சமூக சேவையிலும், மக்கள் தொண்டிலும் சிறப்பாக பணியாற்றி வரும் மனித நேயர்களுக்கும், தத்தம் துறைகளில் சிறந்து விளங்கி மக்களுக்கு சேவை செய்து வரும் சான்றோர்களுக்கும் தலை வணங்கி நன்றி தெரிவிக்கும் பொருட்டு, விருது வழங்கி கௌரவிக்க உள்ளோம்.
துருவா, விஷிஷ்டா, ஸ்ரேஷ்டா விருதுகளை வழங்கி பெருமைபடுகிறோம். சாதனை பெண்கள் இவர்கள் என அடையாளம் கண்டு, வீட்டையும் சமூகத்தின் நலனையும் பேணி பாதுகாக்கும் பெண் மணிக்கு சக்தி சாதனா மற்றும் சிரோன்மணி விருது கொடுத்து பெருமை கொள்கிறோம்.
சமூக அக்கறை கொண்ட நல்லுள்ளங்களுக்கு, தர்மோ தாரண மற்றும் பிஷ்மா விருது வழங்கி கௌரவித்து பெருமிதம் அடைகிறோம்.