Thursday, April 25, 2024

சீண்டும் அமெரிக்கா சீறும் இந்தியா!

22

சர்வதேச அளவில் தன்னை பெரிய வல்லரசு நாடாக நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில், அமெரிக்கா 2 விஷயங்களை மட்டுமே முன் நிறுத்தும். ஒன்று பொருளாதார தடை. மற்றொன்று மத ரீதியான யுத்தம். அமெரிக்காவின் பிரமாண்டமான பொருளாதாரத்தைக் கண்டு பயப்படும் பிற வல்லரசு நாடுகள்கூட, அதன் உதாருக்கு பயந்து, அடக்கி வாசிக்கும். ஆனால், வடகொரியா, ஈரான் உட்பட சில நாடுகள், ‘எங்க வேலையை நாங்கள் பார்த்துக்கிறோம்’ என்று பதிலடி கொடுக்கும்.

 

‘எங்க வேலையை நாங்கள் பார்த்துக்கிறோம்’ என்று பதிலடி கொடுக்கும். இந்த நாடுகளுடன் பொருளாதார ரீதியாக மோத முடியாது என்று உணர்ந்துகொண்டால், தன் 2வது ஆயுதத்தை பிரயோகிக்கும். அந்த 2வது ஆயுதம், மத யுத்தம். உலகில் 50க்கும் அதிகமான முஸ்லிம் நாடுகளுடன், எப்போதும் மறைமுக யுத்தம் நடத்தும் அமெரிக்கா, அந்நாடுகளுடன் பொருளாதார யுத்தத்தில் மட்டுமே ஈடுபடும். மத யுத்தத்தில் ஈடுபடாது. காரணம், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவுக்கு நன்கு தெரியும்.

விஷமத்தனமான அறிக்கை!

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, சர்வதேச பஞ்சாயத்து அமைப்பாகும். அடங்கிப் போகும் நாடுகளுக்கு விருந்து வைக்கும். அடங்க மறுக்கும் நாடுகளை மிரட்டும். இப்படியொரு மிரட்டலை அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 21ம் தேதி, இந்தியாவுக்கு எதிராக அரங்கேற்றியது. சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் 8 பக்க அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா, அதில் இந்தியாவை கடுமையாக சாடியிருந்தது.

பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமர் பதவியை பிடிப்பார் என்று எதிர்பார்க்காத அமெரிக்கா, இப்போது அவர் பிரதமரான நிலையில், தன் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் மத சுதந்திரத்தை நசுக்குவதாகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்து அமைப்புகள் ஆண்டு முழுவதும் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ‘பசு குண்டர்கள்’ என்ற தலைப்பில் மிகவும் பொரிந்துதள்ளியுள்ளது.

பசு குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், வேடிக்கை பார்க்கின்றனர் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. சீனா, வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளிடம் அடிவாங்கிய அமெரிக்கா, இப்போது இந்த விஷமத்தனமான அறிக்கையை இந்தியாவுக்கு எதிராக வெளியிட்டுள்ளது.

 

இந்தியா மீது கோபம் ஏன்?

உலக அளவில் மத மாற்றம் மிக வேகமாக நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழ் சினிமா உலகில் 80 சதவீதம் பேர் மத மாற்றத்தில் உள்ளனர். நடிகர் கமலஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக கிறிஸ்தவத்துக்கு மாறிவிட்டனர். ‘என் மகனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக தர்காவுக்குச் சென்றோம்’ என்று அறிக்கை கொடுத்த டி.ராஜேந்தரின் மகன், குறளரசன் இஸ்லாம் மாறினார். இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதம் மாறினார். இன்னும், இந்தப் பட்டியல் நீளும். இவாஞ்சலிஸ்ட் மிஷனரிகளுக்கு மடை திறந்த வெள்ளமாய் அமெரிக்காவில் இருந்து பாய்ந்த நிதிக்கு, மோடியின் அரசு 2014&19ம் ஆண்டுகளில் அணை போட்டது.

11
33

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதிக்கு, என்ஜிஓக்கள் கணக்குக் காண்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமான என்ஜிஓக்கள் / மத மாற்ற அமைப்புகள் தங்கள் நிறுவனங்களை மூடின. இதனால், மதமாற்றம் தடைபட்டது. இதில் கடுப்பான மிஷினரிகள், அமெரிக்க அரசு மூலம், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து தங்கள் தொழிலை மீண்டும் திறம்படச் செய்வதற்காக, அமெரிக்க வெளியுறத்துறை மூலம் நெருக்கடி கொடுக்கின்றன.

 

உலகின் சுதந்திரமான நாடு இந்தியா!

மதச் சுதந்திரம் என்ற அடிப்படையில் பார்த்தால், உலகின் சுதந்திரமான மதக் கோட்பாடு உடைய நாடுகளில் முதன்மை இடத்தில் உள்ளது இந்தியாதான். 1976க்கு பின்னரே இந்தியாவின் அரசியல் அமைப்பில் மதச்சார்பின்மை என்ற கோட்பாடு, இந்திரா பெரோஸ் காண்டியால் புகுத்தப்பட்டது என்பது கசப்பான உண்மை. அமெரிக்கா கிறிஸ்தவத்தின் பக்கம் நிற்கிறது. முஸ்லிம் நாடுகளின் அமைப்புகள், தங்கள் மதக் கோட்பாடுகளை காப்பாற்ற துணை நிற்கின்றன. சீனா, மியான்மர், இலங்கை, கம்போடியா போன்ற நாடுகள் புத்த மதத்தை தாங்கி நிற்கின்றன. ஆனால், இந்த எல்லா மதங்களையும் தாங்கி நிற்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. 130 கோடி மக்கள் தொகை இருந்தபோதும், எந்த ஒரு பஞ்சாயத்தும் இல்லாமல், உலக நாடுகளுக்கு மத சுதந்திரத்துக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. இந்நிலையில், அமெரிக்காவின் மத சுந்திரம் தொடர்பான இந்த அறிக்கை, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ நாடுகளுடன் ஒப்பிடும்போது, சிரிக்கும் வகையில் உள்ளது.

” இந்தியாவுக்காக மற்ற நாடுகளையும் பகைத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள், வர்த்தக தடைகள் பயன் கொடுக்காது என்ற நிலையில், இப்போது மத ரீதி யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து, உலக அளவில் நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் கால் பதித்துள்ளது.”
 

பதிலடி கொடுத்த இந்தியா!

மத சுதந்திரம் பற்றிய அமெரிக்காவின் 8 பக்க அறிக்கைக்கு, மத்திய அரசும், புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் நறுக்குத் தெறித்தார்போல் பதில் சொல்லியுள்ளனர். ‘‘எங்கள் நாட்டின் மத சுதந்திரம் குறித்து, எந்த ஒரு வெளிநாட்டு அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நற் சான்றிதழ் பெறும் நிலையில், நாங்கள் இல்லை. இது எங்கள் நாட்டின் உள் விவகாரம், இதில் தலையிட அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை’’ என்று அமெரிக்காவை இடித்து கூறியுள்ளார்.

இதுகுறித்து நமது வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார் பேசும்போது, ‘‘எங்கள் நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. சகிப்புத்தன்மை மற்றும் நீண்ட கால அர்பணிப்பு கொண்ட பன்மைத் துவ மக்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசியலமைப்பு சிறுபான்மை மக்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது. மேலும் மத சுதந்திரத்தை பாதுகாக்கிறது. ஜனநாயக நிர்வாகம் அடிப்படை உரிமைகளை மேலும் பாதுகாக்கும். எந்த ஒரு வெளிநாட்டு அரசும், நிறுவனமும் எங்கள் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கிறோம் என கூறவேண்டிய அவசியம் இல்லை. மத சுந்திரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவின் உள்நாட்டு விவாகரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம்’’ என்று எச்சரித்துள்ளார்.

 

தவிக்கும் அமெரிக்கா

உலகின் 4வது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில், கச்சா எண்ணைத் தவிர, பிறவற்றில் இந்தியா சுய சார்பு நிலையை எட்டும் நிலையில் உள்ளது. தொழிற்துறை உற்பத்தி, விவசாயம் என்று பல்வேறு பிரிவுகளில் பிற நாடுகள் வளர்ச்சித் தேக்கத்தை கண்டுள்ளபோது, இந்தியா தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உட்பட பல அமைப்புகளும் இந்தியாவுக்கு உதவிடத் தயாராக இருக்கின்றன. ஆனால், கடன் வேண்டாம் என்ற கொள்கையில் உள்ள மோடியின் அரசு, உலக நாடுகளுடன் நல்ல வர்த்தகத் தொடர்பில் உள்ளது.

இந்த வர்த்தகத் தொடர்பை முறிக்க முடியாமல் தவிக்கும் அமெரிக்கா, இந்தியாவுக் காக மற்ற நாடுகளையும் பகைத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள், வர்த்தக தடைகள் பயன் கொடுக்காது என்ற நிலையில், இப்போது மத ரீதி யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து, உலக அளவில் நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் கால் பதித்துள்ளது. பாவம், யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழி அமெரிக் காவுக்குத் தெரியாது போல…