தமிழ்கூட சரியாக தெரியாது போடா…

தமிழ் கூட சரியாக தெரியாது… போடா…

பீகாரி, உ.பிக்காரன், அஸாம்காரன்… பானி பூரி வாயன்… பீடா வாயன்…எல்லாப் பயலுவளும் வந்து எங்க பொழப்பைக் கெடுக்கறானுவ!

அவன் என்னடா பண்ணினான்?

இந்தா இருக்கானே லக்னோக்காரன் பத்து வருசம் முன்னாடி ஒரு காஃபி டீ சமோசா விக்கற கடையில சமோசாவுக்கு மாவு பிசைஞ்சுகிட்டு, இஞ்சி டீ போட்டுகிட்டு இருந்தான்!

அந்தா நிக்கறானே பீகார்க்காரன் அவன் அஞ்சு வருசம் முன்னாடி ஐயரு நடத்தற ஹோட்டல்ல டேபிள் க்ளீன் பண்ணிகிட்டு இருந்தான்!

அதோ பாரு சப்பை மூக்கன் அசாம்காரன் அன்னபூர்ணாவுல சர்வரா மூணு மாசம் முன்னாடி சேர்ந்து இருக்கான்!”

அது சரிடா நான் ஒண்ணு சொல்றேன் கேக்கறியா? நீ சொன்ன கடைசி ஆளில் இருந்து வரேன்!

சப்பை மூக்கன்… அசாம் காரன்! அன்னபூர்ணாவுல சர்வரா மூணு மாசம் முன்னாடி சேர்ந்தவன்! போய் உட்கார்ந்து ரவா ரோஸ்ட் இருக்கான்னு கேட்டேன் – ‘ஆனியன் ரவாவா சாதா ரவா ரோஸ்டா சார்?’னு என்னை கேட்கறான்!

மூணு மாசத்துல நீ சொல்ற சப்பை மூக்கன் தமிழைக் கத்துகிட்டான்! அதுக்காக அவனை சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி எல்லாம் படிக்கச் சொல்லலை! அவன் தொழிலுக்கு என்ன தமிழ் தேவையோ அந்த அளவுக்கு தமிழ் தெரியும்!”

அந்த ஐயரு கடையில டேபிள் க்ளீன் பண்ணின பீகாரிக்கு கொஞ்சம் லாரி பஸ்ஸுக்கு எல்லாம் டயர் களட்டி பஞ்சர் மாட்டற வேலை எல்லாம் தெரியும். ஐயரு கடையில டேபிள் க்ளீன் பண்ணின நேரம் போக ராத்திரி ரோட்டோரமா பெட்ரோல் பங்கை ஒட்டி பஞ்சர் கடை போட்டான்! ராவோட ராவா ஹைவேஸ்ல போற ட்ரக்கு, டூரிஸ்டு வேனு இப்படி ஏதாவது பஞ்சராகி காத்து இறங்கி ஒதுங்கும் – இவன் உழைக்குற தினுசைப் பார்த்து பெட்ரோல் பங்கு ஓனரு ராத்திரி ஒரு நாலு அஞ்சு மணி நேரம் பெட்ரோல் பங்குல வேலை கொடுத்தாரு!

பிற்பாடு அதே பெட்ரோல் பங்க் ஓரமா ஓனராண்ட கேட்டு ஒரு வட இந்திய ஞிபிகிஙிகி போட்டான்! இவனோட தொழில் சுத்தத்தைப் பார்த்துட்டு ஹோட்டல் ஐயரும் பெட்ரோல் பங்க் நாயக்கரும் உதவி பண்ணாங்க! இன்னிக்கி தெம்பா நின்னுட்டான்! வடக்கத்திய டிரைவருங்க பலரு இவன் “தபா” வுல டிஃபனு – அப்படியே அவங்களாண்ட நாயக்கர் பெட்ரோல் பங்குல டீசல் அளவு தரம் எல்லாம் சுத்தமா இருக்கும்னு எடுத்துச் சொல்லுவான்!

ராவுக்கு 11 மணிக்கு மேலே நாயக்கர் பங்குல லாரியா கியூ கட்டி மொய்க்குது பாரு – இவனோட விசுவாசம்!

அந்தா அந்த உ.பி காரன் பானிபூரி வாயன் இல்லடா – பானி பூரி பண்றவன்! சமோசாவுக்கு மாவு பிசைஞ்சு இஞ்சி டீ போட்டுகிட்டே இரண்டு வருசத்துல பொறுப்பா 4 வருசத்துல தமிழையும் காசையும் தேத்திகிட்டான்!

அனுபவம் தந்த பலம் – சேர்த்த காசும் கத்துகிட்ட தமிழும் தந்த உரம் – சொந்தமா பானி பூரி,சமோசா, பாவ் பாஜின்னு கடை போட்டான்! நம்ம ஏரியா டெக்ஸ்டைல் கம்பெனி பெல்ட்டு – மில்லுல வேலை பாக்கறவன்ல பாதி பேரு வடக்கத்தி ஆளுங்க – கூட்டம் சும்மா அள்ளிச்சு இவன் கடையில!

மில் மேனேஜர் ஆள் அனுப்பி விட்டாரு – எங்க மில்லுல காண்டீன் எடுத்து நடத்தறியான்னு கேட்டாரு – அன்னிக்கு ஆரம்பிச்சது யோகம் அவனுக்கு! இன்னிக்கு அவனோட மாமன் மச்சான் வச்சிருக்கற காண்டீன்தான் நம்ம ஏரியாவுல நாலு மில்லுல!

அதுசரி ப்ரதர் நீ என்னா பண்றே?
எத்தனை பாஷை தெரியும் உனக்கு?

தமிலு கொஞ்சம் வரும் தோலர்! இங்கிலீஸ் சுமாரா படிக்க வரும்!
இந்த இந்தி, மலையாளம், கன்னடம் ஏதாவது கத்துகிட்டா உபயோகமா இருக்காது?
வடக்கத்தியானே வேலை தேடி இங்கே வரான் – நீ இந்தி கத்துகிட்டு என்னா பண்ணப்போறேன்னு தலீவரு சொல்லிட்டாரு தோலர்!

அப்ப பிழைப்பு எப்படி ஓடுது?

இந்தி தெரியாது போடானு – டி சர்ட் 500 வித்துக் கொடுத்தேன்! ஒரு சட்டைக்கு 5 ரூபான்னு 2500 ரூபாய் கிடைச்சுது!

அடப்பாவி! அந்த சட்டையைப் போட்டுகிட்டு போஸ் கொடுத்த நடிகனுங்க நடிகைங்க சிலரு இந்தி சினிமால நடிக்கறாங்க – இந்தி பேசுவாங்க தெரியுமா உனக்கு?

அப்படிங்களா? பகுதி செயலாளர் எதுவும் சொல்லலீங்களே?

அது போவட்டும்! மீதி நேரத்துல என்ன செய்வே?

என்னங்க அப்படிக் கேட்டுட்டீங்க – ரொம்ப பிஸிங்க நானு! …. நடிகரு கீறாரே, அவரோட ரசிகர் மன்றத்துக்கு வட்டாரத் தலைவருங்க நானு! படம் ரிலீஸ் ஆவுற அன்னிக்கு படப்பொட்டியை ஊர்வலம் விடறது, கட் அவுட்டுக்கு பாலபிசேகம் பண்றது, ரசிகர் மன்ற கோட்டா வுல தியேட்டர்காரன் கிட்ட பேசி பல்க் டிக்கெட் ஃப்ரீயா வாங்கறது, அதை வித்து மன்றத்துக்கு நிதி சேர்க்கறது- .. ரொம்ப பிசிங்க நானு!”

பேஷ்! வேற ஏதாவது தொழில்…?

தொலில் என்னங்க தொலில்! மொலியைப் பாதுகாக்கணும்! இனத்தைப் பாதுகாக்கணும்! இதுதாங்க முளுநேர தொலில்! தலீவர் பிறந்த நாளன்னிக்கு போஸ்டர் ஊர் முளுக்க “வால்த்துகிறோம்” பாத்துருப்பீங்களே! அதுல பதினெட்டாவதா ஓரமா இருக்கற மூஞ்சி என்னுதுதான்!”

மேல சொல்லு!
சுவாரஸ்யமா இருக்கு

அப்பப்ப வர்சா வருசம் மொலியைக் காக்க மொலிப்போராட்டம் – தலீவரு அறிக்கை விடுவாரு – அப்ப தார் டின்னை எடுத்துகிட்டு ரயில்வே டேசன், தபால் ஆபீசு, மைல் கல்லு இங்கெல்லாம் இந்தி எலுத்த தார் பூசி அலிக்கணும்க! மூணு தலைமுறையா எங்க குடும்பம் மொலிப்போர் குடும்பம் தெரியுமா?

அப்ப மூணு தலைமுறையா இதே வேலைதானா? முன்னேறவே மாட்டீங்களாடா?

ஏன் முன்னேறலை? எங்க பாட்டன் தார் டின்னோட ஏணி மேலே ஏறின பின்னாடி கீள நிக்கறவன்கிட்ட – ‘இதுல எது இந்தி எலுத்து?’ – னு கேட்டு தார் பூசினான்! நான் நானே எது இந்தின்னு தெரிஞ்சு பூசறேன்! இது முன்னேற்றம் இல்லியா?

அப்ப வேற எந்த பாசையும் படிக்க மாட்டே? தகுதியை வளர்த்துக்க மாட்டே?

“தகுதி திறமை எல்லாம் மேல்சாதி ஆரிய சூல்ச்சிண்ணே! தகுதியாவது திறமையாவது வெங்காயம்னு நம்ம பெரியார் சொல்லிட்டார்ணே! அதுமட்டுமில்லண்ணே!”

என்னடா மேல சொல்லு

நாம இந்தி கத்துகிட்டா ஆரியனுங்க நம்ம தலை மேல ஏறி குந்திகிடுவாங்கண்ணே! இதையெல்லாம் எடுத்துச் சொல்ல நம்ம இயக்கம் மட்டும் இல்லேன்னாக்க…
“நீ மூணாவது தலைமுறையா கட்சிக்கு போஸ்டர் ஒட்டிகினு – நடிகன் கட் அவுட்டுக்கு பால் ஊத்திகிட்டு இருக்க மாட்டே! போடா போ!

நன்றி: முரளிசீதாரமன்