‘கசாக்’ எனும் இன்னுமொரு பிரிவையும் சேர்க்க தொடங்கியுள்ளது சீன அரசு.

 

இந்த வகுப்புகளில் என்ன நடக்கிறது??

இதில் இருவகையான கருத்துகள் உள்ளன. சீன அரசு மூத்த தலைவரும், ஜின்ஜியாங் மாகாணத்தின் அதிபருமான அமீரும் கூறுவது ‘‘மக்களை அமைதியாக, மன நலத்தோடு வளமாக வாழ வைக்கவே’’ நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்கிறார்கள்.

ஆனால் அங்கிருந்து வெளியே வந்துள்ள சிலர் தங்களது நம்பிக்கைக்கு மாறான கருத்துகள், கம்யூனிஸ் சித்தாந்தங்கள் திணிக்கப்படுவதாகவும், சீனா அரசையும், சீன அதிபரையும் வாழ்த்தி பாடுமாறு வற்புறுத்த படுவதாகவும் புகார் கூறியுள்ளனர்.

குடிக்கவும், பன்றி கறி சாப்பிட சொல்லி வற்புறுத்தலும் சில நேரங்களில் சொந்தங்களை விட்டு தனியே பிரிந்து வாழ்தல் என ஒரு முகாமில் இருப்பதை போலவே உள்ளது என்று வெளியே இஸ்லாமியர் கூறுகின்றனர்.

 

திட்டம்

2017ம் ஆண்டே இந்த முகாம்கள் கட்டப்பட்டு விட்டன. இந்த முகாம்களை மறுவாழ்வு மையமாக கருதும் சீன அரசு முதலில் இதனை மறுத்து வந்தாலும், பிற நாடுகள் செயற்கோள் படங்களை காட்டி நியாயம் கேட்க துவங்கிய பின், இந்த முகாம்களை பற்றிய செய்திகளை மையமாக வெளியிட்டது சீன அரசு.

126

ஜின்ஜியாங்கின் வளம்

எல்லை மாகாணமான ஜின்ஜியாங்கில் எண்ணெய் வளம், எரிவாயு என குவிந்துள்ளது. மேலும் சீனா தற்போது பல விதமான மற்றும் நிலவழி தொடர்புகளை ஏற்படுத்தி ஏற்றுமதியினை மிக பெரிய அளவில் செய்து வருகிறது.

ஏற்கெனவே இருமுறை பிரிவினைவாதத்தால் தனி மாகாணமாக ஜின்ஜியாங் செயல்பட துவங்கியிருந்தது என்பதும் மீண்டும் அது சீனாவுடன் ராணுவம் மூலமாக இணைக்கப்பட்டதும் சீனாவை மேலும் அச்சுறுத்துகின்றன.

இஸ்லாமிய மதம் சீனாவின் இயற்கையான மதம் இல்லை. வன்முறையால் திணிக்கப்பட்டது என்பதுதான் சீன அரசின் வாதம்

27 நாடுகள் கண்டனம்

சுமார் 27 நாடுகள் இது மனித உரிமைகளை மீறுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

சீன அரசு ராய்டர்ஸ் போன்ற தேர்தெடுக்கப்பட்ட மீடியாக்களை இந்த மாபெரும் கட்டமைப்புக்குள் கேமிராக்களுடன் அனுமதித்தது.

12 நாட்டு பிரதிநிதிகளையும் இந்த புதுமை வகுப்புகள் கட்டமைப்புக்கு விருந்தினராக அழைத்து சென்று இங்கு உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான தீங்கும், சித்ரவதையும் இல்லை என்று நிருபித்துள்ளது.

இந்த புதுமை வகுப்புகள் கட்டமைப்பில் சுமார் 1 மில்லியன் அதாவது 6 கோடி இஸ்லாமிய யுகீர்கள் உள்ளனர்.

சட்டம், மனித நேயம், மத நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, மாண்டரின் மொழி, சீன அரசின் நன்மைகள் என பல சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

அடுத்த தலைமுறையினர் இந்த தீவீரவாதத்தை விட்டு விட்டு உலகோடு இயைந்து வாழ வேண்டும் என்பதே சீன அரசின் விருப்பம் என்று சொன்ன மூத்த அரசு ஆலோசகர் ஜின்ஜியாங் மாகாண தலைவர் ஹோரத் ஜகிர் தெரிவித்தார்.

 

சந்தோஷமாக தான் இந்த பயிற்சி முகாம்...

124

ஆடல் பாடல் சிரிப்பு உற்சாகம் என இஸ்லாமிய முல்லாக்கள் உள்பட அனைத்து இஸ்லாமியர்களும் சந்தோஷமாக உள்ளனர். தீவீரவாதம், கொலை, கொடூரம் இது தான் வாழ்வின் இலக்கு என்பதை மறு சீரமைப்பு செய்வதே சீன அரசின் முயற்சி.

சோதனைகளுக்கு சென்ற நாடுகளின் பிரதி நிதிகள் மற்றும் மீடியா குழுவினர் பல யுகீர் இஸ்லாமியரை பேட்டி எடுத்துள்ளனர். எவ்விதமான துன்புறுத்தலும் இல்லை. ஒரு புதிய உலகை கற்று வருகிறோம் என்று கூறியுள்ளனராம்.

மேலை நாடுகள் எங்களிடம் தீவீரவாதத்தை எப்படி அடக்குவது என்று கற்று கொள்ளட்டும். வெறுமனே மனித உரிமை என்று கத்தி நேரத்தை வீணாக்காதீர்கள் என்று சீன அரசு சொல்லியுள்ளது!