சுகி சிவமே! இப்படி சொன்னா எப்படி?

“ஏன்டா நேற்றைக்கு முருகனும் சுப்ரமணியனும்“ ஒன்றுனு சொன்னியாமே?”

ஆமா! சொன்னேன் அதுக்கு
என்ன இப்போ?

ஆகச்சிறந்த ஆன்மீகவாதியான
சுகிசிவமே முருகன் வேறு சுப்ரமணியன் வேறுனு சொன்ன பிறகு இருவரும் ஒன்றுனு நீ எப்படி சொல்லலாம்?

என்ன அருண கிரிநாதரா?

உங்க ஐயா என்ன 500 ஆண்டுகளுக்கு முன்பே ஆகச்சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதரே முருகனை சுப்ரமணியன் என்று அழைக்கும்போது நேற்று வந்த சுகி சிவம் சொல்லிட்டா நாங்கள் அதை மாத்திக்கணுமா? போவியா அங்குட்டு

என்ன? அருணகிரிநாதர் முருகனை சுப்ரமணியன் என்றாரா?
என்னடா உளறுற?

ஆமாடா அருணகிரிநாதர் முருகனை சுப்ரமணியன் என்று பாடுகிறார். அதாவது,
“அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை – இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் – பெருமாளே”

திருப்புகழ் (அருணகிரிநாதர்)

திருப்புகழில் இப்படி ஒரு வரியே இல்ல ப்ரோ! இது ஆரிய பார்ப்பனர்கள் இடைல சொருகிருப்பாங்க ப்ரோ!

ஓ.! அப்படியா சங்கதி? சரி வேற யாரு சொன்னா ஏத்துக்குவ ப்ரோ?

1000 ஆண்டுகளுக்கு முன்பு எதாவது இலக்கியங்களில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருந்தால் சொல்லுங்க ப்ரோ!

திருப்புகழ், தேவாரம் சொன்னா ஏத்துப்பீங்களா??

தேவாரத் திருப்பதிகங்கள் முருகனை சுப்ரமணியன் என்று எங்காவது குறிப்பிட்டால் நம்புவியா ப்ரோ?

அதுல என்ன சந்தேகம்?

திருமுறைகள் தமிழர்களால் எழுதப்பட்டது. ஆக முருகனை சுப்ரமணியன் என்று அழைக்க வாய்ப்பே இல்லை. கதை விடாதடா ..

“கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன் காவனற்சேனை யென்னக்காப் பவன்என் பொன்னைமே கலைகவர் வானே தேவினற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயி லூருஞ்
சுப்பிர மண்ணியன் றானே”

ஒன்பதாம் திருமுறை.
ஆத்தீ (சரி சமாளிப்போம்)

ஏன் இதுகூட இடைச்செருகலா இருக்க கூடாதா??? ப்ரோ

கல்வெட்டு ஆதாரம் உண்டா?

ஏன்டா வௌக்கெண்ண திருப்புகழை ஏற்கமாட்டேன்னு சொல்ற. திருமுறைகளையும் ஏற்கமாட்டேன்னு சொல்ற நீ சுகி சிவமும் இந்த நாத்திக கும்பல்களும் சொன்னால் மட்டும் நம்புற யாரடா நீ?

ஏன்டா இரண்டு நூல்களை படிச்சிட்டு வந்து ப்லிம் காட்டுறியா??? இதெல்லாம் பிற்காலத்தில் ஆரியர்கள் திருத்தி எழுதியது. உன்னால் முடிந்தால் இதே காலத்தில் வெட்டப்பட்ட எதாவது கல்வெட்டுகளில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருந்தால் காட்டு பார்க்கலாம்.

சரிடா. கல்வெட்டுகளில் முருகனை சுப்ரமணியன் என்று அழைத்திருப்பதாகக் காட்டிவிட்டால் என்ன பண்ணுவ???

அது வந்து முருகன் வேறு சுப்ரமணியன் வேறு என்று பிரிவினை பேசுபவர்களை கல்லால் அடிக்கிறேன் சார்…

(ஒருவேளை காட்டிருவானோ)

எனில் உன்னை நீயே அடிச்சிக்க தயாராக இருந்துக்க ப்ரோ

திருச் செந்தூர் முருகன் கோயிலில்…

9 ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூர் முருகன் கோவில் முகப்பில் வரகுண பாண்டியனால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. 205 வரிகள் கொண்ட இந்த கல்வெட்டில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விழாக்கள் நடத்தவும், அமுது படையலுக்கும் நிவந்தமாக 1400 பொற்காசுகளை முதலீடாக வைத்து அதில் வரும் வட்டியைக் கொண்டு வருடம் தவறாமல் விழாக்கள் நடத்துவது தொடர்பான வழிமுறைகளையும் கூறும் மிக நீளமான கல்வெட்டு இது. இந்த கல்வெட்டின் மூன்றாவது வரியில் “சுப்பிரமணிய படாராருக்கு” என்று வெட்டப்பட்டுள்ளது. அனேகமாக முருகனை சுப்ரமணியன் என்று அழைக்கும் காலத்தால் மிக மூத்த கல்வெட்டு இதுவாகத்தான் இருக்கும். இந்த கல்வெட்டானது “South Indian Inscription Volume 14” ல் தொகுக்கப்பட்டுள்ளது. உனக்கு வேணும்னா இது உண்மையா பொய்யானு தேடி படிச்சுக்க.!

ஆத்தி! என்ன செய்யறது இப்ப?

இதை எனக்கு தெரிந்த ஆய்வாளர் ஒருவரிடம் காட்டி உறுதிபடுத்திவிட்டு நாளைக்கு வரவா ப்ரோ?

திருப்பி வராமே!!!

நீ உறுதிபடுத்திக்க ப்ரோ. ஆனால் நாளைக்கு இந்த பக்கமா வந்துராத. இதுபோன்ற பிரிவினைவாதங்களை நக்கீரர், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற மகான்களே வைக்காதபோது சுகி சிவமும் உங்களைப்போன்ற சில ஞானிகளும் வைத்துவிட்டால் நாங்களும் பிரிவினை பேசணுமா.?

கௌம்புங்க கௌம்புங்க காத்து வரட்டும். எங்களுக்கு சுப்ரமண்யனும் ஒன்றுதான் சரவணனும் ஒன்றுதான்.

இந்துவன்