Saturday, March 25, 2023

வைகோ எனும் நான்

வைகோவின் அரசியல் பாதை…

2019ம் ஆண்டு ஜூலை மாதம் தலைநகர் தில்லியில், பாராளுமன்றத்தில் வை.கோபால் சாமியாகிய நான்… என ஒலிக்கிறது வைகோவின் குரல் ராஜ்யசபை எம்.பியாக பதவியேற்கிறார் வைகோ…

 

காலம் தான் எவ்வளவு வேகமாக செல்கிறது...

ஆரம்ப அரசியல்!

கலைஞர் கருணாநிதியின் அரிய கண்டுபிடிப்பு தான் வைகோ! குருவினை மிஞ்சிய சிஷ்யராகி, கருணாநிதிக்கே தெரியா மல், கள்ளத் தோணியில் இலங்கை யில் பிரபாகரனை சந்திக்க, வைகோ- கருணாநிதி உறவில் விரிசல் வந்தது.

1991ல் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. புலிகளின் தலைவனாக வலம் வந்த பிரபாகரனுக்கு ராஜிவ் காந்தியின் அரசியல் சமாதானம் பிடிக்கவில்லை.

அதனால் மனித வெடி குண்டாக தாணு என்ற பெண்ணை அனுப்பி, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாகவே திமுக தோல்வியடைந்தது.

ஸ்டாலின் VS வைகோ

தமிழர் என்று சொல்லி, சொல் வளம் மிக்க வைகோ கட்சியில் வளர கருணாநிதி பொறுப்பாரா? தன் மகன் ஸ்டாலின் கதி என்னவாகும் என்று யோசித்து, 1993ம் ஆண்டில் என்னையும் என் மகனையும் வைகோ கொல்ல பார்க்கிறார்’’ என்று கொலை பழி சுமத்தி கட்சியை விட்டே நீக்கினார்.

 

5 தொண்டர்கள் தீக்குளிப்பு!

வைகோவை கட்சியிலிருந்து நீக்கியவுடன் உணர்ச்சி வசப்பட்ட அவரது 5 தொண்டர்கள் தீக்குளித்து மாண்டனர்!

மதிமுக

மதிமுக என்ற கட்சி தொடங்கி 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் இணைந்து சந்தித்தார்.

லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணியில் இணைந்து 3 இடங்களை வென்றார். 1999ல் திமுகவுடன் கூட்டணி அமைத்தது மதிமுக.

 

வீர சபதம்

இனத்துரோகம் செய்து லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த சிங்கள ராணுவத்திற்கு துணை புரிந்த காங்கிரஸ் மற்றும் திமுகவை ஒழிக்கும் வரை ஒய மாட்டேன் என்று சபதம் செய்த வைகோ திமுக-வுடனான உறவை முறித்துக் கொண்டார்

தேமுதிக

2016ம் ஆண்டில் மக்கள் நலக்கூட்டணி என விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி வைத்து மிக சொற்பமான வாக்குகளே பெற்றார்.

vaiv

29 ஆண்டுகளுக்கு பின்னர்

கொலை பழியை மறந்து, தனக்காக தீக்குளித்த தொண்டர்களை மறந்து பதவிக்காக 29 ஆண்டுகள் கழித்து, வைகோ திமுகவுடன ஐக்கியமானது தான் சந்தர்ப்ப அரசியல்.

 

விதி வலியது

இந்தியா சிதறும் என்று வைகோ 2009ம் ஆண்டில் காங்கிரஸ் – திமுக கூட்டணியை பற்றி பேச, திமுக கட்சிதான் வைகோவின் மேல் தேச துரோக வழக்கை போட்டது.

2019ம் ஆண்டில் திமுக எம்.பி பதவிக்காக வைகோ விண்ணப்பிக்கும் நேரத்தில் இதே அவருக்கு ஒரு பெரும் சிக்கலாக அமைந்ததுதான் காலத்தின் கூத்து.

 

ஒரு வருட சிறை

தேச துரோக வழக்கில் அவருக்கு ஒரு வருட சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஒரு வருடம் என்ன?? ஆயுள் தண்டனை கூட தரட்டும் என்று வீராப்பாக சொன்ன வைகோ இறுதியில், தேதுரோக வழக்கில் சிறை செல்லும் முதல் ஆள் நான் தானா?

தயவு செய்து மன்னித்து விட்டுவிடுங்கள் என்று மேல் மனு போட்டுள்ளார்.

மேடைபேச்சு தானே… ஒரு பக்கம் எம்.பி யாக இருங்கள் என்று விண்ணப்பத்தை இந்திய சட்டம் ஏற்க, இந்திய இறையாண்மையை காக்க புறப்பட்டு விட்டார் வைகோ

 

இதில் இன்னும் ஒரு மசாலா!

“நான் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளேன். ஆனாலும் நான் பாராளுமன்றத்தில் பேசியவுடன் அவர் மேஜையை தட்டி பாராட்டியது மிகவும் நெகிழ்ச்சி என்று கூறியது தான் சூப்பர் டுவிஸ்ட்!”