வதாந்தா வரிசையில் adani வளர்ச்சிக்கு தடையா?

‘இந்தியா உலகின் குருவாக உருவாகிக் கொண்டிருக்கிறது’ என்ற முழக்கம் ஒலிக்கத் தொடங்கும்போது எல்லாம், இந்தியாவுக்கு எதிரான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் யுத்தங்கள் சத்தமின்றி கட்டவிழ்த்து விடப்படுகிறது.

ஊழல் காங்கிரஸ்

இந்தியாவில் ஊழலில் ஊறிப்போன காங்கிரஸ் அரசு 2014 லோக்சபா தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்தது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்று சரமாரியாக சீர் திருத்தங்களை முன்னெடுத்த நிலையில், பிரதமர் மோடி, தவறான பாதையில் செல்கிறார் என்று விமர்சித்தனர்.

மோடியின் சதுரங்க அரசியல்

ஆனால், அவரது நடவடிக்கையை கூர்ந்து நோக்கிய சர்வதேச அரசியல் நோக்கர்கள், ‘‘நீங்கள் நினைப்பது தவறு. மோடி, வேறு விதமான அரசியல் சதுரங்கத்தை ஆடிக் கொண்டிருக்கிறார். அவரது நகர்கத்தல்கள் கணிப்புக்கு அப்பால் ஓடிக் கொண்டிருக்கிறது’’ யூகம் தெரிவித்தனர்.
ஆனால், எதிர்கட்சிகள் மோடியை விடுவதாக இல்லை. மக்கள் வரிப் பணத்தில் உலகம் சுற்றிக் கொண்டிருககிறார் என்று விமர்சித்தன.

கிண்டல்

மோடியை வெளிநாடுவாழ் பிரதமர் என்றும் பிரபல அரசியல்வாதியான, பெரோஸ்கான் வழிவந்த ராகுல் விமர்சித்தார். அதேநேரத்தில், 2019 தேர்தலில் மோடியை வீழ்த்துவதற்கு காங்கிரஸ், மிக பலமான கூட்டணியை ஒவ்வொரு மாநிலத்திலும் அமைத்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக, தமிழகத்தில் கம்யூனிஸ்ட்களுடன் என்று உயிர் காக்கும் கூட்டணியை அமைத்து தன் கட்சியின் உயிரோட்டத்தை தக்க வைக்கப் போராடியது.

ஸ்டெர்லைட் போராட்டம் வெடித்தது

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, திமுக, காங்., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் எல்லாம் வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தன. ஜெ., மறைவுக்குப் பின்னர், தமிழகத்தில் பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும். இந்த அமைப்புகள் எப்படியே வலை பின்னும் பணியைத் தொடங்கிவிட்டன. 2019 மற்றும் 2021 தேர்தல்களுக்காக 2017 முதல் தீவிர வலையைப் பின்னின. ‘‘தமிழகத்தில் மோடி எதிர்ப்பு என்பதை நாங்கள்தான் கட்டமைத்தோம். அதில் மிகத் தீவிரமாக இருந்தோம்’’ என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், டிவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

பிண அரசியல்

இதே மோடி எதிர்ப்பு கட்டமைப்பின் ஒரு அங்கமாக தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக காய் நகர்த்தத் தொடங்கியது திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி. ஸ்டெர்லைட் ஆலையால், நிலம், நீர், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று கூறி, போராட்டம் நடத்தி, துப்பாக்கி சூடு நிகழ வைத்து, அதில் பிண அரசியல் செய்ததில் திமுக மற்றும் எதிர்கட்சிகள் வெற்றிபெற்றன.

மக்களின் துயரம்

அத்துடன், கூடுதல் போனசாக 2019 லோக்சபா தேர்தலில் வெற்றியும், 2021 சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியையும் கைப்பற்றின. இந்த வகையில், திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும், இந்தியாவின் தொழில்வளர்ச்சி வீழ்ச்சிகண்டது.

காப்பர் இறக்குமதி

இந்தியாவின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் மூடப்பட்டதால், இப்போது, இந்த காப்பர் சீனாவிடம் இருந்து இந்தியாவில் இப்போது இறக்குமதியாகிக் கொண்டிருக்கிறது.

மீண்டும் திறக்கப்பட வேண்டும்

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ளதா? அதெல்லாம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதாவது பாதிப்பே இல்லை என்கின்றன ஆய்வு முடிவுகள். விளைவு? மீண்டும் ஸ்டெர்லைட் திறக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட் கிளையில் மனுக்கள் தாக்கலாகியுள்ளது.

இது அதானியின் முறை

இந்தியாவின் மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றாக அதானி குழுமம் உள்ளது. 1984ல் பிளாஸ்டிக் பைக் இறக்குமதியில் தொடங்கிய அதானியின் வர்த்தகப் பயணம், ராஜீவ் வழங்கிய பிவிசி உற்பத்தி அனுமதியால், மெல்ல வளர்ந்தது. பாமாயில் இறக்குமதி (அதானி வில்மர்),

நரசிம்மராவ் ஆட்சி,

மன்மோகன்சிங் ஆட்சி என்று ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேர் பிடித்தது. இப்போது, இந்தியாவின் சூரிய மின்சக்தித் திட்டங்களில் அதானி குழுமம் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் 111 கிகாவாட் மின் உற்பத்தி திட்டத்தில், அதானியின் பங்களிப்பு அதிகம். அதேபோல், நிலக்கரி அகழ்வு, துறைமுகங்கள், விமான நிலையங்கள் பராமரிப்பு என்று அதன் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் சிறகு விரிப்பு அதிகம்.

ஹின்டன் பர்க்கின் விஷமம்

இந்த சூழலில் அதானி குழுமம் கடந்த ஜனவரி 25ம் தேதி, அதானி எண்டர் பிரைசஸ் குழுமத்தின் சார்பில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘எப்பிஓ’ என்ற பங்கு வெளியீட்டை முன் வைக்கிறது. அதற்கு முதல்நாள், அமெரிக்காவின் பங்குச் சந்தை கிரிமினல் நிறுவனமான, ‘ஷார்ட் செல்லர்’ ஹிண்டன்பெர்க், ‘அதானி குழுமம்பங்குச் சந்தையில் மோசடிகள் செய்துள்ளது. முடிந்தால் அமெரிக்கா கோர்ட்டில் வழக்குத் தொடரட்டும்’ என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

கிரிமினல் நிறுவனம்

இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி நிறுவனத்தின் மீது, இப்படியொரு குற்றச்சாட்டை சுமத்தியது, அமெரிக்காவின் பங்குச் சந்தை முதலீடு மற்றும் ஆலோசனையில் தலையிட தடை செய்யப்பட்ட ஒரு கிரிமினல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிண்டன் பர்க் என்ன வேலை செய்யும் தெரியுமா?

சூதாட்ட நிறுவனம்

உலகளாவிய பங்குச் சந்தையில் வேகமாக வளரும் நிறுவனங்களை டிக் செய்யும். எந்த நிறுவனத்தின் பங்குகள் நல்ல விலைக்கு விற்கிறதோ, அதை வீழ்த்தும் வகையில், பொய் கட்டுரைகள் வெளியிடும். இதனால், முதலீட்டாளர்கள் பீதியடைந்து பங்குகளை குறைந்த விலைக்கு விற்கும்போது, அவற்றை வாங்கிக் கொண்டு, விலை உயரும்போது, அதை மற்றவர்களுக்கு விற்று, பணம் பார்க்கும். அதாவது ஒரு சூதாட்ட நிறுவனம். இந்த சூதாட்ட நிறுவனத்தின் அறிக்கையை நம்பித்தான் அதானியை எதிர்கட்சியினர் உலுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ரூ.10 லட்சம் கோடி போச்சு

அதானி நிறுவனத்தின் மீதான ஹிண்டன் பர்க் அறிக்கையால், இந்திய பங்குச் சந்தையில் அதானி நிறுவனத்தின் சொத்துக்கள் மீதான மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 11.5 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ந்தது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த அதானி, 20 இடத்துக்கும் கீழ் சென்றார். ஆனால், இதில் நடந்த டுவிஸ்ட் என்ன தெரியுமா? எந்த பங்குகளை வெளியிடக்கூடாது என்று ஹிண்டன்பர்க் கூறியதோ, அதே எப்பிஓ பங்குகளை அதானி குழுமம் வெளியிட்டது.

20 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு. ஆனால், விற்பனை 22 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகம். அதானியை முதலீட்டாளர்கள் நம்பினர்.

நம்பிக்கையே முக்கியம்

ஆனால், ‘‘எங்கள் நிறுவனத்தின் கொள்கை ஒன்றுதான். முதலீட்டாளர்களின் நலனே முக்கியம். மற்றவை எல்லாம் 2ம் பட்சம்தான்’’ என்று கூறி, தன் நிறுவனம் விற்ற பங்குகளைத் திரும்பப் பெற்று, முதலீட்டாளர்கள் செலுத்திய தொகையை, அவர்களது டிமேட் கணக்கு வழியாக திரும்பச் செலுத்தினார்.

அதேநேரத்தில், அதானி குழுமத்துக்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடன் கொடுத்துள்ளன என்பது போன்ற விவரங்களை தாக்கல் செய்யும்படி ஆர்பிஐ உத்தரவிட்டது. பங்குச் சந்தை நடவடிக்கைகளை கண்காணிக்கும் செபியும் களம் இறங்கியது. இதுஒருபுறம் இருக்க, பொதுத்துறை மற்றும் வணிக வங்கிகளிடம் தன் நிறுவனம் பெற்றிருந்த கடன்களில் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் தொகையை முன் கூட்டியே செலுத்திவிட்டார். இன்னும் சொல்லப்போனால், வங்கிக் கடன்களைவிட, அதானியின் சொத்து மதிப்பு அதிகம். இதனால், வங்கிகள் அடித்துப், பிடித்து வாங்கிக் கொள்ளும்.

முதலீட்டாளர்களுக்கு பீதி

அதானி குழுமத்தின் மீதான தாக்குதல், இந்தியாவின் தொழில் வளர்ச்சியின் மீதான ஒரு தாக்குதல் என்று நிச்சயமாக சொல்ல முடியும். ஒரு நிறுவனத்தின் பங்குகளில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வார்கள்.

இந்தியாவின் மேல் தாக்குதல்

இதுபோன்ற கிரிமினல் அறிக்கைகளால், இந்திய நிறுவனங்களின் மீதான மதிப்பு மெல்ல சரியும். தன்னை சரியென நிரூபிப்பதற்குள், பெரும் அளவில் இழப்பை நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். இப்படித்தான் வேதாந்தாவும் வீழ்ந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகிவிட்டனர். இப்போது அதானியின் முறை. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி சோற்றுக்கு சிங்கியடிக்கப் போவது இல்லை. ஆனால், இது சர்வதேச தொழிற்துறை சதிகளின் ஒரு பகுதியாக, இந்தியாவின் வளர்ச்சி மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் எனலாம்.

வேகமாக வளர்ந்து வரும் துறைகள்

கச்சா எண்ணை சுத்திகரிப்பு, சூரிய சக்தி மின்னாற்றல் உற்பத்தி, துறைமுகங்கள் மேம்பாடு என்று எந்தெந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதோ, அந்த நிறுவனங்கள் மீதும் எதிர்காலத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கலாம். இதனால், துறைமுக வளர்ச்சி, மேம்பாடு, சூரிய மின்னாற்றல் உற்பத்தி ஸ்தம்பிக்கும். இதனால், 2030ம் ஆண்டில் 275 கிகாவாட்மின் உற்பத்தி என்ற இலக்கை எட்டுவதை, இந்தியாவுக்கு தாமதம் செய்யமுடியும். இதுபோன்ற பொருளாதார வளர்ச்சிகளை பின்னுக்குத் தள்ளுவதற்கான ஒவ்வொரு செயலையும் திட்மிட்டு செய்ய முடியும்.

ஹர்ஷத் மேத்தா ஊழல்

இந்தியாவின் பங்குச் சந்தையில் அதானி மோசடி செய்துவிட்டார் என்று இப்போது காங்கிரஸ், திமுகவினர் கூறிக் கொண்டிருப்பதை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி? நமது நாட்டின் வரலாற்றில் இதைவிட, மிக மோசமான ஊழல்கள் நடந்துள்ளன. 1992ம் ஆண்டில் மும்பை பங்குச் சந்தையை உலுக்கிய ஹர்ஷத்மேத்தா பங்குச் சந்தை ஊழல், சுதந்திர இந்தியா கண்டிதராத ஒன்றாகும்.

6 லட்சம் கோடி

அன்றைய பண மதிப்பில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஹர்ஷத்மேத்தா சூறையாடினார். பங்குகளை தான் வாங்கியுள்ளதாக போலி டாக்குமென்ட்கள் தயாரித்து, வங்கிகளில் கடன் பெற்று சூரையாடினார். இத்தனைக்கும் அவர் பங்குச் சந்தையின் தரகர் மட்டுமே. நிறுவனத்தின் உரிமையாளர் அல்ல. ஒரு தரகரே இந்தளவுக்கு அடித்து ஆடி, பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையிட்டது நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில்தான். இன்றைய தேதியில் அதன் பண மதிப்பை ஒப்பீட்டால், அது 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை.

தமிழக அரசியல்வாதி யார்?

அதேபோல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2007 -08ம் ஆண்டு இந்திய பங்குச் சந்தை ஒரு மாபெரும் சரிவை சந்தித்தது. அப்போதைக்கு பங்கு சந்தையின் வர்த்தகப் புள்ளிகள் 12,500 முதல் 13 ஆயிரத்துக்குள் இருந்தது. அப்போதே 650 புள்ளிகள் வரை சரிந்தது. பல லட்சம் கோடி இழப்பால் முதலீட்டாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தக் காலகட்டத்தில், சரிந்த பங்குகளை வாங்கியது, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி என்பதும், சந்தை உயர்ந்தபோது, அதே பங்குகளை விற்று பல ஆயிரம் கோடி லாபம் பார்த்தார் என்பதும் வரலாறு. இந்த முறை அதானி வழியாக, இந்தத் தொழிற்துறைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதானி மட்டுமே இந்திய தொழிற்துறை அல்ல. அதேநேரத்தில், பீஷ்மரை வீழ்த்துவதற்காக சிகண்டி வழியாக முதல் அம்பு எய்யப்பட்டது, மகாபாரதம் நமக்குச் சொல்லும் பாடம். தொடர்ந்து பல அம்புகள் வரலாம். பல்வேறு ரூபங்களில் வரலாம்.