துணிகள் சாயம் போகாமல் தடுக்க…

எவ்வளவு தான் நிறைய காசு கொடுத்து தரமான துணிகளை வாங்கினாலும் சில வண்ணங்களில் இருக்கும் துணிகள் சாயம் போகத்தான் செய்யும். சில துணிகள் ஒரு முறை தண்ணீரில் நனைக்கும் போது மட்டும் சாயம் போகும். பிறகு சாயம் போகாது. ஆனால் சில துணிகள் காலத்திற்கும் துவைக்க துவைக்க சாயம் போய்க் கொண்டே இருக்கும். வெளுத்துப் போய்க் கொண்டே இருக்கும்.

என்ன செய்யலாம்

ஒரு பக்கெட்டில் இரண்டு அல்லது மூன்று லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் சில ஐஸ் க்யூப் களை போட வேண்டும். இல்லையென்றால் ஐஸ் வாட்டர் கூட ஊற்றிக் கொள்ளலாம்.

குளிர்ந்த மூன்று லிட்டர் அளவு தண்ணீரில், 2 டேபிள் ஸ்பூன் வினிகர், 1 கைப்பிடி அளவு உப்பு இந்த இரண்டு பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து, சாயம் போகும் துணியை அதில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு மணி நேரம் ஊற வைக்கும்போதே உங்களுக்கு அதிலிருந்து பெருசாக சாயம் போகாது. (கல் உப்பு, தூள் உப்பு எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.)

காய வைக்கவும்

இப்படி இந்த தண்ணீரில் ஊறவைத்த துணியை ஒரு மணி நேரம் கழித்து எடுத்து நன்றாக பிழிந்து வெயிலில் காய வைப்பது சிறப்பு. முடியாது என்பவர்கள் வீட்டுக்குள்ளேயும் காய வைத்துக் கொள்ளலாம். இப்படி காய வைத்த துணியை எடுத்து ஒரு முறை இஸ்திரி பண்ணி விட்டால் போதும். சூப்பராக அந்த வண்ணம் அந்த துணியிலேயே நன்றாக ஒட்டிக்கொள்ளும்.
மீண்டும் சாயம் போகவே போகாது. பெரும்பாலும் உள்பாவாடைகளை எல்லாம் நாம் அயன் பண்ண மாட்டோம். அதனால் அயன் பண்ண வில்லை என்றாலும் சரி. முடிந்தால், உள்பாவாடையாக இருந்தாலும் ஒரே ஒரு முறை இந்த தண்ணீரில் நனைத்து, காய வைத்த பின்பு ஒரு முறை சிரமப்படாமல் அயன் செய்து விட்டால் காலத்திற்கும் அந்த துணியில் இருந்து சாயம் போகாது.

எலுமிச்சை சாறு

ஒருவேளை உங்களுடைய வீட்டில் வினிகர் இல்லை எனும் பட்சத்தில் வினிகளுக்கு பதிலாக எலுமிச்சை பழச்சாறு பயன்படுத்தலாம். ஏற்கனவே சாதாரணமாக துவைத்த துணியில் மீண்டும் மீண்டும் சாயம் போய்க் கொண்டே இருக்கிறது என்றாலும் அந்த துணிகளை இந்த முறையில் ஒரு முறை தண்ணீரில் போட்டு ஊற வைத்து பாருங்கள். நிச்சயமாக அந்த துணியிலிருந்து சாயம் மீண்டும் போவது நின்றுவிடும்.,